குறள் தோட்டம்
முத்து
குறளோவியம் - அறத்துப்பால்
8. அன்புடமை
அன்பு இவ்வுலகில் பல்வேறு பரிமாணங்களில் பரந்து விரிந்து கிடக்கிறது. அன்பே சிவம், அன்பே மனைவி, அன்பே அன்னை, அன்பே நண்பன். எங்கு பார்த்தாலும் அன்பு. இறைவனிடம் காட்டும் அன்பு பக்தி. மனைவியிடம் காட்டும் அன்பு காதல். அன்னையிடம் காட்டும் அன்பும், பிள்ளைகளிடம் காட்டும் அன்பும் பாசம். நண்பனிடம் காட்டும் அன்பு நட்பு. ஏழையிடம் காட்டும் அன்பு பரிவு. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவரைப் பார்த்தவுடன் நம் மனதில் எழும் ஓர் உணர்ச்சிதான் அன்பு. இது தன்னாலேயே வரும். இதை அடைத்து வைக்கும் தாழ்ப்பாளும் கிடையாது என்று கூறுகிறார் வள்ளுவர்:
புன்கண்நீர் பூசல் தரும்.
அன்பை அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? (இல்லை). அன்புடையவரின் சிறு கண்ணீரே அவர் கொண்டிருக்கும் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்தும். பக்தியோ, பாசமோ, நட்போ, காதலோ எது இகுந்தாலும் கண்ணிலிருந்து நீர் சுரக்கும். இது ஆன்ந்தக் கண்ணீர். இது இயற்கையில் அன்புடையோரிட்த்தில் நிகழும் சாதாரண நிகழ்ச்சி. இதைத்தான் ஒரு சிவனடியாரான திருஞான சம்பந்தர், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்று சிவனிடம் கதறுகிறார்.
அன்பில்லாதவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? என்று வள்ளுவரைக் கேட்டால், அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பில்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கு உரிமையாகக் கொண்டு வாழ்வர். அன்புடையவர் தமது உடலையும் பிறருக்கு உரிமையாக்கி வாழ்வர், என்று கூறுகிறார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறை கங்கையில் ஸ்நானம் செய்து கொண்டிருக்கும்போது கரையிலிருந்த ஓர் அரச மரக் கிளையிலிருந்து ஒரு தேள் கங்கை நீரில் தவறி விழுந்துவிட்ட்து. அப்படியே த்த்தளித்த வண்ணம் மிதந்து ராமகிருஷ்ணரிடம் வந்தது. அது துடிப்பதைக் கண்ட ராம கிருஷ்ணர் அதைக் கையில் ஏந்திக் கரையில் விடப் போகும்போது அவர் கையில் கொட்டிவிட்ட்து. வலி தாங்காமல் கையை உதறிய ராமகிருஷ்ணர் தண்ணீரில் விழுந்த தேளை மீண்டும் எடுத்துக் கரையோரம் வந்து விட்டார். மறுபடியும் அந்தத் தேள் கொட்டியது. இதைக் கரையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த ஒருவன், "யோவ், பெரிசு, அதான் அந்தத் தேளு உன்னை மறுபடி, மறுபடி கொட்டிக்கிட்டே இருக்குதே, அதைப் பேசாம விடமாட்டியா? அது செத்தா சாவட்டுமேய்யா" என்று பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கே பொறுமை இழந்து சொன்னான். உடனே அன்புக்காகவே வாழ்ந்து எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணும் அவர் கூறினார், "அப்பா, தேளின் குணம் கொட்டுவது. அது உயிர்போகும் நிலையிலும் தன் குணத்தை மாற்றாமல் கொட்டிக்கொண்டிருந்தது. அன்பையே தர்ம்மாக்க் கொண்டு வாழும் நான் மட்டும் ஏன் என் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்?" என்று கூறிய படியே அந்த்த் தேளைக் கரையேற்றினார். ஆக தன் உடல் வேதனையையும் மதிக்காமல் உதவியவர் அந்த உடலை ஒரு தேளுக்கே உரிமையாக்கி விட்டார்.
இதுபோல்தான் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி மன்ன்ன் என்பதை நாம் எல்லோரும் அறிவோமல்லவா?
அன்பு என்று வந்துவிட்டால் அன்புடை நெஞ்சங்கள் துன்பத்தின் எல்லைக்கே போனாலும் அன்பைக் கைவிட மாட்டார்கள் என்று உறுதியாக்க் கூறுகிறார் வள்ளுவர். எனவேதான்,
என்புதோல் போர்த்த உடம்பு.
அதாவது அன்பு வழியில் இயங்கும் உடலே உயிருள்ள உடலாகும், அன்பு இல்லாதவருக்கு இருக்கும் உடம்பு எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பே ஆகும், என்கிறார்.
எல்லார் உடம்பும் எலும்பைத் தோலால் போற்றியதுதான் என்றும் அதுவும் உயிருள்ள உடம்புதான் என்றும் சொல்வதுபோல் கேட்கிறதே! இந்த நிலையில் உறுதிப்படுத்த வேண்டியது என்னவென்றால் மென்மையான பசுவின் தோல் போன்றதா அல்லது எருமைத் தோல் போல "ஸ்ட்ராங்கான" தோலா என்பதுதான் கேள்வி.
.....மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














