Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தாத்தா சீனு


Article on Tamil New Year - Mazhalaigal Grandpa Cheenu
எல்லோருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அவ்வருடம் முழுவதையும் எப்படி உபயோகிக்கலம் என்ற எனக்குத் தெரிந்த ஒரு முறையையும் இம்மடலுடன் கூட அனுப்பியுள்ளேன். தயவு கூர்ந்து அதைப் பார்க்கவும்.

சர்வஜித் வருஷத்திய பலன்

சர்வஜித் தன்னிற் றவத்தில்பலவும்
ஒருபதினெட்டு வித்துமோங்கும் - பெருமையுடன்
மிக்கவிளைவுண்டா மென்மேலு மாரியுண்டாம்
தக்கசுகம் பெருகுந் தான்

மேற்கண்ட வரிகளின் பொருள் என்னறிவுக்கெட்டியபடி இவ்வாறு இருக்கலாம்: சர்வஜித் வருடத்தில் பல தவங்களும் பதினெட்டு கலைகளும் பெருமையுடன் திகழும். மிக நல்ல விளைச்சலுண்டாகும். மேலும் மேலும் மழை பெய்யும். எங்கும் சுகம் பெருகும்.

ஆங்கில வருடங்களுக்குப் பெயர் கிடையாது ஆனால், மொத்தம் 60 வருடங்களின் காலக்குறிப்புடன் கொண்ட தமிழ் வருடம் ஒவ்வொன்றிற்கும் தனிப் பெயருண்டு. அந்த 60 வருடங்களின் பெய்ர்கள் கீழே கொடுக்கப் பட்டிருக்கின்றன;

  1. பிரபவ
  2. விபவ
  3. சுக்கில
  4. பிரமோதூத
  5. பிரஜோற்பத்தி
  6. ஆங்கிரஸ
  7. ஸ்ரீமுக
  8. பவ
  9. யுவ
10, தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்ரம
15. விஷு
16. சித்திரபானு
17. க்பாலு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21, சர்வஜித்
22. சர்வதாரி
23. விரோதி
24, விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36, சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பிராபவ
41. பிலவங்க
42. கீலக
43, சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. இராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்ரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58, ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

இப்பொழுது கண்டு கொண்டிருப்பீர்கள். பிறக்கப் போகும் சர்வஜித் மேற்கண்ட காலக் கணக்கின்படி 21ம் வருடமாகும். நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது சர்வஜித் வருடத்தில் தான் (ஆகஸ்ட் 15, 1947)

இந்த 60 வருட கால நிர்ணயம் ஜூபிடர் (ப்ரஹஸ்பதி, வியாழன், குரு) கிரகத்தை மேற்கொண்டிருக்கிறது. ஜூபிடர் நம் பூமியைப் போல் சூரியனை ஒரு முழு சுற்று வருவதற்கு 12 வருடங்கள் ஆகின்றன. அது போல் 5 சுற்று முடித்து வருவது வாணூலினின் அடிப்படையில் ஒரு கணக்கு இருப்பது போல் தெரிகிறது.

நமது பஞ்சாங்கம், ஜோதிடம் இவ்விரண்டும் எவ்வாறு வாணூலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி எனக்குத்தெரிந்த பலவிவரங்களை உங்களெல்லோரிடமும் பகிர்ன்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல்.

வருக வருக வருகவே

வருடமுழுதும் யாவருக்கும் நன்மையுடன் வெற்றியையே கொடுக்கும் சர்வஜித் வருடமே வருக வருக ! நமக்கு சுதந்திரம் கிடைத்தது சர்வஜித் என்றெழுதியிருந்தேனல்லவா?

மேலும், இந்த மகத்தான சர்வஜித் வருடத்தில் தான் (கி. பி. 1767ம்) மகான் தவத்திரு தியாகராஜ சுவாமிள் அவதரித்தார். இதே சர்வஜித் ஆண்டில் தான் ( கி.பி. 1875) தயானந்த சுவாமிகள் 'ஆரிய சமாஜத்தை' நிறுவினார். புத்தபிரான் நிர்வாணம் எய்தியதும் சர்வஜித் ஆண்டில் தான் என்று சொல்லப் படுகிறது .

பஞ்சாங்கம்

கால நிர்ணயம், நமது வேதங்கள், வான சாத்திரம் இவைகளுக்குள்ள சம்பந்தங்களைப் பற்றி பல ஆராய்ச்சிகளர்கள் கணக்கிடலங்காப் பக்கங்கள் எழுதியுள்ளனர். அதில் கணக்கியலைச் சார்ந்த கோணவியல் (trigonometry) குறிக்கணக்கியல் (algebra), இவைகளையும் உபயோகித்திருக்கிறார்கள். இவைகளில் என்னைப் போன்ற சாதாரன மனிதர்கள் புரிந்து கொண்ட, அதுவும் முக்கியமாக, நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்குத் தேவைப்பட்ட தகவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, பிறகு அவைகளை முடிந்தவரை மிகவும் சுருக்கித் தங்களுக்கு வழங்குகிறேன். தயவு செய்து பொறுத்திருக்கவும் (இந்த வேண்டுகோள் முக்கியமாக எனது மிக மதிப்பிற்குறிய திரு ஆகிரா அவர்களுக்காக)

அதில் எதிர்பாராத சில தவறுகள் தென்பட்டால், இதைப் படிக்கும் அறிஞர்கள் என்னை மன்னித்துவிட்டு, அப்படியே திருத்தங்கள் செய்துவிட்டு அடியேனுக்கும் தெரியப் படுத்தவும்.)

இப்பொழுது அதற்காக ஒரு சிறு தகவலை மட்டும் விவரித்துவிடுகிறேன்.

குரு கிரகம்

சூரியனை ஒரு சுற்று வருவதற்கு 12 வருடங்கள் ஆகின்றன. அவ்வாறு ஒரு சுற்று வருவதற்கு சனி கிரகத்திற்கு 15 வருடங்களாகின்றன. இவ்விரண்டு கிரகங்களும் ஒன்றாக, முதலில் வானவெளியில் சூரியுனுக்கு முன்பான ஒரே நேர்கோட்டில், முதலில் துடங்கிய அதே இடத்திற்கு வந்தடைவதற்கு 60 வருடங்கள் ஆகின்றன. இந்த 60 வருட காலத்தை 'பிருகஸ்பதி மன்வந்திரம்' என அழைக்கிறார்கள்.











































புத்தாண்டு செய்யும் முறை

முதலில் பரிசுத்தமான உள்ளத்துடன் இறைவணக்கம் செய்யுங்கள். இந்த வையகத்தார் கனவு காண்பவைகளை விட மிகுதியான அற்புதங்களைப் பிரார்த்தனைகளால் சாதிக்க முடியும் என்று ஒரு ஆங்கிலப் புலவர் கூறியிருக்கிறார் (More things are wrought by Prayers than this world dreams of - Alfred Lord Tennyson).

நன்கு சரியான பக்குவத்தில் இருக்கும் 12 மாதங்களைத் தேர்ந்து எடுத்துக்கொண்டு அவைகளை மாசு மறுவற நன்கு கழுவி, பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளவும். அதாவது, எதிர்பாராது நமக்கேத தெரியாமல் அவைகளின் மூலை முடுக்குகளில் படிந்திருக்கும் கடந்த காலத்தின் தீராப்பகை மனக்காழ்ப்பு, வெறுப்பு, குரோதம், சிறுமைத்தனம், பொறாமை, முதலியவற்றின் ஞாபகங்களின் மிகச் சிறு துளிகளையும் அறவே நீக்கி, காலக்களஞ்சியத்தில் அப்பொழுதே உருவாகிய புத்தம் புதிய மாதங்களாகக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதத்தையும் எபொழுது வேண்டுமோ அப்பொழுது, முப்பது அல்லது முப்பத்தொன்று பாகங்களாக (தினங்களாக) கச்சிதமாக சிதறலில்லாமல் செதுக்கி வைத்துக் கொள்ளவும். தயவு செய்து எல்லா மாதங்களையும் ஒருங்கே ஒரே சமயத்தில் செய்து வைத்துக் கொள்ள வேண்டாம் (சிலர் அவ்வாறு செய்து எல்லாவற்றையும் வீணாக்கி விடுகிறார்கள்).

ஒவ்வொரு தினத்திலும் கீழ்க்கண்ட பொருட்களைச் சேறுங்கள்

ஒரே அளவில் பற்றுறுதி, துணிவு, பொறுமை, உழைப்பு (சிலர் இதை ஒதுக்கிவிட்டு, மற்றெல்லாவற்றின் நறுமணச் சுவையையும் கெடுத்து விடுகிறார்கள்), மற்றும், நம்பிக்கை, தாராள மனப்பான்மை, ஈரநெஞ்சம், ஓய்வு (இதை விட்டு விட்டால், எண்ணெயில்லாது தயாரித்த கலவையைப் போலாகும்), இறை வணக்கம், த்யானம், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திடமான குறிக்கோள், ஒரு தேக்கரண்டியளவு உற்சாகம், ஒரு துளி கேளிக்கை, ஒரேயொரு சிட்டிகை மடைமை!), மேலாகத் தெளிக்கப் பட்ட விளையாட்டு, கடைசியில் ஒரு குவித்த கோப்பையளவு மகிழ்ச்சியுள்ள மனநிலை.

இப்பொழுது (April 14) குதூகலத்துடனும் மகிழ்ச்சியுடனும் துடங்குங்கள் சர்வஜித் வருடத்தை!

எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லாது வேரொன்றறியேன் பராபரமே

- தாயுமானவர் பராபரக்கண்ணி.

சீனிவாசன்











































           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button