சிந்தனை ஒன்றுடையாள்
நூல்நயம் - முத்து. இராமமூர்த்தி
நண்பர் திரு.முத்து இராமமூர்த்தி அவர்கள் வானொலியில் பேசிய உரைகளின் தொகுப்பாக இந்த அரிய நூல் அமைந்துள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் சிந்தித்து மனத்தில் இருந்த வேண்டிய சிறந்த கருத்துக்கள் சீரிய முறையில் கூறப்பட்டுள்ளன. மனிதகுலம் ஒன்றுபட்டு வளமுடன் வாழ வழிவகைகள் கூறுகின்ற நூலாக இது அமைந்துள்ளது. அனைத்துக் கட்டுரைகளுமே அறிவுரைகளின், அறவுரைகளின் பிழிவாக உள்ளன.
நீர்பரப்பின் ஊட்டி உறவு கொண்ட வண்ணம் பூத்துக் கிடக்கும் கொட்டியும் ஆம்பலும் நீர்மட்டம் உயர உயர உயர்கின்றன. தாழும்போது அவையும் தாழ்ந்து போகின்றன. அதுபோலவே மக்களின் வாழ்க்கையின் உயர்வும் தாழ்வும் அவர்களின் ஊக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. உயர்வு அவரவர் உள்ளத்தைப் பொறுத்ததே.
ஒருவர்க்கு உயிர் உண்டா இல்லையா என்பதை அறிய மருத்துவர்கள் நாடி அல்லது. இதயத் துடிப்பை அறிகின்றனர். நாடித் துடிப்பு இன்றேல் உயிரில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆனால் திருவள்ளுவரோ உள்ளத்தே அன்பிருந்தால் உயிருண்டு. அன்பில்லையேல் ஒருவன் உயிரற்றவனாகவே கருதப்படுவான் என அன்பை உயிர் நிலையாக்குகிறார்.
அச்சபில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்ச்மென்ப தில்லையே
என்பது பாரதியின் வீர முழக்கம். அச்சமற்ற தன்மையே உயரிய வாழ்வைத் தரும். அஞ்ச வேண்டாததற்கு அஞ்சுகின்ற கோழைத்தனம் வாழ்வைப் பாழாக்கிவிடும்.
மக்கள் பொறுமையுடையவர்களாக இருக்க வேண்டும் பிறர் செய்யும் தீங்கையும் பொறுத்துக் கொள்வது உயரிய பண்பாம்.நிலத்தை அகழ்கின்றனர். நிலமோ தனக்கு ஊரு செய்கிறார்களே என்று வெகுண்டு அவர்களை0 அழிப்பதில்லை. மாறாக அகழ்வோர் நின்று கொள்ள அதுவே.இடமளிக்கிறது. அகழ்வதாலேயே நிலத்துக்கு அழிவு ஏற்பட்டுவிடுவதில்லை. அகழ்ந்த இடம் வாலியாக கூவலாக மாறிச் செழுமை பெறுகிறது.பிறர் இகழ்வதைப் பொறுமையுடன்- நிலத்தை போல் ஏற்றால் அது நமக்குப் பெருமையாகவே முடியும்.
சாதி, மத, இன, வேறுபாடுகள் மனித சமூகத்தைச் சீரழிக்கின்றன. பேதங்கள் மறைந்து "எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் ஓர் இனம்; எல்லாரும் இந்நாட்டு மக்கள்". எனும் ஒற்றுமை உணர்வு ஓங்க வேண்டும். சாதி, சமயப் பிணக்குளற்ற ஒற்றுமைப்பட்டு உயர்ந்து நிற்கும் ஒப்பற்ற சமுதாயம் மலர வேண்டும்.
உள்ளத்திலே ஒரு கள்ள மில்லாமல்
ஊருக்குஏ பல பேதம் கொள்ளாமல்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
எனும் பட்டுக் கோட்டை கலியான சுந்தரத்தின் பாடற் அருத்து நம் மனத்தில் பதிய வேண்டும்.
மாறுபாடுகளைத் தாங்கிக் கொள்ளுகின்ற சகிப்பித் தன்மை ஒவ்வொருவரின் மனத்திலும் ஒளி விடுமானால் நாட்டில் புன்மைகள் பூசல்கள் தோன்றா. எல்லா உயிரும் பிறப்பாலே ஒன்றுதான் என்னும் உணர்வோடு எந்த வகையிலும் வேறுபாடும் மாறுபாடும் காட்டாமல் எந்த உயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒருமை காணும் நெறி உலகில் ஓங்க வேண்டும்.
தனிமனித ஒருமைப்பாடு தேசிய ஒருமைப்பாடாக உயர வேண்டும். தேசிய ஒருமைப்பாடு மட்டுமன்று "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் உலக ஒருமைப்பாட்டுணர்வும். உருவாகி உலகம் ஒன்றுபட்டுச் செழிக்க வேண்டும். ஒன்றுபட்டுழைத்தால் சாதிக்க முடியாதது எதிமில்லை குறைபாடுகளும் வேற்றுமைகளும் தாமே அழியும்.
ஒரு பொருளைப் பற்றிப் பலர் பலவிதமாகச் சிந்திக்க கூடும். அவ்வாறு சிந்திப்பாதால் எழுகின்ற எல்லாக் கருத்துகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து ஒன்று பட்ட சிந்தனையிற் செயல் செயதால் துன்பம் எந்நாளுமில்லை. வேற்றுமைகள் இருக்கலாம் ஆனால் அமைகளுக்கிடையே ஒற்றுமையைக் கான்பதுவே தம் குறிக்கோளாக இருக்க வேண்டும். வேற்றுமைகளைக் களைத்து அனைவரும் சமம் என்ற நெறியில் ஒன்றுபட்டால் உலகும் உயரும்.' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் பெருமித எண்ணம் பீடு நடைபோட எல்லா வேற்றுமைகளும் ஆசிரியர் திருவ'ல்ளுவர், வள்ளலார், பாரதியார், நாமக்கல் கவிஞ்ர்,பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம் ஆகியோர் பாடல்களைக் கொண்டும் புறநானுறு,சிவப்பதிகாரம், பட்டினப்பாலை, இராமாயணம் ஆகிய நூற்கருத்துகளைக் கொண்டும் மிகச் சிறப்பாய் விளக்கியுள்ளார்.
வேற்றுமைகளற்ற குறிப்பாகச் சாதிக் கொடுமைகளற்ற சமுதாயம்மலர வேண்டும் என்ற நன்னோக்கமே ஆசிரியரின் இந்த உரைகட்கு அடித்தனமாய் அமைகிறது."கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சாதியைக் கண்டிக்காத சான்றோர்கள் இல்லை. இப்போது சாதி என்பதில் சாரம் எதுவுமில்லை" என்னும் பாரதியின் கூற்றோடு நூல் நிறைவு பெறுகிறது.
நூலைப் படிக்கின்ற நாம்" சாதி என்பதில் சாரம் எதுவுமில்லை" என்னும் நிலை மலர்ந்துள்ளதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் . சாதி சார முன்னதாகமாறிவுருகி?ரதே என்ற வேதனைப் பெருமூஸ்சே வெளிவருகின்றது. இந்நூல் அளவில் சிறியதே ஆயினும்"சாதி என்பதில் சாரமில்லை" என்னும் பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் நிலை மலர உதவுகின்ற பெருங் கருவியாகத் ஹிகழ்கிறது. 'பிரிவிலை, எங்கும் பேதமும் இல்லை; எனும் பண்ணிசைக்கும் இந்ந்ன்னூல் வெற்றி கண்டு நலம் விளைவிப்பதாகுக!



Your Feedback








