குறள் தோட்டம்
முத்து
குறளோவியம் - அறத்துப்பால்
5. இல்வாழ்க்கை"நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்". ஆஹா! கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இல்வாழ்க்கை எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இத்தலைப்பை விளக்குவது.
திருவள்ளுவர் எவ்வளவு அழகாக இந்த அதிகாரத்துக்குத் தலைப்புக் கொடுத்துள்ளார் பார்த்தீர்களா? வாழ்க்கை என்று மொட்டையாகக் கூறிவிட்டால் மனித வாழ்க்கையும், மிருக வாழ்க்கையும் ஒன்றாகிவிடும். மனிதன் மட்டும்தான் இல்லத்திலிருந்துகொண்டு வாழ்க்கை வாழ்கிறான், வாழ்க்கையை நட்த்துகிறான். இல் என்றால் இல்லம், இல்லம் என்பது வீடு. இதை நாம் எல்லோருமே அறிவோம். இவ்வுலகில் நாம் வாழ்வதும் வீடுதான். மேலுலகைக் குறிக்கும்போதும் அதையும் வீடு என்றுதான் குறிப்பிடுகிறோம். அப்படி ஒன்றாக்கிக் கூறும்போது இங்கு நாம் வாழும் வீட்டின் பெருமையை உணர முடிகிறது இல்லையா? அதனால் தான், "நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்" என்று ஆரம்பத்தில் தொடங்கினேன்.
இப்போது இல்லத்தின் நிலை என்ன?
"டார்லிங், ஈவினிங் சந்திப்போம்" இப்படிச் சொல்லிவிட்டு மனைவி ஒரு புறம் தன் அலுவலகம் செல்வாள், கணவன் மறுபுறம் தன் அலுவலகம் நோக்கிச் செல்வான். குழந்தை காலையிலேயே பள்ளிக்கூடம் போயிருக்கும். காலை சுமார் ஒன்பது மணிமுதல் மாலை சுமார் 6.30 அல்லது ஏழு மணி வரை இல்லம் பூட்டியிருக்கும். வாழ்க்கை வேறு எங்கேயோ தொடரும். இதான் இப்போதைய இல்-வாழ்க்கை. இல் என்றால் இல்லை என்று ஒரு பொருளுமுண்டு. அப்படியென்றால் ஒற்றுமை இல்லை, நிம்மதி இல்லை, சுகம் இல்லை, சந்தோஷமில்லை - இது தான் இல்-வாழ்க்கை.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன், அறத்தின் இயல்பை உடைய மற்ற மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான்.
இங்கு மற்ற மூவர் என்று யாரைக் குறிக்கிறார்? மனைவி, பிள்ளை, பெற்றோர் இந்த மூவரையும்தான். மகன் 25-30 வயதைக் கடந்துவிட்டால் மணமாகி, மகப்பேறு பெற்று, அவன் பெற்றோர் மூப்பாகி அவன் அரவணைப்பில் வந்துவிடுகிறார்கள். இவர்களைக் கொண்டு வீட்டில் வாழும் வாழ்க்கைதான் இல்வாழ்க்கை. இல்வாழ்க்கை என்பது ஒரு அறம். அதுதான் இல்லறம். துறவற வாழ்க்கையும் ஒரு அறம், அது துறவறம். எல்லாவற்றையும் துறந்து வாழ்வது துறவறம். எல்லோரையும் அரவணைத்து வாழ்வது இல்லறம் அல்லது இல்வாழ்க்கை. ஆனால் வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்,
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்.
ஒருவன் தன் இல்வாழ்க்கையை அறநெறியில் நட்த்துவான் ஆனால், அவன் வேறு வழியில் சென்று பெறத்தக்கது என்ன உள்ளது? (எதுவும் இல்லை) என்கிறார். இந்த இல்வாழ்க்கைத் தவத்தை அறவழியில் செய்தால் போதும். வேறு தவநெறி எதுவும் தேவையில்லை என்று ஆணித்தரமாக்க் கூறுகிறார் எல்லாமறிந்த அந்தக் குறுமுனி திருவள்ளுவர். மீண்டும் இதை வலியுறுத்தும் வகையில் அமைந்த்துதான் அடுத்து வரும் குறளும்,
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
பிறரையும் அறவழியில் செல்லச் செய்து, தானும் அறவழயில் நட்த்தும் இல்வாழ்க்கை, தவம் செய்பவரை விட மிக்க மேன்மை படைத்த வாழ்க்கையாகும் என்று கூறுகிறது.
பணம் இந்த பூமியில் வாழ அவசியம்தான். ஆனால் அது உன் வாழ்க்கையை விலை கொடுத்துப் பெற வேண்டிய ஒன்றல்ல. ஆகையால் இவ்வுலகில் நாம் இருக்கும் வரை உற்றார் உறவினருடன் ஒன்றுகூடி வாழ்ந்து, பிறரை நம் அன்பால் கவர்ந்து வாழ்வொமேயானால் அந்த வீட்டிலும் (ஸ்வர்க்கத்திலும்) நமக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது உறுதி, நண்பர்களே.
.....மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














