மனிதனும் மிருகமும்
காயத்ரி
விருந்து!!
ஒரு சமயம் ஒரு ஞானி தன் சீடர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தாராம். அனைவரும் விருந்திற்கு வந்தாயிற்று. விதவிதமான உணவு வகைகள் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. அதன் வாசனையும், அதனை அழகு படுத்தி வைத்திருந்த விதமும் மிகவும் நேர்த்தியாய் இருந்தது. சீடர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். "ஆகா! மிக அருமையான விருந்து. நாம் திரும்பி செல்லும் போது நமக்குப் பிடித்தமான உணவு வகைகளை கேட்டு வாங்கி செல்வோம். அதை வைத்து இரண்டு நட்கள் சமாளித்து விடலாம்" என்று! அத்துடன் நில்லாமல் அந்த உணவு வகைகளை எடுத்துச் செல்லவும் வேண்டிய பாத்திரங்களையும் சேகரித்து அவற்றை சமையல்காரனிடம் கொடுத்து வைத்திருந்தனர்.
இந்த விஷயம் ஞானியின் காதுகளுக்கு போயிற்று. அவர் எதுவுமே பேசவில்லை. அவர் அனைவரையும் விருந்துண்ணுமாறு அன்புடன் அழைத்தார். சீடர்கள் அனைவரும் உண்ணத் தொடங்குமுன், ஞானி. "ஒரு நிமிடம் சீடர்களே, நாம் இப்போது மனிதர்களைபோல் உண்ணப் போகிறோமா? அல்லது விலங்குகளைப் போல் உண்ணப் போகிறோமா?" என்று கேட்டார்.
அனைவரும் ஏகோபித்த குரலில், "மனிதர்களைப் போல்தான்" என்று கூறினர்.
அதைக் கேட்ட ஞானி, அப்படி என்றால் அது மிகவும் கெட்டது. ஏனெனில் விலங்குகள் தங்களுக்குப் போதுமான உணவு கிடைத்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடும்" என்றார்.
கேட்ட சீடர்களுக்கு மிகவும் வெட்கமாகி விட்டது. அவரவர் வைத்திருந்த பாத்திரத்தை அவரவர் திரும்ப எடுத்துக் கொண்டனர். ,p> நீதி: மனிதனின் குணமறிந்தே ஒரு வேளை உணவை மட்டுமே கொள்ளக் கூடிய வயிறாகப் படைக்கப்பட்டிருக்கிறது.
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















