Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
 
  என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...























Tamil-English bilingual webmagazine Dedicated to Education of Children - best viewed in 1280x800 Screen Resolution
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.        Bring out the child in you...



 Facebook Twitter More...


Easiest and Best

Back Issues

FIGHT CORRUPTION


NOTICE

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தங்கைக்கோர் குழந்தை
உஷா முத்துராமன்





அணிந்துரை - ராஜேஷ்குமார் (நாவலாசிரியர்)

ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம் அதன் முதல் வரியிலேயே தெரிந்துவிடும் என்று சொல்லலாம். முள்ளின் கூர்மையும், மலரின் மணமும் முளைக்கும்போதே தெரிந்துவிடும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை ஒரு நல்ல சிறுகதைக்குரிய இலக்கணமும், புரியாத வார்த்தைகளைப் போட்டு இலக்கியச் சிறுகதை என்ற பெயரில் வாசகர்களை இம்சை செய்வதைவிட ஒரு தடவை படித்தாலே புரியும்படியான வார்த்தைகளைப் போட்டு ஒரு சிறுகதையைப் படைப்பதுதான் உண்மையான இலக்கியம் என்று நினைப்பவன் நான்.

என்னுடைய நினைப்பை நிஜமாக்கியிருக்கிறார் சகோதரி உஷா முத்துராமன் அவர்கள். தன்னுடைய சிறுகதையைப் படிக்கும் எந்த ஒரு வாசகரும் கதையைப் படித்து முடிந்ததும் இரண்டு நிமிடமாவது அந்தக் கதையைப் பற்றி யோசித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தோடு கையில் பேனாவைப் பிடித்து இருப்பார் போலும். ஒவ்வோரு கதையும் சுவைத்தது. சிறிது நேரம் அசை போட வைத்தது.

மறைந்த பத்திரிகையுலகப் பிதாமகர் திரு. சாவி அவர்கள் என்னிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.

"ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்கணும்ன்னா மசால் தோசைக்கு ஆர்டர் தர்றோம். தோசை வந்ததும் அதை சாப்பிட வேண்டிய முறையில் சாப்பிட்டால் தான் சுவையாய் இருக்கும். சில பேர் தோசையோட ஓரத்திலிருந்து சாப்பிட ஆரம்பிப்பாங்க, அதுல சுவை இருக்காது. மசால் தோசையோட முழு சுவையும் நமக்குக் கிடைக்கணும்ன்னா தோசையோட மையப் பகுதியில் கையை வெச்சு தோசையையும் மசாலாக் கிழங்கையும் சேர்த்து எடுத்து வாய்க்குள்ளே போட்டாத்தான் அது மசால்தோசை. அதே மாதிரிதான் ஒரு சிறுகதையை எழுதும் போதும் கதையோட மையக்கருத்தைக் கதையின் முதல் பத்தியிலேயே கொண்டு வந்துவிடணும். இதை எந்த எழுத்தாளர் ஃபாலோ பண்றாரோ அவர் எழுத்து பத்திரிகையுலகில் என்றைக்குமே நிற்கும். திருமதி உஷா முத்துராமன் அவர்களுக்கு இந்த ஃபார்முலா நன்றாகத் தெரிந்து இருக்கிறது. அதை வெற்றிகரமாய்க் கையாண்டுள்ளார்.

தேவியின் கண்மணியில் வெளிவந்த நீண்ட சிறுகதையான 'திருவிழான்னு வந்தா' படைப்பாகட்டும். தேவியில் வெளிவந்த தர்மம்; என்ற ஒரு பக்க சிறுகதையாகட்டும் எல்லாமே சொல்ல வந்த கருத்தை நறுக்கென்று சொல்கின்றது. மனசில் நிற்கின்றன.

'அம்மா வந்தால்' கதை மல்லிகையாய் மணக்கிறது. 'பகடைக்காய்', 'திட்டம் நிறைவேறியது' இரண்டும் Non-veg கதைகள், அதாவது க்ரைம் சிறுகதைகள். இரண்டு கதைகளுமே சஸ்பென்ஸோடு சிறப்பாக இருந்தன. பாராட்டியே ஆக வேண்டும். நிறைய க்ரைம் கதைகளையும் இவருடைய பேனா படைக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்தவரையில் பெண் எழுத்தாளர்கள் ஒரு காலகட்டம் வரை எழுதிக் கொண்டு இருந்துவிட்டுப் பிறகு திடீரென்று எழுதுவதை நிறுத்திவிட்டுக் குடும்பச் சுமைகளுக்குள் ஆழ்ந்து போகிறார்கள். எழுதுவது என்பது எல்லோர்க்கும் அமைகிற ஒன்று அல்ல. வெகு சிலர்க்கே கிடைக்கக்கூடிய வரப்பிரசாதம். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது எழுத்தாளர்களின் மிகப் பெரிய பொறுப்பாகும். அத்தகைய வரப்பிரசாதம் கிடைக்கப்பெற்ற திருமதி உஷா முத்துராமன் அவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இன்றைய பதிப்பகங்களில் ஆலமரம் போன்றது மணிமேகலைப் பிரசரம். அத்தகைய பெருமைமிகு பதிப்பகம் மூலமாக இந்த சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருப்பது படைப்பாளிக்கு சாகித்யா அகாடமி விருது கிடைத்ததற்குச் சமம்.

சகோதரி 'உஷா முத்துராமன்' அவர்கள் எழுத்துலகில் மேலும் வெற்றிகளைப் பதிக்க, என் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு 'லஷ்மி' யாக ஒரு 'சிவசங்கர்'யாக உருவாகும் சாத்தியம் நிறையவே உண்டு.

ராஜேஷ்குமார்

புத்தகத்தின் விலை ரூ 50/- கூரியர் செலவு தனி, தமிழ்நாட்டுக்குள் ரூ 15/- வெளிமாநிலங்களுக்கு ரூ 40/-

The book cost Rs.50/- Courier charges Extra, within Tamil Nadu Rs. 15/- and for other states Rs. 40/-

Please contact the address and phone No, given below:

Mrs.ushamuthuraman
# 2, Lion City Nagar Extension.
Thiru Nagar, Madurai 625 006.
Mobile No. 99655 92216
Phone No. 0452-2482116. email: ushamuthu@eth.net

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  



to mazhalaigal@gmail.com    Give your Feedback     Take a Quiz

Submit your content by mail to: mazhalaigal@gmail.com     Free Software Every Day     Free world Clock
Designed and maintained by AKR Consultants