குறள் தோட்டம்
முத்து
குறள்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்
பொருளுரை
ஊழின் காரணமாக ஒரு செயல் முடியாமல் போனாலும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது தரும்.தெளிவுரை
நாம் ஒன்றை அடைய முயலும்போது அந்த தெய்வமே நமக்கு ஊடழ்வினை காரணமாக அதன் பலனைக் கொடுக்க மறுத்தாலும், நம் விடாமுயற்சியினால் உடலை வருத்திச் செயல்பட்டால் அதன் பலன் கிடைக்கும் என்று இறைவனைக்கூட இரண்டாம் பட்சமாக வைத்து நம் விடா முயற்சிக்கு உத்திரவாதம் தருகிறார் வள்ளுவர்.விளக்கவுரை
திருவள்ளுவர் தெய்வப் பற்றற்றவரா? என்ற ஒரு கேள்வி எழ இங்கு வாய்ப்புள்ளது. வள்ளுவர் தெய்வப் பற்றற்றவர் என்றால் தனது திருக்குறளின் முதல் அத்யாயத்தைக் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்திருக்க மாட்டாரல்லவா? மாறாக நம் விடாமுயற்சிக்குக் கூலி கண்டிப்பாக உண்டு என்று ஆணித்தரமாகப் பறை சாற்றுகிறார்.தெளிவுரை
இதற்கு உதாரணம் காண்போம் வாருங்கள். விண்வெளியில் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களுள் ஒன்றுதான் இந்த பூமி என்பதை நாம் நன்றாக அறிவோம். இப்புவியை புவி ஈர்ப்பு சக்தி ஒன்றால் இறைவன் கட்டுப்படுத்தி ஒரு எல்லையை விண்ணில் வகுத்துள்ளான். ஒரு பொருளை பூமியிலிருந்து வீசினால் திரும்ப அது புவி ஈர்ப்புச் சக்தியால் இழுக்கப்பட்டு மீண்டும் பூமிக்கே வந்து சேருகிறதென்பதை நாமறிவோம். இருந்தும் ரைட் சகோதர்கள் எனும் இருவர் தன் மெய்வருத்தி முயன்று, இறைவனால்/இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட அந்த ஈர்ப்பு சக்தியை வலிமையிழக்கச் செய்து, ஆகாய விமானம் என்று ஒன்றைக் கண்டுபிடித்து அதை வானில் நெடுநேரம் பறக்கும்படி செய்தார்கள். ஆனால் நம் முயற்சி அதோடு நின்றுவிடாமல் மேலும் முயன்று விண்கலம் ஒன்றை உருவாக்கி, இந்தப் புவியீர்ப்பு சக்திகளையெல்லாம் தாண்டி வேறு கிரஹத்திற்கே செல்ல முயன்றுகொண்டிருக்கிறோம்.நீதியுரை
ஆக, இறைவனின் சக்தியை மீறி இப்போது மனித சக்தி செயல்படுகிறது என்றாலும் எப்படியும் இறைச்சக்தியைக் குறைத்து எடைபோட்டு விடாதீர்கள். அறிவியல் எவ்வளவுதான் முன்னேறினாலும், 'க்லோனிங்' முறையில் ஒரு உருவுக்கு அதுபோலவே மாற்றுரு காண முடிந்தாலும், 'ரோபோ' என்கிற தானியங்கியைக் கண்டுபிடித்தாலும் அவையாவும் இன்னும் மனித சக்திக்குட்பட்டுதான் இயங்கி வருகின்றன. என்றைக்கு மனிதன் அவரை விதையைப் போட்டு சுரைக்காயை விளைவிக்கிறானோ அன்றுதான் இறைவனின் சக்தி முறியடிக்கப்பட்ட்தாகக் கொள்ளவியலும். ஆகவே முக்காலும் உணர்ந்த அம்முனி வள்ளுவர் கூறியது இன்று உண்மையாக்கப்பட்ட்து இப்போது தெளிவாகிறது......மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














