-
மார்கழி மாதம்
- தமிழ்த்தேனீ
மார்கழி மாதம் தினமும் வாசலில் கோலமும், வாயில் திருப்பாவையும், மனதில் ஆண்டாளின் நினைவுகளும் ரங்க மன்னாரின் அழகும் உலா வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், ஆனாலும் அலுப்பு தட்டுவதே இல்லை. சொல்லப் போனால் ஒவ்வொரு முறையும் குதூகலமாக புதியதைப் பார்க்கும் உணர்வே மேலிடுகிறது,
என்ன காரணம் என்று ஆராய்ந்தால் திருப்பாவையிலும், ஆண்டாள் நாமத்திலும், திருவரங்கன் நாமத்திலும் பொதிந்திருக்கும் அத்துணை பரவசங்களையும் ஒரு சேர அனுபவிக்க நம்மால் முடியவில்லை, அல்லது அனுபவிக்க நமக்குத் தெரியவில்லை, அதனால் சுவையான பொருளை இன்னும், இன்னும், இன்னும் வைத்துக்கொண்டு சுவைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்னும் உணர்வு மேலிடுதல் போலே நம் ஆழ்வார்களையும், பெருமானையும் நினைக்கும் போதே பக்திச் சுரங்கத்தில் ஆழ்ந்து விடுகிறோமா!
தானாகவே ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பி நம்மை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறது. அவற்றின் சுவை அறிந்து துய்க்க ஆரம்பிக்கும் முன்னரே காலச்சக்கரம் விரைவாக ஓடி அடுத்த மார்கழியைக் கொண்டுவந்து நம் முன்னே காட்டுகிறது. நாமும் மறந்து போன வாய்ப் பாட்டை முதலிலே இருந்து சொல்லிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வருதல் போன்று ஆண்டாளையும் ரங்க மன்னாரையும், திருப்பாவையையும், திருவெம்பாவையையும், அரங்கனையும் முதலில் இருந்து நினைத்துப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம்.
மறு முறையும் தொடர்வோம் எப்போது முழுமையாக சுவைப்போம் என்னும் ஏக்கத்துடன்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















