மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

சுப்பிரமணிய பாரதி

தாத்தா சீனு - ஆகிரா

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
சீனு மாமா:

தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்

ஆகிரா:

அன்புள்ள சீனு மாமா,

தங்கள் மனதில் ஆழப் பதிந்த இக்கவிதை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இக்கவிதையின் வாயிலாக மஹாகவி தமிழர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன? என்பதை அனைவரும் அறிய வேண்டும். இப்பொருளைக் குறித்து தங்களது கருத்துக்களை விரிவாக எடுத்துரைக்க வேண்டுகிறேன்.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

என்ற கூற்று பாரதம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் எடுபட்டிருக்கலாம் ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அனைத்து விஞ்ஞானப் பாடங்களும் பள்ளிகளில் தமிழிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. கணினியின் அனைத்து செயலிகளிலும் தமிழ் இடம்பெறும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நூல்களும், பத்திரிகைகளும் காகிதத்தில் அச்சிட்டு வீதி விதியாக அலைந்து விற்கும் காலம் மலையேறிவிட்டது. முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகளும் நூல்களும் இணையவழியே பவனிவரத் தொடங்கியுள்ளன. இணையதளம் அமைப்பது எப்படி என்பது பற்றி ஆங்கிலத்தில் பல இணையதளங்கள் விளக்கமான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன ஆனால் தமிழிலேயே பயிற்றுவிக்கும் தளம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்பணியை மழலைகள்.காம் தளத்தில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன். இது தவிர என் அனுபவத்தில் கண்ட இயந்திரத் துறை சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவற்றைத் தமிழில் தொகுத்து வழங்கவும் முயற்சி எடுக்கிறேன்,

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்

என்ற கூற்றினில் தமிழைப் பற்றிக் குறைவாகக் கூறியவன் ஒரு பேதை என்பதைச் சரியாகப் படிக்காமல் தமிழர்களிலேயே பலர் முதல் இரு வரிகளை மட்டும் படித்துவிட்டுத் தாறுமாறாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இனிமேல் அவ்வாறு யாரும் தமிழை இழிவாகக் கருத இடமில்லாமல் செய்யத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

தாத்தா சீனு:

அன்புள்ள ஆகிரா,

பாரதியாரின் கன்வுகளில் முக்கியமான ஒன்றான தமிழ்க் குழந்தைகளை இப்பாரிலுள்ள மற்றக் குழந்தை மேதைகளுக்கீடான, முடிந்தால் இன்னமும் மேலான திறமுடைந்தவர்களாக வருவதற்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க்கும் பணியில் தாங்கள் தான் நாள் பொழுது பார்க்கமால் மனம் உடல் செயல் எல்லாம் ஒருங்கே இணைந்து ஈடு பட்டு வருகிறீர்களே. இந்த அறைகுறைத் தமிழெழுத்தாளன் தங்களுக்காக எழுதுவதற்கு என்ன இருக்கிறது? நான் ஏதும் எழுதினால் அது மீனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது போலாகும்.

"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்"

மேற்படி எழுதிய பாரதியார் தனது தமிழையும் தனது தமிழ்நாட்டைப் பற்றியும் எவ்வளவு பெருமையுடன் தன்னம்பிக்கையுடனும், (மேலான கனவுகளுடனும்) தன் பூதவுடலுடனுடன் இவ்வையகத்தில் வாழ்ந்தார் என்பதற்கு அவரது புகழ்பெற்ற பாடலை தாங்கள் அனுமதிப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் கீழே கொடுக்கிறேன்.

ஏதாவது ஒரு கூட்டம் (meeting) என்றாலும் கணபதி தோத்திரம் குருவந்தனம் சரஸ்வதி தோத்திரம் (அவைகளில் ஒன்றாவது) பாடப்பட்டால், எப்படி எல்லோரும் பொருமையுடன் கேட்கின்றார்களோ அப்படியோ இந்தப் பாடலையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே -- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

(செந்தமிழ்) 1

வேதம் நிறைந்த தமிழ்நாடு -- உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு -- நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

(செந்தமிழ்) 2

காவிரித் தென்பெண்ணை பாலாறு -- தமிழ்
கண்டதோர் வைகை பொருனைநதி -- என
மேவிய யாறு பலவோடத் -- திரு
மேனி செழித்த தமிழ்நாடு.

(செந்தமிழ்) 3

முத்தமிழ் மாமுனி நீள்வரையே -- நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு -- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே -- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

(செந்தமிழ்) 4

நீலத் திரைக்கட லோரத்திலே -- நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு.

(செந்தமிழ்) 5

கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு -- நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு.

(செந்தமிழ்) 6

வள்ளுவன் தன்னை உலகினுக்கே -- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.

(செந்தமிழ்) 7

சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவா¢ தாய்நாடு.

(செந்தமிழ்) 8

விண்ணை யிடிக்கும் தலையிமயம் -- எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையா£¢ -- சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தா£¢ தமிழ்ப்
பா£¢த்திவர் நின்ற தமிழ்நாடு.

(செந்தமிழ்) 9

சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.

(செந்தமிழ்) 10

அந்த தெய்வீக கவிஞரின் உயரிய எண்ண்ங்களையும் 'தான்' என்ற அகந்தை சற்றுமேயில்லாத அடக்கத்தையும் வலியுறுத்துவதற்காக கீழ்க் கண்ட வரிகளை சமர்ப்பிற்கின்றேன்

பாரதியார் அவர்களது "பாஞ்சாலி சபத"த்தின் முதற் பதிப்பில் பாரதியார் அவர்களே எழுதியிருந்த 'சமர்ப்பணமும்' 'முகவுரை'யும் கீழ் வருமாறு:

சமர்ப்பணம்

தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுகுத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்கும் இந் நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்.

ஆசிரியன் முகவுரை

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவிய மொன்று தற்காலத்திலே செய்துதருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல்வேண்டும்.

காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. 'ஆசையால்' இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழி காட்டியாக.

இந் நூலிடையே திருதராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும், சூதில் விருப்பமில்லாத வனாகவும், துரியோதனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கின்றேன். அவனும் மகனைப் போலவே துர்க் குணங்களுடையவன் என்று கருதுவோரு முளர்..எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்நூலை வியாசபாரதத்தின் மொழிப்பெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, 'கற்பனை' திருஷ்டாந்தங்களில் எனது 'சொந்தச் சரக்கு' அதிகமில்லை; தமிழ்நடைக்குமாத்திரமே நான் பொறுப்பாளி. தமிழ்ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங் கட்டிநிற்கும் பராசக்தியே என்னை இத் தொழிலிலே தூண்டினாளாதலின், இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன்.

ஓம் வந்தே மாதரம்.

-- சுப்பிரமணிய பாரதி

Venkatram Shrinivas

V.Shrinivas (Seenu)

GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com