Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
எத்தனை கடவுளர்?
கீதா சாம்பசிவம்


Photo: Lord Nataraja and Iswari procession

இத்தனை கடவுள்களா நமக்கு?

ஆச்சரியாமாய் இல்லை? நமக்கு மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள் என்று? சில பேருக்குச் சந்தேகம், சிலருக்குக் குழப்பம். பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்டேன்னு ஒருத்தர், மாரியம்மனுக்கு மொட்டை போடுங்கன்னு இன்னொருத்தர். எத்தனை சாமிக்குச் செய்யறதுன்னு ஒருத்தர். இப்படிப் பல பேர் நம்மிடையே இருக்கிறாங்க இல்லையா?

நம்மளோட தர்மம் எல்லாத்தையுமே அனுமதிக்கிறது. நீங்க சாமி எல்லாம் இருக்குன்னு நம்பிக் கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் இறைவன் ஒருத்தரே தான்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு குழம்பவே வேண்டாம். நம்ம எல்லாருக்கும் எல்லாமே பிடிக்குமா? பிடிக்காது இல்லையா? ஒருத்தருக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். இன்னொருத்தருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஒருத்தருக்குப் புத்தகம் படிக்கப் பிடிக்கும். வேறு சிலருக்குப் புத்தகம்னாலே வேப்பங்காய். சிலர் சங்கீதம் ரசிப்பாங்க. சிலருக்குப் பாட்டுன்னாலே ஒளரங்கசீப்போட வாரிசு மாதிரி இருப்பாங்க.

அது போல் நம்மில் சிலர் குழந்தை மனசோட இருப்பாங்க. சிலர் ரொம்பப் பெரியவங்க மாதிரி நடந்துப்பாங்க. மனிதர்களிலேயே இவ்வளவு வித்தியாசம் இருக்கிறப்போ கடவுள்களை இத்தனை வித்தியாசத்தோடு அவரேவா படைச்சுப்பார். இல்லை. நாம தான் நமக்கு வேண்டிய மாதிரிக் கடவுளை சிருஷ்டிச்சுக்கறோம். அதாவது நினைச்சுக்கறோம்.

குழந்தைக் கண்ணனை ஒருத்தருக்குப் பிடித்தால் இன்னொருத்தருக்குப் பிள்ளையாரைப் பிடிக்கிறது. வேறொருத்தர் முருகனைப் பார்த்துக் கும்பிட்டால் சிலர் சிவனைத் தவிர வேறு ஸ்வாமி இல்லைம்பாங்க. சிலரோ சிவன் என்ன சிவன்? அந்தச் சக்தி தான் முக்கியம்பாங்க. இன்னும் சிலர் ஸ்ரீவிஷ்ணுவே நம்மை எல்லாம் காத்து ரக்ஷிக்கிறார்னு சொல்வாங்க. எது எப்படி இருந்தாலும் கடவுள் ஒருவரே! அவரை நாம் நமக்குச் செளகரியமான பேர்களில் கூப்பிடுகிறோம். நம்முடைய மனச்சாந்திக்காக அவருக்குக் கல்யாணம் செய்து வைக்கிறோம். நாம் அந்தக் கல்யாணங்களைக் கொண்டாடுவதின் மூலம் திருப்தி அடைகிறோம். இப்போ உங்களையே எடுத்துக்குங்களென், நீங்க உங்க அம்மா, அப்பாவிற்குப் பையன் அல்லது பெண். உங்க தாத்தா, பாட்டிக்குப் பேரன் அல்லது பேத்தி, உங்களோட நண்பர்களுக்குச் சிநேகிதன் அல்லது சிநேகிதி, உங்களோட சகோதர சகோதரிகளுக்குச் சகோதரன் அல்லது சகோதரி. நீங்க ஒருத்தரே இவ்வளவு அவதாரம் எடுக்க வேண்டி இருக்கிறது இல்லையா இந்தச் சின்ன வயசிலேயே.

இன்னும் பெரியவங்க ஆகிக் கல்யாணம் ஆச்சுன்னா கணவனுக்கு மனைவி அல்லது மனைவிக்குக் கணவன். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பா அல்லது அம்மா. இப்படி மாறுபட்ட அவதாரங்களை நாமே எடுக்கும்போது கடவுள் பல அவதாரங்களை எடுப்பதில் என்ன சந்தேகம்? அதுவும் நம்மளோட நன்மைக்குத் தான் எடுக்கிறார். நம்ம கால் 2 தான். கை2 தான். ஆனால்ஒவ்வொரு காலிலும், கையிலும் ஐந்து விரல்கள் இருக்கின்றன. 2 காலும் சேர்ந்து நடந்து போவது ஒரே இடத்துக்குத் தான். 2 கையும் சேர்ந்து செய்வது ஒரே காரியத்தைத் தான். அது போல் நமக்குப் பிடித்த கடவுள் வேறே வேறேயாக இருந்தாலும் எல்லாக் கடவுள்களும் சங்கமம் ஆவது ஒரே இடத்தில் தான். நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றாற் போல் நம்முடைய மனதுக்குப் பிடித்த கடவுள்களை நாம் கும்பிடுகிறோம்.

வீரம் தேவைப் படுகிறவர்கள் சக்தியையும். குழந்தை மனம் கொண்டவர்கள் குழந்தைக் கண்ணன், பிள்ளையாரையும், செல்வம் தேவைப்படுபவர்கள் மஹாலட்சுமியையும், கல்விக்காக ஹயக்கிரீவர் மற்றும் சரஸ்வதியையும் நம்மைக் காத்து ரட்சிப்பதற்காக ஆஞ்சநேயரையும் கும்பிடுகிறோம். ஆனால் எல்லாரும் சொல்வது ஒரே வார்த்தை தான் . அது கடவுளை நம்பினார் கை விடப் படார். என்பது தான். புரியாட்டிச் சொல்லுங்க. இன்னும் விளக்க முடியுதான்னு பார்க்கிறேன்.

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button