குறள் தோட்டம்
முத்து
திருக்குறள்:
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்
- திருவள்ளுவர்
உரை:
முற்பகலில் பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தால், அப்படிச் செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.விளக்கவுரை
முன்பகலில் என்று வள்ளுவர் கூறுவது முன்பு நாம் பிறர்க்கு செய்த துன்பச் செயல்களைக் குறிக்குமேயன்றி இன்று முன்பகலில் செய்தால் இன்றே நமக்கு பிற்பகலில் துன்பங்கள் வந்துசேரும் என்றுமட்டும் கூற இயலாது. இதை நாம் முற்பிறவி வினையென்று கூட எடுத்துக் கொள்ளலாம்.என் பேரனிடம் இந்த குறளைக்கூறி விளக்கம் சொல்ல முற்படும்போது "அதாவது தாத்தா இப்பல்லாம் வர தமிழ் படத்திலே 'வில்லன்' இண்டர்வெல்லுக்கு முன் செய்யற துன்பமெல்லாம் பின்பாதியிலே எப்படி அவனுக்கே வந்துசேருகிறதோ அதைப்போலவா" என்று எனக்கு விளக்கமளிக்கிறான். இதான் கலி(கணினி)காலம். எப்படியோ 3000 ஆண்டுகளுக்கு முன் அந்த முக்காலமும் உணர்ந்த முனிவர் எழுதியது இன்றும் நடக்கிறது என்பதுதான் உண்மை.
தெளிவுரை:
இக்குறளைத் தெளிவுபடுத்த என் ஒவ்வொரு கற்பனைக் கதையுடன் தொடங்க எண்ணினேன். மாறாக இன்றைய அவல நிலை ஒன்றையே உதாரணம் காட்டி இக்குறளைத் தெளிவுபடுத்தலாமென நினைக்கிறேன்:நம் இன்பவசதிக்காக காடுகளையும், விலங்கினங்களையும் அழித்து, பல ரசாயனப் பொருட்களை அன்றுமுதல் (முற்பகலில்) உபயோகித்தோம். அதாவது முற்பகலில் இயற்கை அன்னைக்கு இன்னா செய்தோம். இவை யாவும் நம் சுற்றுப்புர சூழல்களை மாசுபடுத்தி "ஓஸோன் ஓட்டை" (Ozone Depletion) ஒன்றை ஏற்படுத்தி இன்று (இந்த பிற்பகலான காலத்தில்) பல ருதுக்கள்(பருவங்கள்) மாறி, பருவமழை பாதிக்கப்பட்டு, வெப்பம் ஓங்கி, பல பனிப்பாறைகள் உருகி, எங்கும் வெள்ளத்தாலும், தீயினாலும், சேதங்களை ஏற்படச் செய்து இன்று நாமே தவிக்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளோம். இதைவிடச் சிறந்த உதாரணக்கதை இக்குறளுக்கு வேறென்ன இருக்கப்போகிறது. முக்காலமும் உணர்ந்த வள்ளுவமுனி எப்படி அன்றே நம்மையெல்லாம் எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார், கேட்டோமா? இப்ப படும்பொழுது தெரிகிறது. விலங்கினங்களை அழித்தால் எப்படி நாம் பாதிக்கப்படுகிறோம் என்று சிலர் கேட்கலாம். இந்த பூமியை இறைவன் மிகச்சமமாகப் படைத்துள்ளார். பூச்சிகளைக் கொன்று அதன் இனம் அளவுக்கு அதிகமாக பெருகாமலிருக்க, பல்லிகளையும், தவளைகளையும், இப்படிப் பல உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளைத் தவளை விழுங்கும், தவளைகளைப் பாம்பு, பாம்பினைப் பறவைகள், பறவைகளை நாய்களும் மற்ற சில நாலுகால் விலங்கினமும், மானை சிங்கமும் இப்படி ஒவ்வொன்றின் இனங்கள் பெருகாவண்ணம் அதற்கு மாற்று விலங்கினங்களைப் படைத்துள்ளார் கடவுள். அப்படிப்பட்ட விலங்கினங்களை நாம் வேட்டையாடும்போது அது அழிக்கவிருந்த மற்ற விலங்க்கினங்களின் தொகை பெருக வாய்ப்புண்டு அல்லவா? அதனால் தான் விலங்கினங்களைக் கொல்வதைத் தவிர்க்கவே பல தெய்வங்கள் தங்கள் வாகனங்களாகக் கொண்டு பக்தி மார்க்கமாக நம் எல்லோரையும் பல வேதங்களும் சாத்திரங்களும் எச்சரிக்கின்றன.
நீதியுரை:
பிறருக்குத் தீங்கு நினைத்தால் அது மாறாக நம்மையே தாக்கும் என்றுரைப்பதே இக்குறள்......மீண்டும் பூக்கும்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














