குறள் தோட்டம்
முத்து
குறளோவியம் - அறத்துப்பால்
7. மக்கட் பேறு
நமது 18க்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் எல்லாம் வாழ்க்கை இலக்கணத்தைக் கூறுவதற்கே எழுதப்பட்டவை. இவற்றுள் பத்து உபநிஷத்துக்கள் ஈஸா உபநிஷத், காதோ உபநிஷத், ப்ரஸன்னோபநிஷத், முண்டக உபநிஷத், மாண்டுக்ய உபநிஷத், தைத்ரிய உபநிஷத், ஆத்ரேயோபநிஷத், ச்சண்டோக்ய உபநிஷத் மற்றும் ப்ருஹுதாரண்யக உபநிஷத் என்றவற்றிற்கு நம் ஆதி குரு சங்கர பகவத் பாதாள் பாஷ்யமே எழுதியுள்ளார்.
இது தவிர க்ருஷியைப்பற்றி எழுதப்பட்ட உபநிஷத்தில் ஒரு செடியின் விதை எப்படி இருக்க வேண்டும், எந்த விதை எந்த மண்ணில் நன்றாக விளையும், எந்த விதைகளை எப்போது நட வேண்டும், எவ்வளவு தண்ணீர் எவ்வெப்பொழுது விட வேண்டும், எப்போது பயிரை அறுவடை செய்ய வேண்ட்டும் என்றெல்லாம் விவரமாக நமக்குத் தரப்படுகிறது. அது போல் எந்தெந்தத் திதிகளில் ஆண், பெண் புணர்ச்சி கொண்டால் எப்படிப்பட்ட சந்தானம் உண்டாகும் என்று ஒரு உபநிஷத்தும், நாம் என்னென்ன, எவ்வளவு அளவு, எப்போது சாப்பிட வேண்டும் என்று உபநிஷத்தும், நாம் இறந்த பிறகு என்னவாகிறது என்பதற்கு ஒரு உபநிஷதுமாக இப்படிப் பல உபநிஷத்துக்கள் நம் ஸாஸ்த்திரங்களில் எழுதப்பட்டுள்ளன.
எனவே நம் சந்ததிகள், மகப்பேறு ஏன் விதவிதமாகப் பிறக்கின்றன என்பதற்கு இப்போது ஓரளவு காரணம் தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன்.
ஆனால் இந்த அதிகாரத்தில் திருவள்ளுவர் நமக்கு உரைப்பது நமக்கு எப்படிப்பட்ட சந்தானங்கள், மகப்பேறு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதை மட்டும் கோடியிட்டுக் காட்டுகிறார்.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்று யேசுதாஸ் அவர்களின் தேமதுரக் குரலில் ஒலிக்கும் ஒரு திரைப்படப் பாடல் உண்டு. அதை இங்கு நினைவகூற விரும்புகிறேன்.
இந்தப் பிறவியில் மட்டுமல்ல எழுபிறவியிலும் நமக்கு என்ன வேண்டும்? இதைத் வள்ளுவர் வாக்காலேயே கேட்போமே!
பண்புடை மக்கட் பெறின்
பழியில்லாத நற்பண்புள்ள குழந்தைகளை ஒருவன் பெற்றால், அவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைகளின் பயனாகிய துன்பங்கள் வந்து சேரா.
இப்படி ஏழேழு ஜென்மத்திற்கும் இன்பம் நல்கும் குழந்தை நமக்குப் பிறந்தால் அதற்கு நன்றிக்கடனாக ஒரு தந்தை என்ன செய்ய வேண்டுமாம்?
முந்தி இருப்பச் செயல்.
ஒரு தந்தை தனது மகனுக்குச் செய்யும்படியான உதவி, சுற்ற்றிந்தோர் சபையில் மகன் முன்னால் இருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
இதற்கு மாறாக அந்தக் குழந்தை தன் பெற்றோர்க்கு நன்றிக் கடனாக என்ன செய்ய வேண்டும்? அதையும் இங்கு அந்த எல்லாமறிந்த மாமுனி திருவள்ளுவரே கூறிவிட்டார்:
என்னோற்றான் கொல் எனுஞ்சொல்.
ஒரு மகன் தனது தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு, "இவனுடைய தந்தை இவனை மகனாய்ப் பெறுவதற்கு என்ன தவம் செய்தாரோ?" என்று பிறர் புகந்து கூறும் சொல்லாகும்.
அந்தக் குறுமுனிக்கு அப்பவே தெரிந்துவிட்ட்து. பிற்காலத்தில் GIVE AND TAKE POLICY தான் நிலவப்போகிறது, அதை இப்பவே எழுதிவிடுவோமே என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எழுதிவிட்டுப் போய்விட்டார். அதனால்தான் அவரை முக்காலமும் உணர்ந்த முனிவர், தெய்வப்புலவர் என்று அழைக்கிறோம்.
ஒரு அன்னைக்கு ப்ரஸவம் என்பது மறுபிறப்பு. அதுவும் அப்போதெல்லாம் அறிவியல் இவ்வளவு முன்னேறிய காலமில்லை. வயிற்றில் குழந்தையில் தலை இடம் மாறி விட்டாலோ, தொப்புள்கொடி சுருண்டு சிக்கிக்கொண்டாலோ அந்த அன்னை ப்ரஸவத்தின்போது துடிக்கும் துடிப்பிருக்கிறதே, அதைச் சொல்லி மாளாது. அனுபவிக்கும் தாய்க் குலத்துக்குத்தான் அது தெரியும். வள்ளுவர் சொல்கிறார், இப்பேர்ப்பட்ட மரணவலியும் அந்தக் குழந்தை பிறந்தவுடன் போய்விடுமாம் அந்தப் பிள்ளை பிறந்தவுடன் வலி போய்விடும். தாய் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கிவிடுவாள். அதிலும் அக்குழந்தை சான்றோனாக இப்பூமியில் திகழும்போது அதைவிட ரெட்டிப்பு மகிழ்ச்சி கொள்வாளாம். எப்படி?
சான்றோன் எனக்கேட்ட தாய்.
எவ்வளவு அனுபவித்து எழுதியுள்ளார் வள்ளுவர். அதனால்தான் இடைக்காடர், "கடுகைத்துளைத்து எழுகடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று புகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.
.....மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














