Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
   
    என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
இறைவனைக் காண்போம் - 11
நடராஜன் கல்பட்டு





தேனீ தின்னும் பச்சைக் குருவி

தேனீக்களைத் தின்று வாழ்வதெற்கென்றே ஒர் பறவையைப் படைத்திருக்கிறான் ஆண்டவன். அதுதான் தேனீ தின்னும் பச்சைக் குருவி. இதன் வண்ணத்தைப் பார்த்து சிலர் இப் பறவையை கிளியின் குஞ்சோ என்று எண்ணிவிடக் கூடும். ஆனால் இதன் அலகும் கம்பிபோல் நீண்டிருக்கும் வால் சிறகுகளின் நடு சிறகும் இது கிளிக் குஞ்சல்ல என்பதைக் காட்டி விடும்.

இந்தக் குருவி கிராமப் புரங்களில் தந்தி, மின் கம்பிகளின் மீதோ, வேலிக் கம்பிகளின் மீதோ அல்லது செடிகளின் ஒரு உயர்ந்த கிளையின் மீதோ உட்கார்ந்திருக்கும். திடீரென அது சிறு தூரம் பறந்து சென்று பின் திரும்பி வந்து முதலில் உடகார்ந்திருந்த இடத்திற்கே வந்து சேரும். அப்போது பார்த்தால் அதன் அலகில் ஒரு தேனீ இருக்கும். தலையை சற்றே தூக்கி இரண்டு மூன்று விழுங்கலில் தேனீயைத் தின்னும்.

ராம பாணம் குறி தப்பாது என்பார்கள். வல்லரசுகள் படைத்த ஏவு கணைகள் கூட சில சமயம் குறி தப்பலாம். ஆனால் தேனீத் தின்னியின் குறி ஒரு நாளும் தப்பாது.

பல தேனீக்களை உட்கொண்ட கொஞ்ச நேரத்துக்குப் பின் தேனீத் தின்னும் குருவி அதன் வாயினால் சுமார் ஒரு சென்டிமீடர் நீளம் உள்ள நீண்ட கோழி முட்டை வடிவிலான ஒரு கருப்புக் கட்டியை வெளியே துப்பும். அதில் அப் பறவையால் ஜீரணிக்க முடியாத தேனீயின் இறக்கை, கால்கள் மற்றும் உடல் கூடு இவை இருக்கும்.

வாய் வழியே என்ன வரப் போகிறது?

தேனீத்தின்னி கூடுகட்டி வாழ்வது மண் திட்டுகளில் எலி வளை போன்று செய்த வங்குகளில். கூட்டில் குஞ்சுகள் இருந்தால் ஒவ்வொரு முறையும் தேனீயைப் பிடித்ததும் வளைக்குள் சென்று மறைவதைப் பார்க்கலாம்.

வானவில் தேனீத் தின்னி

வானவில் தேனீத் தின்னியின் (Rainbow Bee eater) வால் சிறகுகளின் நடு இறகு ஊசிபோல் நீண்டு இருப்பதைப் பாருங்கள்.

இயற்கையின் எழிலில்தான் இறைவன் நாம் பார்த்து ரசிப்பதற்கு எத்தனை காட்சிகளை அளித்துள்ளான்!

நடராஜன் கல்பட்டு

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button