Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
செல்லக் குழந்தைகளே
தமிழ்த்தேனீ





அன்புள்ள குழந்தைகளே,

வாங்க வாங்க, எல்லாருக்கும் இனிய மாலை வணக்கம்.

இன்னிக்கு ஒரு முக்கியமான செய்தியைப் பற்றி உங்களுக்கெல்லாம் சொல்லப் போறேன். ஆமாம், சமீபத்திலெ தமிழ் நாட்டுலே பூகம்பம் வந்ததே, உங்கள்ள எத்தனை பேருக்கு தெரியும். அட, எல்லாரும் கையை தூக்கறீங்களே, அப்பிடித்தான் இருக்கணும். நாட்டுலெ நடக்கிற விஷயங்களைப் பத்தி உடனே உடனே தெரிஞ்சுக்கணும். அப்போதான் பொது அறிவு வளரும்.

அந்த பூகம்பம் வந்த அன்னிக்கி நிறைய பேரு கட்டிடமெல்லாம் இடிஞ்சு விழுந்து அந்த கட்டிட இடிபாடுக்கு நடுவுலெ மாட்டிண்டு பாதிக்கப் பட்டா தெரியுமா? அப்போ சில புத்திசாலிகள் தங்களோட பணம், நகைகள் எல்லாத்தையும் எடுத்துண்டு கடற்கரைக்கு போய் உக்காந்துட்டாங்க. அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? இங்கதான் கட்டிடம் இல்ல, அதுனாலெ பாதுகாப்பா இருக்கும்னு சொன்னாங்க. அவங்களைப் பாத்த நான் ஆச்சரியப் பட்டேன். அது மாதிரிதான் ஆபத்துக் காலங்கள்ள நாம் பாதுகாப்பா இருக்கணும். ஆனா எனக்கு என்ன யோசனை வந்துது தெரியுமா? இப்பிடி பாதுகாப்பா நாம் கடற்கரையிலெ போய் உட்கார்ந்துண்டு இருக்கும் போது சமீபத்திலெ வந்துதே, அது மாதிரி சுனாமிங்கர பேரலை வந்தா என்ன ஆகும்னு.

அப்போ, எங்கே போனாலும் நமக்கு பாதுகாப்பு இல்லை. எப்பவுமே நம்மைச் சுத்தி இருக்கறவா சந்தோஷமா இருந்தாதான் நாமளும் சந்தோஷமா இருக்க முடியும். அது சரி, எதுனாலே இப்பிடி பூகம்பம், சுனாமி எல்லாம் வறது தெரியுமா? நாம் வாழற பூமி முக்கால் பகுதி நீரினாலெ சூழப்பட்டு இருக்கு. கால் பாகம்தான் நிலம். நீங்கள்ளாம் கேள்விப் பட்டிருப்பீங்க, பூகோள பாடத்திலெ படிச்சிருப்பீங்க, வட துருவத்திலெ அன்டார்டிகா அப்பிடீன்னு ஒரு பனிப் ப்ரதேசம் இருக்கு. அங்க எல்லாம் பனிமலையா இருக்கும், தண்ணி உறைஞ்சு போய் ஐஸ் கட்டியா இருக்கும். அங்க வெப்பமே கிடையாது,

ஆனா நாமெல்லாரும் ஓட்ற வாகன எல்லாத்திலே இருந்தும் கரியமில வாயு வெளியே வறது. அளவுக்கு அதிகமா உஷ்ணம் வெளியெ வறது, அதுக்கும் மேல ஓசோன் அப்பிடீங்கர வாயு மண்டலத்திலெ ஓட்டை விழுந்துடுத்து. அதுனாலே சூரியனோட வெப்பம் பூமியை அதிகமா தாக்கும் அப்பிடீங்கறா விஞ்ஞானியெல்லாம். ஆக சூரியனோட வெப்பமும் அதிகமாயிடுத்து. மரங்கள் நாமெ வெளியிடற கரியமில வாயுவை, வெப்பத்தையெல்லாம் தாங்கள் வாங்கிண்டு நமக்கு நல்ல சுத்தமான பிராணவாயுவை கொடுக்கறது. நாமதான் எல்லா மரத்தையும் வெட்டிட்டு வீடு கட்ட ஆரம்பிச்சுட்டோமே. அதுனாலே மரங்களெல்லாம் குறைஞ்சு போச்சு. நிலத்தடி நீர் குறைஞ்சு போச்சு. அதுனாலெ வேற பூமியோட வெப்பம் இன்னும் அதிகமாயிடுத்து. அதுனாலே பனி மலையெல்லாம் உருக ஆரம்பிச்சுடுத்து. பனி மலையெல்லாம் உருகினா கடல்ல வந்து சேரும். கடல்ல வந்து அத்தனை தண்ணியும் சேர்ந்தா கடலோட நீர் மட்டம் பூமியோட மட்டத்தை விட அதிகமாகும். அப்பிடி ஆனா என்ன ஆகும்?

பூமி கடல்ல முழுகிப் போகும், பூகம்பம் வரும், சுனாமி வரும். இதெல்லாம் தடுக்கணும், இல்லையா? நன்னா யோசிச்சு பாருங்கோ, நமக்கு நம்ம அம்மா எத்தனை உதவி செய்யறா, ஆனா நாமெ யாராவது அம்மாவுக்கு உதவி செய்யணும்னு நெனைக்கிறமா? இல்லை. நம்ம அம்மா நன்னா இருந்தாதானே நமக்கு உதவி செய்வா. அதேபோல நம் நாடு, உலகம் எல்லாம் நன்னா இருந்தாதானே நாமளும் சௌக்கியமா வாழ முடியும். அதுனாலே நாம எல்லாரும் இன்னிக்கு ஒரு உறுதி மொழி எடுத்துக்குவோம். எங்கே, எல்லாரும் சொல்லுங்க, இனிமே கூடியமட்டும் கரியமில வாய்வை வெளியேத்தர வாகனங்களோட பயன் பாட்டைக் குறைச்சுக்குவோம். மரங்களையெல்லாம் வெட்ட மாட்டோம், இன்னும் பல பயன் தரும் மரங்களை நடுவோம். இயற்கை செல்வங்களை பாழ்படுத்த மாட்டோம். அம்மாவுக்கும், அன்னை பூமிக்கும் ஆபத்து என்றால் உதவ தயங்க மாட்டோம்.

அப்பிடித்தான், இப்போ சொன்னீங்களே, அதையெல்லாம் இப்போ சொல்லிட்டு மறந்துடக் கூடாது. வாழ்க்கையிலெ கடைபிடிக்கணும், புறிஞ்சுதா? சரி, இனிய மாலை வணக்கம் நாளைக்கு சந்திப்போமா?

அன்புடன்

தேனீ மாமா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button