அழகி வழியே தமிழ்
ஆகிரா
Learn Tamil through Azhagi
Dear friends,Tamil is a beautiful and sweet language. Many poets have described the beauty and taste of Tamil on many occasions. It is essential to be able to produce contents in Tamil in personal computers to be able to communicate in Tamil through the internet and other applications involving computers.
Azhagi Tamil transliteration software has been created with an excellent user interface that enables any novice to create Tamil contents in Computers with ease. Azhagi is the one and only Tamil transliteration software hosting an 100% phonetics-compliant transliteration scheme (please see http://azhagi.com/easy.html for details). It is Easy and Fast, Flexible and Friendly, Natural and Intuitive, Simple and Straightforward, Unique and Innovative, Peerless and Versatile.
Azhagi's transliteration scheme (compared to that of any other software's one might think of) has remained, ever since its inception in year 2000, the Most Natural and Intuitive and in other words the Easiest and Most flexible, working across ALL Windows applications. Azhagi is unrivaled in its innovativeness, speed, flexibility and ease of use.
Azhagi has exhaustive features and a help section of elaborate and clear-cut details that enable the user to clearly understand all its features quickly.
Iam making a sincere effort to express whatever I learnt by using Azhagi and reading the help files to all the viewers of mazhalaigal.com through this section. First we will learn to send email in Tamil using Azhagi.
Click the link shown below:
Installation and usage of Azhagi
அன்பு நண்பர்களே,
அழகு என்றால் அனைவரையும் இன்புறச் செய்யும் வஸ்து என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அழகி என்றால் அனைவரையும் மயங்க வைக்கும் பெண் என்பதும் அறிந்ததே. அழகு உருவத்தில் மாத்திரமல்ல, உள்ளத்திலும் இருக்கும் பெண்ணே உண்மையான அழகி. தமிழ் மொழி மிக்க அழகுடையது. அதனால்தான் தமிழை ஒரு பெண்ணாகவும், தாயாகவும் வர்ணித்து வழிபடுகின்றனர் தமிழ் கூறும் ஆன்றோர் அனைவரும்.
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்.
என்றார் பாவேந்தர்.
"சொற்சுவை, பொருட்சுவை அனைத்தும் கூட்டி, சுந்தரத் தமிழினிலே பாட்டிசைத்து செந்தமிழ்க் கவி பாடும் புலவன் நான்."
என்று திருவிளையாடல் திரைப்படத்திலும்
"செருக்கால் அழியப்போகும் செல்வாம்பிகையே, நானும் உன்னை இறுதியாக எச்சரிக்கிறேன், என் தெய்வத்தை நினைத்துக்கொண்டு தீக்குள் விரலை வைத்தாலும் தீந்தமிழைத் தீண்டுமின்பம் தோன்றுமேயல்லாது தீய்ந்து விடாது என் கரமும் நாவும், ஆனால் தேய்ந்து விடும் உமது வாழ்வு விரைவில்" என்று சரஸ்வதி சபதம் திரைப்படத்திலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறும் வசனங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
அத்தகைய இனிமையான தமிழைக் கணினியில் பொறிக்க ஏற்ற வண்ணம், எளிதில் அனைவரும் உபயோகிக்கும் விதத்தில் அமைந்த அழகி எனும் தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருளின் உதவியுடன் தமிழைக் கணினியில் வடிப்போமா? முதலில் தமிழில் மின்னஞ்சல் அனுப்பத் தெரிந்துகொள்வோம்.
கீழ்க்காணும் சுட்டியைக் கிளிக்குக:
அழகி நிறுவுதலும் பயன்படுத்தலும்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||












