குறள் தோட்டம்
முத்து
குறளோவியம் - அறத்துப்பால்
2. வான் சிறப்பு"என்ன சந்தானம் இன்னிக்கு ஆபீஸுக்குப் போகலே?"
"என்ன, விளையாடறியா" ரெண்டு நாளா மழை கொட்டோகொட்டுன்னு கொட்டுது. ரொம்ப விவஸ்த்தை கெட்ட மழையா இருக்கு. என்னிக்குத்தான் நிற்குமோ?"
"என்ன, மழையைப்போய் விவஸ்த்தை கெட்ட்து, அது, இதுன்னு திட்டறே!"
"நீ வேணும்னா இந்த மழையிலே தெருவிலேபோய் நின்னுகிட்டு அதைக் கொஞ்சு. எனக்கு இந்த மழை என்னமோ தொந்தரவுதான்."
"மழையைப்பற்றி வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா?
கெடுப்பதூஉங் கெட்டர்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
உன் பிழைப்பை வேணும்னா மழை இன்னிக்குக் கெடுக்கலாம். வயல்லே விவசாயம் பண்ற ஆளைப்போய்க்கேளு. அவரு இந்த மழையை வாழ்த்தோ வாழ்த்துன்னு வாழ்த்துவாரு. அதனாலதான் பெய்யாமல் மக்கள் வாழ்வைக் கெடுக்க வல்லது மழை. அவ்வாறு மழை இன்றி வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணை செய்து காப்பதும் மழையேயாகும் என்கிறார் வள்ளுவர்."
"அது சரிப்பா, சித்திரை-வைகாசிலே இந்த மழை கொட்ட்ட்டுமே. அப்ப அந்த வெய்யிலுக்கு இந்த மழை என்ன இதமா இருக்கும் தெரியுமா?"
"அது சரி, நீ என்ன வீட்டிலே தனியா இருக்கே? உன் செல்வ மகள் எங்கே? அவளை விட்டு ஒரு நிமிஷம்கூட பிரிஞ்சு இருக்கமாட்டியே!"
"ஏண்டா, அவளுக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டாமா? அதான் அவளை ஸ்கூலுக்கு அனுப்ப்பிச்சிருக்கேன். அவளுக்குத்தான் ஸ்கூல் பஸ் வீட்டு வாசலிலேயே வந்து நின்னு அழைத்துப் போகுமே. அதான் அவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சுட்டேன்."
"இல்லேப்பா, நீ உன் மகளை விட்டு பிரியாம எப்போதும் உன் கூடவே வச்சுக்குவியே, இப்ப என்ன ஸ்கூலுக்கு அனுப்பிச்சிருக்கே. ஒரு நாள் படிக்கலேன்னா குடியா முழுகியாப் போயிடும்?"
"ஏண்டா, நீயா இப்படிப் பேசறே? அவளை இந்த வயசிலே படிக்கவச்சு ஒழுங்கா வளத்தா தானே பெரியவளாகி ஒழுக்கமா நடந்துப்பா. இது தெரியாதா உனக்கு?"
"எனக்குத் தெரியும், உனக்குத்தான் ஒன்று புரிகிறது, மற்றொன்ற் புரிவதில்லை."
"என்னடா புரியலே எனக்கு?"
"டேய், டேய். கோப்ப்படாதேடா. இப்பதானே கொஞ்சம் முன்னாடி பெய்கிற மழை சித்திரையில் பெய்யப் படாதான்னு கேட்டே. அது மட்டும் பருவம் தப்பிப் பெய்தாலும் உனக்கு சௌகர்யமா இருக்கணும். பரவாயில்லை. ஆனா உன் பெண்மட்டும் பருவத்துக்குத் தகுந்தாமாதிரி நடக்கணும், வளரணும் இல்லே! இப்படித்தாண்டா சந்தானம், நம்மில் பலருக்கு தமக்கு மட்டும் எல்லாம் சரியா கிடைச்சா, நடந்தா போதும்னு நினைக்கிறோம். மாறாக, பெய்யும் மழைக்குத் தகுந்த மாதிரி நம்மை மாற்றிக்கொண்டு குடையோ, ரெயின் கோட்டோ போட்டுக்கொண்டு ஊரோடு ஒத்துப்போகத் தோணுவதில்லை. கொஞ்சம் மழை அதிகமா நமக்குத் தோன்றினால், மேல்மாடியில் தொட்டிகட்டி மழை நீர் சேமிக்கலாம். அங்கங்கே குளம் வெட்ட நிதி உதவி அளித்து மழை நீரைத் தேக்கி ஊருக்கே நன்மை செய்யலாம். இப்படியெல்லாம் தோன்றாமல் ஏன் மழையை மட்டும் குறை கூறுகிறோம். மழை பெய்தாலும் அவஸ்த்தை, பெய்யாவிட்டாலும் எல்லாப் பொருளுக்கும் விலையேறி அதனாலும் அவஸ்த்தை. அப்படின்னா நமக்கு என்ன தேவை, எவ்வளவு தேவைன்னு அப்பப்ப ஆண்டவனா பார்த்து அளித்துக்கொண்டிருக்க வேண்டும். அவன் கொடுக்கும்போது தேவைக்கு எடுத்துக்கொண்டு மீதியை சேமிக்க என்று தான் கற்கப்போகிறானோ இந்த சந்தானம்?"
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மழை பெய்வதாலேயே இவ்வுலகு செழிக்கிறது. எனவே மழை அனைத்து உலக உயிர்களுக்கும் அமிழ்தம் என்று உணரப்பட வேண்டியதாகும்.
.....மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














