தாயென்று கும்பிடடி பாப்பா
- செல்லக் குழந்தைகளே
தமிழ்த்தேனீ
அன்புக் குழந்தைகளே,
எல்லாரும் சௌக்கியமா?
கடவுளைக் காண வேண்டுமா?
என் பேரன் ஹரிப்ரசாத் நிறைய யோசிப்பான். அவன் என் கிட்ட வந்து, "தாத்தா, கடவுள் இருக்காரா? அப்பிடி இருந்தா அவரைக் காட்ட முடியுமா? கடவுள் அப்பிடீன்னு ஒரே ஒரு சக்திதான் இருக்குன்னா எதுக்கு இத்தனை கோயில்கள் இருக்கு?"ன்னு கேட்டான். நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.இன்னிக்கு அதைப்பத்தி சொல்லலாம்னு இருக்கேன், சொல்லட்டுமா?
இருப்பது ஒரே சக்திதானே, அதுதானே கடவுள், அப்போ எதுக்கு இத்தனை கோயில்? கடவுளைக் காட்ட முடியுமா?
நியாயமான கேள்வி. உங்களுக்கெல்லாம் கூட மனசிலெ இருக்கும். அதுக்கு என்ன விடைன்னு பார்ப்போமா?
எல்லா நாட்டுலேயும் சூரிய கிரகணம்னு ஒண்ணு வருது, அதாவது சாஸ்திரப்ரகாரம் ராகுங்கிற பாம்பு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சூரியனை விழுங்கிட்டு, மீண்டும் விழுங்கின சூரியனை வெளி விடறதுன்னு சொல்லுவா. விஞ்ஞானத்திலெ பூமியோட சுழற்சி, எல்லா கிரகங்களோட சுழற்சியாலே கிரகங்கள் இடம் மாறும்போது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவுலெ சந்திரன் வரும். அதுனாலே பூமிலெ இருக்கறவாளுக்கு சூரியன் தெரியாது. அப்புறம் கொஞ்ஜம் கொஞ்ஜமா சந்திரன் விலகும் போது சூரியன் தெரியுது அப்பிடீங்கறா!
விஞ்ஞானிகள் அந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணாலே பாக்கக்கூடாது. அப்பிடிப் பார்த்தா கண்ணு பாதிக்கப் படும்கறா. அதுக்கு ஒரு கருப்புக் கண்ணாடியைப் போட்டுண்டு பாருங்கறா, ஏன் அப்பிடி சொல்றா?
நம்ம கண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட சக்திதான் இருக்கு. திடீர்னு அதிகமான வெளிச்சம் நம்ம கண்ணுலெ பட்டா கண்ணு கெட்டுப் போயிடும், அதான் அப்பிடி சொல்றா.
3 பரிமாணத் திரைப்படம் ஒண்ணு வந்துது. அதப் பாக்கறதுக்கும் அதே மாதிரி ஒரு கருப்புக் கண்ணாடி குடுத்தா, அப்போதான் சரியா தெரிஞ்ஜுது, அதையும் போட்டுக்கலைன்னா தெளிவாத் தெரியலை. அது மாதிரிதான் கடவுள், அவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர், ப்ரகாசமானவர். அந்தப் ப்ரகாசத்தை நாம பாக்கணும்னா பக்தி, யோகம், தியானம் மாதிரி சில கருப்பு கண்ணாடிகளைப் போட்டுண்டு, நமக்கு சக்தியை ஏற்படுத்திண்டு, அப்புறம் பார்த்தாதான் கடவுளும் தெரிவாரு.
ஹூம், சொல்ல மறந்துட்டேனே, நாம் வசிக்கற பகுதிலே டிரான்ஸ்பார்மர்ன்னு ஒண்ணு இருக்கும். அதுலேருந்துதான் நமக்கெல்லாம் மின்சாரம் வருது. ஆனா மின்சாரம் அங்கேயும் இருக்கு, அதுக்கு மின்சாரம் எங்கே இருந்து வரது தெரியுமா?
நம்ம நாட்டுலே மின்சாரம் தயாரிக்கிற அனல் மின் நிலையத்துலேருந்து வரது. அது சரி அனல்மின் நிலையத்துலெ போயி நிறைய மின்சாரம் இருக்கற இடத்துலெ நாம மொத்தமா மின்சாரம் வர இடத்துலெ அதோட சக்தி தெரியாம ஒரு மின் விசிரியை நாம போட்டோம்னா என்ன ஆகும்? மின்விசிரி பத்திக்கும் எரிஞ்ஜு சாம்பலாய்டும்.
அனல் மின் நிலையத்துலெ இருக்கற மின்சாரம் கடவுள் மாதிரி, ரொம்ப சக்தி அதிகம். அதை ஒவ்வொரு இடத்திலேயும் டிரான்ஸ்பார்மர்ன்னு ஒரு கருவி வெச்சு அது மூலமா நமகெல்லாம் அனுப்பறா. அதே மாதிரி கடவுள் ஒரு பெரிய சக்தி. அதை ஒவ்வொரு பகுதியிலேயும் கோயில்னு ஒண்ணு கட்டி அது மூலமா நாம் தரிசிக்க ஏற்பாடு செஞ்ஜுருக்கா. அதுனாலதான் எல்லா இடத்திலேயும் கோயில் கட்றா அப்பிடீன்னு சொன்னேன். என்னொட பேரனும் புறிஞ்ஜுண்டான். உங்களுக்கும் புறிஞ்சிருக்குமே.
அதே மாதிரி என்னோட பேரு கிருஷ்ணமாச்சாரி. ஆனா உங்களுக்கெல்லாம் தேனீ மாமா. இன்னும் சில பேருக்கு தமிழ்த்தேனீ. சிலபேருக்கு நான் பெரியப்பா, சில பேருக்கு நான் சித்தப்பா, சிலபேருக்கு நான் அப்பா, என் பொண்டாட்டிக்கு புருஷன், என் அம்மாவுக்கு பிள்ளை, என் மாமனார் மாமியாருக்கு மாப்பிள்ளை, என்னோட பசங்களோட குழந்தைகளுக்கு நான் தாத்தா.
ஆனா நான் கிருஷ்ணமாச்சாரிதானே?
அது மாதிரிதான், இருக்கறது ஒரே கடவுள், ஒரே சக்திதான், இருந்தாலும் அவா அவாளுக்குப் பிடிச்சா மாதிரி பிள்ளையார், முருகன், சிவன், சக்தி நாராயணன், கிருஷ்ணன், குருவாயூரப்பன், ஏசு, அல்லா அப்பிடீன்னு கூப்படறா அவ்ளோதான். ஆனா கடவுள் ஒண்ணுதான், உலகத்துலெ நம்மளையெல்லாம் காப்பாத்தற ஒரே சக்தி கடவுள்தான். எந்தப் பேருலெ கூப்ட்டா என்ன, கடவுள் கடவுள் தானே. மின்சாரம் இருந்தாதான் லைட் எரியும், பேன் ஓடும், எல்லாம் இயங்கும். நமக்குத் தெரியறது மின்சாரம் இருக்கு, தொட்டா ஷாக் அடிக்கும்னு. ஆனா மின்சாரத்தைக் காட்டுங்க, நான் கண்ணாலெ பாத்தாதான் நம்புவேன்னு பிடிவாதம் பிடிக்கறா சிலபேரு. அதே மாதிரி கடவுளைக் காட்டுங்க அப்போதான் நம்புவேன் அப்பிடீன்னும் பிடிவாதம் பிடிக்கறா சிலபேரு. அது சரியா? தப்பு. புறிஞ்ஜுதா?
இதே மாதிரி விவேகானந்தர் ஒரு தடவை பிடிவாதம் பிடிச்சார். கடவுளை சில மகான்கள் நமக்கு காட்டுவா, ஆனா அந்த மஹா சக்தியை பாக்கறதுக்கு நமக்கு சக்தி இருக்கா? அந்த சக்தியை ஏற்படுத்திண்டு அப்புறமா கடவுளைக் காட்டுன்னா காட்டலாம்னு நிரூபிச்சிருக்கார் ராம க்ருஷ்ண பரம்ஹம்சர்னு ஒரு மகான். அது என்னன்னு நாளைக்கு சொல்றேன்.
உங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் திறந்தாச்சு, வீட்டுக்குப் போயி கடவுளை நமஸ்காரம் செய்துட்டு நல்லாப் படிங்க நாளைக்குப் பாப்போம்.
இனிய மாலை வணக்கம்.
அன்புடன்
தேனீ மாமா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















