Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

  என்னைப் பற்றி

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்


Bookmark this page
பஞ்சாங்கத்தின் பெருமை!
காயத்ரி


Article on Astrology related to Panchangam

ஐந்து என்ற சொற்றொடரோடு, மனித வாழ்வு, ஆலய வழிபாடு, ஜோதிடம் ஆகிய மூன்றும் நெருங்கிய தொடர்பு உடையவை. மனிதனுக்குள்ள ஐம்புலன்கள் கண், காது, மூக்கு, வாய் மற்றும் செவி ஆகியவை. மனித உடல் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின் கலவையால் ஆனது. ஆலய வழிபாட்டில், பஞ்சபூதத் திருத்தலங்கள் பெருமை வாய்ந்தவை. அதே போல், ஜோதிடத்திலும் பஞ்சாங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பஞ்சாங்கமும் ஐந்து என்ற எண்ணோடு தொடர்பு உடையது. திதி-வாரம்-நட்சத்திரம்-யோகம்-கரணம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததுவே பஞ்சாங்கம்.

இவை ஐந்தும், நாம் கண்ணால் காணுகின்ற சூரியன், மற்றும் சந்திரனோடு தொடர்புடையன. திதி என்றால் என்ன? விண்வெளியில் சந்திரன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும், சூரியன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவே திதியாகும்.

திதியின் பெயர்கள் என்ன?

பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி மற்றும் சதுர்த்தசி.

இவை அனைத்தும், வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் பொதுவானவையாகும். வளர்பிறையில், 15வது திதியாக வருவது பௌர்ணமி. தேய் பிறையில் 15 வது திதியாக வருவது அமாவாசை. வளர்பிறை என்பதை சுக்கில பட்சம் என்றும், தேய்பிறை என்பதை கிருஷ்ண பட்சம் என்றும் கூறுவார்கள்.

நாம் கொண்டாடும் பண்டிகைகள் யாவும் திதிகளின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகின்றன. உதாரணத்திற்கு அட்சய திருதியை, பிள்ளையார் சதுர்த்தி, நாக பஞ்சமி, கந்த சஷ்டி, ரத சப்தமி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ராம நவமி, விஜய தசமி, வைகுண்ட ஏகாதசி, அதனைத் தொடர்ந்து வரும் துவாதசி, நரக சதுர்த்தசி - இப்படிப் பல பண்டிகைகளைக் கொண்டாட வழி காட்டுவது திதி.

இந்தத் திதியை அறிந்து கொள்ள பஞ்சாங்கம் அல்லது நாம் பயன்படுத்தும் நாட்காட்டி உதவும். astrogayathri.

மழலைகள் ஆசிரியர் குழு என் படைப்புகள்




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants