Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all
   
    என்னைப் பற்றி

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
இப்போ படிக்கிற நேரம்
தமிழ்த்தேனீ





             

அன்புக் குழந்தைகளே,

நாம சந்திச்சு ரொம்ப நாளாச்சே!

உங்களுக்கும் அரைவருஷப் பரிக்ஷை. நானும் என்னோட பேரனைப் பாக்க துபாய் போய்ட்டேன்

பரிக்ஷைஎல்லாம் நன்னா எழுதி நிறைய மார்க் வாங்கி எல்லாரும் சந்தோஷமா இருப்பீங்க, ஒரு மாசம் லீவுலே தீம் பார்க், கடற்கரை, சினிமா எல்லாம் சந்தோஷமா அனுபவிச்சிருப்பீங்க.

இப்போ மறுபடியும் பள்ளிக்கூடம் திறந்தாச்சு, படிக்க ஆரம்பிச்சீட்டீங்க, அப்பிடித்தான் இருக்கணும்.

WORK WHILE YOU WORK
PLAY WHILE YOU PLAY

அப்பிடீன்னு ஒரு சொல்வழக்கு ஆங்கிலத்திலே இருக்கு.

அந்தந்த நேரத்திலே அது அதைச் செஞ்சுட்டோம்னா நாமளும் நிம்மதியா இருக்கலாம், அதுனாலே இப்போ படிக்கிற நேரம். நன்னா படிங்கோ, முழுவருடப் பரிக்ஷை எழுதி முதல் மார்க் வாங்கி நல்லபடியா அடுத்த வகுப்புக்கு போய்ட்டா எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கும்.

இங்கே துபாயிலே காலையிலே பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லாம் சுறுசுறுப்பா பள்ளிக்கூடத்துக்கு போறதைப் பாக்கும் போது எனக்கு உங்க நினைவுதான். சாலையிலே போகும்போது உங்கள்ள சிலர் கார்லே போவீங்க, சிலர் ஆட்டோவிலே போவீங்க, சிலர் சைக்கிள்ள போவீங்க. எந்த வாகனத்துலே போறோங்கிறது முக்கியமில்லே எதுலே போனாலும் பாதுகாப்பா போய்ட்டு வரதுதான் முக்கியம். பாதுகாப்பா இருந்தாதான் மறுபடியும் விடுமுறை வரும்போது அந்த விடுமுறையை சந்தோஷமா கழிக்கலாம், இல்லையா? நான் சொல்றது சரிதானே?

இங்கே துபாய்லெ பள்ளிக்கூடத்திலேருந்து பிள்ளைகளை ஒரு பேருந்து பத்திரமா கூட்டிண்டு போய் மறுபடியும் வீட்டுலே கொண்டு வந்து விடறாங்க. நம்ம நாட்டிலேயும் இது மாதிரி பேருந்துகள் இருக்கு, பள்ளிக்கூடம் நடத்தறவாளே அனுப்பறா.

சமீபத்திலே ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.

பள்ளிப் பேருந்தை விட்டுக் கீழே இறங்கினவுடனே பாதுகாப்பா பிளாட்பாரத்துக்குப் போய் அங்கே நின்னு உங்களோட மத்த நண்பர்களுக்கு டாட்டா சொல்லுங்க, அதுதான் பாதுகாப்பானது. ஒரு பிள்ளை, பள்ளிக்கூட பேருந்துலேருந்து இறங்கி அந்தப் பேருந்து பின்னாலேயே நின்னுருக்கான், இதைக் கவனிக்காத பேருந்து ஓட்டுனர் அந்தக் குழந்தையை பேருந்தாலே இடிச்சு தள்ளிட்டாராம்.

எவ்வளவு ஆபத்தா இருக்கு பாத்தீங்களா?

அதுனாலே எப்பவுமே ஆபத்தில்லாத பாதுகாப்பான வழியைக் கடைப்பிடிக்கணும், புரியறதா? அதே மாதிரி ஆட்டோவிலே போகும்போது காலை ,கையை வெளியே நீட்டக் கூடாது, பேருந்துலே போகும்போது பேருந்து நின்னப்புறம்தான் இறங்கணும். சைக்கிள்ளே போற பிள்ளைகள் பாதையிலே ரெண்டு பக்கமும் பாத்துட்டு வண்டிகள் வருதான்னு கவனிச்சு அப்புறம்தான் ஓட்டணும். அதே மாதிரி சாலைகளைக் கடக்கும்போது கவனமா பாத்சாரிகள் கடக்கும் இட்த்திலேதான் பாதையைக் கடக்கணும்.

இது மாதிரி பாதுகாப்பான வழி முறைகளையெல்லாம் கடைப்பிடிப்பீங்களா?

நீங்கள்ளாம் நல்ல பிள்ளைகள், அதுனாலே எப்பவுமே பாதுகாப்பான வழி முறைகளை கடைப்பிடிப்பீங்க.

அன்புடன்
தமிழ்த்தேனீ




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants