Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
குறள் தோட்டம்
நடராஜன் கல்பட்டு



அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகப்பர் சொல் இழுக்குப் பட்டு

இந்த இரு குறள்களுமே மனிதனுக்கு அடக்கம், அது நாவடக்கமாக இருக்கட்டும் அல்லது மன அடக்கமாக இருக்கட்டும், எவ்ளவு அவசியம் என்பதை அழகாகச் சுருக்கமாகச் சொல்லுகின்றன.

இந்தக் கதையைப் பாருங்கள், நாவடக்கம் இன்மையால் என்ன ஏற்படுகிறது ஒரு தவளைக்கு என்பதை.

மாரிக்காலம் வந்திடவே
ஏரி குளம் எங்கும் தண்ணீர்
கல்மேல் அமர்ந்தே கத்தியதோர் தவளை
“நானே ராஜா எனதே நாடு” என்றே முழங்க

உழவருக்கோர் ஆணை யிதோ
“ஏர் கட் மாட் ஓட்... ஏர் கட் மாட் ஓட்”
என்றதாம் தவளை தன் அரியணை மீதமர்ந்து
பன்னிரு தவளைகட்கு தானே கணவன்
ஆயிரம் தவளைகட்கு தானே தந்தை யென்னுமிறு மாப்புடனே

வானில் பறந்த பருந்தொன்று
வீணில் கத்திய தவளைதனை
கவ்விச் சென்றது கதறக் கதற
தண்ணீருள்ளோ எண்ணற்ற தவளைகள்
கஷ்டம் ஏதும் துளியு மின்றி

கண்ட மனம் கேட்ட கேள்வி:

இதைத்தான் சொன்னானோ வள்ளுவன் அன்று

“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்” என்று?

நடராஜன் கல்பட்டு

மழலைகள் ஆசிரியர் குழு



             




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants