-
பயிற்சி
- தேனீ மாமா
அன்புக் குழந்தைகளே,
வாங்க வாங்க, ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் பாத்து.
எல்லாரும் லீவுலே அவா அவாளுக்கு பிடிச்ச ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்திருப்பேள். நன்னா ஜாலியா இருந்துதா? இன்னிக்கு நான் உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல விஷயம் சொல்லித் தரப்போறேன்.
இந்த உலகத்திலெ முறையான பயிற்சி இருந்தா நாம் எதையும் சாதிக்க முடியும்னு பல பெரியவா நிரூபிச்சிருக்கா. பயிற்சி அப்பிடீன்னா என்ன அப்பிடீன்னு நான் உங்களுக்கெல்லாம் சொல்லித்தரப் போறேன்.
நீங்களே பாத்திருப்பீங்க, உங்க வீட்டிலே ஒரு தம்பியோ, தங்கையோ பொறந்திருக்கும், அப்பிடி சின்னக் குழந்தையா பொறந்த அந்த பாப்பா கொஞ்சம் கொஞ்சமா நிமிந்து பாக்கறது, அப்புறம் கவுந்துக்கறது, அப்புறம் தவழறது, அப்புறம் ழுந்து உட்காந்துக்கிறது, அப்புறம் எழுந்து நிக்கறது, அப்புறம் நடக்கறது, அப்புறம் ஓடறது. இது எப்பிடி அந்தக் குழந்தையால முடிஞ்சிது? இதுக்குப் பேருதான் பயிற்சி. எடுத்த ஒடனே ஓட முடியுமா, கொஞ்சம் கொஞ்சமாதான் வரும். அப்பிடி அடுத்தடுத்து முயற்சி பண்றதுக்கு பேருதான் பயிற்சி.
பயிற்சின்னாலே ரெண்டு பயிற்சி இருக்கு. ஒண்ணு உடற் பயிற்சி, ரெண்டாவது மனப்பயிற்சி.
மனப்பயிற்சி முறையாப் பண்ணாலே உடற்பயிற்சி தானே வரும், அதுனாலே மனசுலே நாம முன்னுக்கு வரணும், நல்ல பதவிகள் எல்லாம் வகிக்கணும், நாட்டுலெ எல்லாரும் பாராட்றா மாதிரி நாமளும் ஆகணும் அப்பிடீன்னு முடிவு எடுத்து, அதுக்கு வேணுங்கிற பயிற்சியை ஆரம்பிச்சு, இடைவிடாம செயல்பட்டாலே எல்லாதையுமே நாம அடையலாம். அதுனாலே முதல்லே மனதைக் கட்டுப்படுத்தற பயிற்சியை சொல்லித்தரேன்.
உங்களுக்குப் பிடிச்ச தாமரைப் பூ, அல்லது ஸ்பைடர் மேன், அல்லது ஏதாவது ஒரு பெருமாள், அதை மனசுலெ நெனைச்சுண்டு அந்த உருவத்தை மனசுலெ கற்பனை செஞ்சுண்டு, அதுலேயே லயிச்சு முதல்லே ஒரு நிமிஷம் வேற எந்த சிந்தனையும் இல்லாம அதே ஞாபகமா இருக்க முடியறதான்னு முயற்சி செய்யுங்க, அப்பிடி நாள்பட நாள்பட அந்த ஒரு நிமிஷ நேரத்தை கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு நிமிஷம், மூணு நிமிஷம் அப்பிடீன்னு அதிகரிச்சுண்டே போயி, குறைஞ்சது ஒரு இருபது நிமிஷம் அதையே நினைச்சுண்டு இருந்து பாருங்கோ.
தானாவே உங்க மனசு பக்குவமாயிடும். படிக்கிற படிப்பு மனசிலே அப்பிடியே பதியும், எதுவும் மறக்காது. எல்லாக் கலைகளையும் கத்துக்கற அளவுக்கு உங்களுக்கு ஞானம் வரும்.
இதுக்குதான் நம்ம பெரியவா எல்லாம் தியானம் செய்யறா. அப்பிடி தியானம் செய்ய சுலபமான வழியைத்தான் இப்போ நான் உங்களுக்கு சொல்லிக் குடுத்து இருக்கேன்.
நாளையிலேருந்து தியானப் பயிற்சி ஆரம்பிக்கலாமா? அடேடே எல்லாரும் சரீன்னு சொல்றேளே! இப்பிடித்தான் இருக்கணும், எல்லாத்தையும் கத்துக்கணும்னு ஆசை இருக்கணும். நீங்க எல்லாருமே ரொம்ப நல்ல குழந்தைகள்.
தேனி மாமா நல்லதுதான் சொல்றார்னு உணர்ரேளே அதுவே எனக்குப் பெருமையா இருக்கு.
அன்புடன்
தமிழ்த்தேனீ
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














