குறள் தோட்டம்
முத்து
குறள்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளவிய கூழ்
பொருளுரை
தமது குழந்தைகளின் சிறிய கைகளால் அளையப்பெற்ற உணவு, பெற்றோருக்கு அமிழ்த்த்தை விட இனியதாகும்.விளக்கவுரை
ஒரு குழந்தை பிறந்தவுடன், மண்குடிசையில் இருப்பவன் கூடத் தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு அதற்குச் சிறந்த பாலூட்டி, தாலாட்டி வளர்த்து, அதற்கு உடல் நிலை ஏதும் பாதிக்கப்பட்டால் தூக்கிக்கொண்டு சிறந்த மருத்துவ மனைக்கு எடுத்துக்கொண்டு ஓடி, அது நலமாகும்வரை தான் ஊண் உறக்கமின்றி அதனருகிலிருந்து காத்து, இளம் வயதில் தான் படிக்கவில்லையென்றாலும் அக்குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்து, பட்டம் வாங்கி நல்ல வேலைக்குப் போகும்போது ஆன்ந்தமடைவான். பிறகு அக்குழந்தைக்கு ஒரு நல்ல வரனாய்ப் பார்த்து மணம் முடித்து வைப்பான். அவன் இல்வாழ்க்கையில் திளைக்கும்போது அவனது பெற்றோர் வயது முதிர்ந்து, முதுமை வாட்ட ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கும்போது அவனுக்குப் பெற்றோர்கள் பாரமாகி விடுகிறார்கள். அவன் இல்வாழ்க்கை சுகத்திற்கு இடையூறாக இருப்பதுபோல் எண்ணி அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டு, அவ்வப்போது தேவையான பணத்தை மட்டும் கொண்டு கட்டிவிட்டு, இவன் இன்பத்தில் திளைக்கிறானே, இந்தக் கொடுமையைத் திருவள்ளுவர் அப்போதே இதை எல்லாம் தன் மனக்கண்ணில் படமாகக் கண்டுவிட்டாரோ என்னவோ, முக்காலம் உணர்ந்த அந்த ஞானி அன்றே இப்படி ஒரு குறளை எழுதி எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார்.முதியோரில்லங்களில் வாழும் எவ்வளவு பெற்றோர் இந்த திருக்குறளைப் படிக்க நேர்ந்தால் எப்படியெல்லாம் கண் கலங்குவார்கள். ஏன் இந்த அவல நிலை இன்று?
.....மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














