குறள் தோட்டம்
முத்து
முகவுரை
வினைத்திட்பம் - செய்யும் செயலில் திடமாகவும், திட்டமிட்டும், தன்னம்பிக்கையுடனும் செயற்பட்டால், எண்ணியது எண்ணியதுபோல நடக்கும் என்பது திண்மையான வள்ளுவரின் வாக்கு. இதை என் அனுபவம் தெளிவுபடுத்தியது.என் வீட்டில் நான் மூத்த ஆண்மகன். ஒரு கிராமம், அதுவும் இருப்புப் பாதையாலும், நெடுஞ்சாலையாலும் இணைக்கப்படாத, நாற்புறமும் பசுமைமிகு வயலால் சூழ்ந்து மா, தென்னை, இலுப்பைத் தோப்புகளுடன் எழில்மிகு இயற்கை வளம் மிகுந்த ஒன்று. அதில்தான் ஓர் அந்தண குலத்தில் ஆண்பிள்ளைகளுள் மூத்தவனாகப் பிறந்து பள்ளி இறுததியாண்டு வரை படித்துவிட்டு டெல்லிக்கு ஓடி வந்துவிட்டேன். காரணம், ஏழு பிள்ளைகள் கொண்ட அந்தகுk டும்பத்தை என் தந்தை சரிவர பராமரிக்காத்தால் நானாவது இந்தக் குடும்பத்துக்கு ஒரு நல்வழி காட்டலாமே என எடுத்த முயற்சியில் திண்ணமாகவிருந்தேன். திருவினை ஆக்கியது. இங்கு வந்து ஆறே மாதங்களில் தட்டெழுத்துப் பயின்று ஒரு பணியிலமர்ந்தேன். ஊதியத்தின் ஒரு பகுதி கிராமத்திலிருந்த என் வீட்டிற்குப் போகும், மறு பகுதி என் டில்லி வாழ்க்கையை ஓட்டும். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் குடும்பம் என் தனியொருவன் முயற்சியால் டில்லி வந்த்தது. என் இளைய சகோதரிகள், சகோதரனின் படிப்பைத் தொடர்ந்தேன், என் படிப்பு, பள்ளி இறுதுயாண்டோடு பின் தங்கியது. இன்று என் சகோதர சகோதரிகளும் நானும் இன்பமாக வாழ்க்கையைத் தொடர்ந்து நான் என் வாழ்வின் இறுதிப் பகுதிக்கே வந்துவிட்டேன். எப்படியென்றால் நான் இது வரை வாழ்ந்த ஆண்டுகளைவிட இனி வாழப்போகும் ஆண்டுகள் குறைவாக்ததான் இருக்க இயலும். நான் ஒரு பணியிலிருந்து ஓய்வு பெற்று இப்ப்போது உங்களுடன் பேசி அளவளாகிக் கொண்டிருக்கிறேன். ஆக, முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மையென்றாலும், யோசித்து முடிவெடுக்க வேண்டும், முடிவெறடுத்தபின் யோசித்தால் முறையாவது கடினம். இதை நான் சொல்லவில்லை. பல ஆயிரமாண்டுகளுக்கு முன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.
குறள்:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின்.
உரை:
செயலைச் செய்ய எண்ணியவர் செயலாற்றுவதில் உறுதி உடையவராக இருந்தால் அவர் எண்ணியதை எண்ணியவாறே அடைவர்.தெளிவுரை:
ஒருவனுக்கு 18-20 வயதுகளில் தன் தாய்தந்தையர், உடன்பிறப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு, வெளியூரில் தன்னந்தனியாகப் போய் வேலை தேடி வீட்டுக்குப் பணம் அனுப்பும் நிலை வந்தால், அவன் பட்டினத்திற்கு வந்தவுடன், அங்கு பல ஈர்ப்புகள் இருக்கும். திரைப்படங்கள், கேளிக்கை அரங்கங்கள், அவனைக் குடிபோதையில் திளைக்க வைக்கக் காத்திருக்கும் நண்பர் சிலர், இப்படிப் பல ஈர்ப்புகள். இந்தச் சலனங்களிலெல்லாம் சிக்காமல் தன் எண்ணத்தில் திண்ணமாக இருக்க முடிந்தவனே தன் எண்ணத்தில், முயற்சியில் வெற்றியடைவான் என்று முக்காலமும் உணர்ந்த அம்முனிவர் வள்ளுவப் பெருந்தகை மூவாயிரமாண்டுகளுக்கு முன்னரே நம்மையெல்லாம் முந்தி ஊகித்து எழுதிப் போய்விட்டார். தன்னை ஈன்று பாலூட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு இறுதிவரை நாம் கல் தூணாயிருந்து காக்க வேண்டும் என்ற திடமான எண்ணமிருந்தால் இன்று இத்தனை முதியோரில்லம் வந்திருக்குமா? அந்த வினைத்திட்பத்தைத்தான் வள்ளுவர் இந்தக்குறளில் உளியால் பாராங்கல்லில் எழுதி நமக்கெல்லாம் பறைசாற்றியுள்ளார்.விளக்கவுரை:
நாம் எண்ணுவதிலும் எய்தக்கூடியதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணிய எண்ணத்தில் எந்த எதிர்ப்பு சூழ்நிலை வந்தாலும் திண்ணமாக இருந்தால் நாம் எண்ணியது நிச்சயமாகக் கை கூடுமென வள்ளுவர் உத்திரவாதம் அளிக்கிறார் இத் திருக்குறளில்......மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














