குறள் தோட்டம்
முத்து
குறளோவியம் - அறத்துப்பால்
3. நீத்தார் பெருமைபொதுவாக நீத்தார் என்றால் இறந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகக் கருதப்படுகிறது. நீத்தார் என்ப்து துறந்தாரைக் குறிக்கும். ஆசா பாசங்களைத் துறந்தவர் நீத்தார். இப்படி ஐம்புலங்களையும் அடக்கி வாழ்வோர் நீத்தாராவர்.
திருமூலர் கூறுகிறார்:
பார்ப்பானகத்திலே பாற்பசு வைந்துண்டு
மேய்ப்பருமின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பரு முண்டாய் வெறியு மடங்கினாற்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாய் சொரியுமே
- திருமந்திரம்
ஆகையால் இந்த ஐந்து புலங்களையுமடக்கி, அதனாலெழும் ஆசாபாசங்களைத் துறந்தால்/நீத்தால் இறைவனை நேரில் காணலாம் என நம் ஸாஸ்த்திரங்களும், பகவத் கீதையும் கூறுகின்றன.
இதைத்தான் வள்ளுவர் -
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டற்று
அதாவது ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையை அளவிட்டுக் கூறுதல் என்பது, உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக் கிடுவது போன்றதாகும், என்று கூறுகிறார்.
எனக்கு ஒரு பாட்டி இருந்தாள். அவள் ஏகாதசி விரதம் என்று ஒன்றைக் கடைபிடித்து வந்தாள். அன்று சாப்பாடு சாப்பிடக்கூடாதாம், விரதமாம். ஆனால், காலையில் ஒன்பது மணியளவில் ஆடை மேவிய பால் ஒரு ஆழாக்கு டம்ப்ளரில் குடித்து விடுவாள். மதியம் கொஞ்சம் வாழைப்பழம், கொய்யாப் பழம் ஆகியவற்றை விழுங்கிவிடுவாள். இரவும் சாப்பாடு கிடையாது. சத்துமாவு என்று வெல்லம், ஏலக்காய், தேங்காய் துருவல் போட்டு, நெய் போட்டு பிசைந்து கொடுத்து விடுவார்கள்.
மாலை கோவிலுக்குப் போவாள். "ஆமாம் உன் மாட்டுப்பெண் இன்னிக்கு எதுத்து பேசினாளாமே. உன் பிள்ளைக்கிட்டே சொல்லி கொஞ்சம் கண்டிச்சு வைக்கச் சொல்லு". இதுதான் அங்கு இறை வணக்கம்.
ஆனால் ஒன்று, சம்சார யோகத்திலிருந்து கொண்டு தவ யோகம் செய்வது கடினம்தான். அந்தக் காலத்தில் முனிவர்கள் ப்ரஹ்மச்சரிய யோகம் கடந்து, க்ருஹத்தாஸ்ரமும் மேற்கொண்டு சுவைகளுக்கு அடிமையாகாமல் கிடைத்த காய், கனிகளைக்கொண்டு இல்லறம் நட்த்தி, பிறகு தவ யோகம் செய்து முக்தி அடைந்தார்கள். ஆனால் அன்று விஞ்ஞானத்தின் தாக்கம் கிடையாது. இன்றைய உலகில் விஞ்ஞானமும், மின்சாரமும் மனிதனை சோம்பேறிகளாக்கி அவைகளுக்கு அடிமை களாகி உழலும் இவ்வுலகில் சம்சார யோகம் சற்று கடினம்தான்.
இதைத்தான் வள்ளுவர் இவ்வதிகாரத்தில்,
சுவை, ஒளி ஊறு ஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
என்று எழுதியுள்ளார். அதாவது உலகமானது, சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்று சொல்லப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் அடங்கியதாகும் என்கிறார்.
இப்போதுள்ள சூழ் நிலையில் இவ்வாறு எல்லாவற்றையும் துறந்து வாழ்வது கடினம் என்றாலும், அன்பை வளர்த்து, அறவழியிலேயே பணமீட்டி, நாணயத்துடனும், பிறர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக வாழ்ந்தாலே போதும், இவர்களே பெரியவர்கள் என்று வள்ளுவரே கூறுகிறார்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
.....மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














