தமிழ் இலக்கியம்
ஆகிரா
தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ் மொழி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த குடி என்று தமிழ்க் குடிமக்களைப் பற்றிச் சொல்வார்கள். அத்தகு தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் இலக்கிய வளத்துக்குப் பஞ்சமில்லை. தமிழ் இலக்கியம் ஒவ்வொன்றும் அது இயற்றப்பட்ட காலத்து மக்கள் வாழும் முறைமையை விளக்குவதாக அமைந்துள்ளது. சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழ் மொழியில் புலமை மிக்க அறிஞர் பெருமக்கள் நிறைந்து கிடப்பது தமிழ்ச் சமுதாயம்.
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின்
சீரளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
இத்தகு சிறப்புமிக்க தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களைக் குறித்து, தமிழ்கூறும் நல்லுலகத்தோர் எழுதிய விவரங்களத் தொகுத்து வழங்கும் ஆவலுடன் இந்தத் தமிழ் இலக்கியப் பகுதி, தமிழ்ப் புத்தாண்டாகிய இன்றைய தினம் துவங்குகிறது. வாசகர்கள் தமிழ் இலக்கியம் தொடர்பான தங்கள் கருத்துக்களைப் பிரசுரிக்க அனுப்பலாம்.
அன்புடன்
ஆகிரா
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||











