குறள் தோட்டம்
முத்து
குறளோவியம் - அறத்துப்பால்
4. அறன் வலியுறுத்தல்ஔவைப்பாட்டி முதன் முதலில் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது "அறஞ்செய விரும்பு". "தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்" என்பது இப்போது கண்ணதாசன் எழுதிவிட்டுப் போனது. ஆக அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை அறிவுறுத்தப்படுவது அறன். பிறருக்குக் கொடுப்பதுதான் அறமா? இல்லை, நல் ஒழுக்கத்தோடு, பிறருக்கு அன்புகாட்டி வாழ்ந்தாலும் அதுவும் அறந்தான். இதைத்தான் வள்ளுவரும்,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இந்த நான்கு குற்றங்களையும் கடிந்து நீக்கி, இடைவிடாமல் நட்த்தப்படுவதே அறமாகும், என்கிறார்.
அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா, அவ
ஆத்துக்கார்ர் கொஞ்சறதைக் கேட்டேளா...
..... பொறாமை
உனக்காக எல்லாம் உனக்காக இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ...
.... ஆசை
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்க..
... கோபம், செருக்கு
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா
இல்லை, நீதான் ஒரு மிருகம் ..
... இன்னாச்சொல்
இந்தக் காலத்திலே திரைப்படங்கள் மனிதனைப் பாதித்ததுபோல வேறெதுவும் ஒருவரைப் பாதித்த்தில்லை. அதனால்தான் அதே பாணியில் விளக்கம் கொடுத்தேன். இந்தக் காலத்திலே திருவள்ளுவர் இருந்தால் அவரையும் ஒரு பட்த்திலே புக் பண்ணியிருப்பார்கள். இப்படி அறன் வலியுறுத்தல் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு கோணத்திலும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது, வலியுறுத்தப் படுகிறது.
எனவே அறம் என்பது நமக்கு நல்லதை மட்டும்தான் கொடுக்கும். எப்படியென்றால் வள்ளுவர் சொல்கிறார் கேளுங்கள்:
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
அறமானது சிறப்பைத் தரும், செல்வமும் தரும், அதனால் இத்தகைய அறத்தைவிடச் சிறந்த உயர்வு உயிர்க்கு வேறு யாது? (வேறு இல்லை).
எனவே நண்பர்களே, இனியாவது அறவழியில் சென்று உலகை உயர்த்துவோம்.
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
இப்போது வேண்டாம், பிற்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்காமல் நாள்தோறும் அறம் செய்ய வேண்டும் அது இறுதிக் காலத்தில் அழிவில்லாத துணையாகும் என்று அறத்தை இதுவரை செய்யாது போனாலும் இனியாவது செய் என்று கெஞ்சுகிறார் வள்ளுவர்.
செய்வோமா?
.....மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














