Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 


Meet our Authors

RoboForm: Learn more...























Tamil-English bilingual webmagazine Dedicated to Education of Children - best viewed in 1280x800 Screen Resolution
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.        Bring out the child in you...



 Facebook Twitter More...


Easiest and Best

Back Issues

FIGHT CORRUPTION


NOTICE

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பொன்மாலைப் பொழுது
என் சுரேஷ்





என் இனிய நண்பர்களே,

உணர்வுகளை வெளிப்படுத்த எழுத ஆரம்பிக்கும் காலம், சில நேசர்களுடைய பாராட்டுக்கள் பெற்றதும் மீண்டும் மீண்டும் எழுதத் துடிப்பு. எழுதியவைகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் ஆகா! இதையெல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட்டால் என்ன, என்ற முயற்சி! முதல் குழந்தையை காணத் துடிக்கும் ஒரு பாசத்தின் பரிதவிப்பு. புத்தகம் வந்ததும் அட! நாமும் ஒரு புத்தகத்திற்கு ஆசிரியர் என்ற பெருமை! இதற்குள் மிக நெருங்கின அறிஞர்கள் சிலர் தங்களின் பார்வைகளில் பட்ட திருத்தங்களை இனிப்பு பூசின நல்மருந்துகளாக்கின அன்பளிப்பு! மூத்தவர்களின் படைப்புகளை பல்வேறு விமர்சனங்கள் கிழி கிழியென்று கிழிக்கும்போது வியப்பு, பயம். இருப்பினும் மீண்டும் எழுத ஓர் உந்துதல், ஆனால் அதன் வேகம் அப்போது குறையும். மருத்துவம் தந்த அறிஞர்கள் தங்களுடைய மனதிற்குள் இதைக் கண்டு பாராட்டுவார்கள். ஆனால் அடுத்த தொகுப்பிற்காக காத்திருப்பார்கள். இப்படியாக சில கவிதைத்தொகுப்புகள் வெளியிட்ட பின்னர் போதுமடா என்றிருக்க, "இன்று" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி என் நண்பரும் சகோதருமான அழகி டாட் காம் நிறுவனர், திரு பா. விஸ்வநாதனிடம் காட்டினேன். அவர் அந்த கவிதையை வாசித்து, ரசித்து, உண்மையான தனது பாராட்டுககளை தெரிவித்தது மட்டுமன்றி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த கவிதையை அனுப்பி என் நண்பன், திரு என் சுரேஷின் இந்த கவிதையை வாசித்துப் பாருங்கள் என்றார். அந்த கூட்டத்தில் பலர் தமிழ் மொழியை நன்கு கற்றவர்க்ள், அறிஞர் பெருமக்கள். சிலர் பின்னூட்டமிட்டும் மற்றவர்கள் தொலைபேசியில் அழைத்தும் பாராட்டினார்கள். கவிதையை இன்னமும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஒரு நல்ல ரசிகனாக இருந்துபோகிறேன் என்ற எனது நிலைபாடு தவறென்றார்கள் அறிஞர்கள் பலர். பாதைப்போட்டுக்கொண்டே பயனமிடு என்றார்கள் சிலர்.

கவிதைகளை எழுதுவது என்பது எனக்கு முதலிரவின் முதல் இன்பம் போன்றது. ஆனால் கவிதைத்தொகுப்பு புத்தகமாக வெளிவர ஒவ்வொன்றும் தலைப்பிரசவம். அப்படியாக இதோ எனது அடுத்த கவிதைத் தொகுப்பு - "பொன்மாலைப் பொழுது" நேற்று பிறந்துள்ளது. எனது கவிதைகளை மிகவும் ரசித்து வாசிக்கும் சில முதியோர் இல்லத்து தெய்வங்களுக்கும், ஆனாதை விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவச் செல்வங்களுக்கும், எனக்கு ஊக்கம் தந்து தொடர்ந்து எழுத அறிவுரை கூறிவரும் எனது சகோதரர்கள் திரு. ஆல்பர்ட், திரு. சக்தி சக்திதாசன், திரு. பா. விஸ்வநாதன், திரு ஆசிப் மீரான் ஆகியோருக்கு எனது நன்றிகள் பல! எனது தமிழ் ஆசிரியர் திரு. கே இராஜேந்திரன் ஐயாவிற்கும் வெளியீட்டாளர்களுக்கும் இதை தொகுப்பு செய்து உதவிய தம்பி சுந்தர் அவர்களுக்கும், அச்சகத்தில் எனக்காக வியர்வை சிந்திய என் ஏழையின சகோதர சகோதரிகளுக்கும் நான் நன்றி பாராட்டி மகிழ்கிறேன். இந்த புத்தகத்தை "எனது எல்லா புத்தகங்களையும் வாசித்து வெற்றியடையச் செய்த வாசகர்களுக்கு" நன்றியோடு சமர்ப்பணம் செய்துள்ளேன். இந்த புத்தகம் திருமகள் நிலையத்தார் வெளியிட்டுள்ளார்கள், இன்னும் சில நாட்களில் இந்த புத்தகம் உலகெங்கும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் எல்லா கடைகளில் வந்துசேரும்.

எல்லாம் இறைவன் கையில்! எல்லா புகழும் பெருமையும் மாட்சியும் கர்த்தருக்கே, இறைவனுக்கே, பகவானுக்கே, அல்லாவிற்கே!

ஆமென், ததாஸ்து, ஆமீன்!

தோழமையுடன் என் சுரேஷ்

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  



to mazhalaigal@gmail.com    Give your Feedback     Take a Quiz

Submit your content by mail to: mazhalaigal@gmail.com     Free Software Every Day     Free world Clock
Designed and maintained by AKR Consultants