தாயென்று கும்பிடடி பாப்பா
- செல்லக் குழந்தைகளே
தேனீ மாமா
அன்புக் குழந்தைகளே,
எல்லாரும் சௌக்கியமா?
பள்ளிக்கூடம் லீவு விட்டாலும் விட்டா, உங்க பாடு எல்லாம் கொண்டாட்டம்தான். ஆமா, இந்த லீவுல என்ன பண்ணப் போறீங்க? சினிமா பாக்கலாம், வீ .ஜீ.பீ. கோல்டன் பீச் போகலாம், எம்.ஜீ.எம். போகலாம், கிஷ்கிந்தா போகலாம், ஜாலியா கொண்டாடலாம். என்ன இருந்தாலும் படிக்கிற நேரத்திலெ நன்ன படிச்சுட்டு, நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டு இந்த விடுமுறையை கழிக்கிற ஜாலி இருக்கே, அது எதுலேயும் வராது.
அதுவும் உங்களோட இந்த குழந்தைப் பருவம் உலகத்திலேயே ரொம்ப நல்ல ஜாலியான நேரம்.
ஆனா ஒண்ணு, எங்க போனாலும் நம்மோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம், எப்பவும் ரொம்ப பாதுகாப்பு உணர்வோட இருக்கணும், ஏன் தெரியுமா....?
நாமெல்லாரும் அடிக்கடி நம்ம வீட்டு சுவத்திலெ பாக்கறமே பல்லி (lichard) அதை கவனிச்சு பாத்திருக்கிங்களா? அது எப்பவாவது கொஞ்ஜம் அஜாக்றதையா இருக்கும்போது கதவு இடுக்கில மாட்டிண்டு அதோட வால் அறுந்து போயிடும். ஆனா கொஞ்ஜ நாள் கவனிச்சு பாத்தீங்கன்னா, அதோட வால் தானாவே வளந்துடும். இயற்கையாவே அதுக்கு அந்த மாதிரி அமைப்பை ஸ்வாமி ஏற்படுத்திக் குடுத்திருக்கார்.
ஆனா நம்மோட கை கால் ஏதாவது அஜாக்கிறதையினால அது மாதிரி அறுந்து போச்சுன்னா அதுக்கப்புறம் வளராது. அதுனால ரொம்ப ஜாக்கிறதையா இருக்கணும். நம்மோட ஆரோக்கியம் நன்னா இருந்தாதான் நாம சந்தோஷமா இருக்க முடியும். எவ்ளோ வேணா விளையாடலாம், ஆனா விளையாடும் போதே, ஜாக்கிறதை உணர்வு இருந்துண்டே இருக்கணும்.
அதே மாதிரி ஒரு தெருவைக் கடந்து அந்தப் பக்கம் போகணும்னா ரெண்டு பக்கமும் பார்த்து, வண்டி எதுவும் வரலையான்னு பாத்துட்டு போகணும்.
இதுமாதிரி ஜாக்கிறதையா இருந்தா அடுத்த தடவையும் இதே மாதிரி ஜாலியா சந்தோஷமா விடுமுறையை கழிக்கலாம் புறியறதா?
அது மட்டுமில்லை, இந்த விடுமுறையிலெ இது வரைக்கும் நாம் கத்துக்காத ஏதாவது ஒரு கலையைக் கத்துக்கலாம்.
சங்கீதம் படிக்கலாம், வாய்ப்பாட்டு, அல்லது ஏதாவது உங்களுக்கு பிடிச்சாமாதிரி வீணை, வயலின், புல்லாங்குழல், கடம் இப்பிடி ஏதாவது கத்துக்கலாம், இது வரைக்கும் தெரியாத வேற மொழி நிறைய இருக்கு அதெல்லாம் கத்துக்கலாம். ஓவியம் வரையக் கத்துக்கலாம்.
நாம கத்துக்கறதுக்கு இந்த உலகத்திலெ நிறைய விஷயம் இருக்கு, இதுலெ ஏதாவது ஒண்ணு கத்துண்டு விடுமுறை முடிஞ்ஜ உடனே பள்ளிக்கூடம் போயி நான் இதுமாதிரி கத்துண்டேன் அப்பிடீன்னு சொல்லிப் பாருங்களேன். உங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும், உங்க டீச்சர், உங்க பெற்றோர் எல்லாருக்குமே மகிழ்ச்சியா இருக்கும். நாமளும் மகிழ்ச்சியா இருந்துண்டு அடுத்தவாளையும் மகிழ்ச்சியா வைப்போமே.
“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் நேயமுடன் கற்று நாம் மகிழ்வோமே“
எங்கே சொல்லுங்க பாப்போம், நாமும் மகிழ்ச்சியாய் இருந்து எல்லோரையும் மகிழ்ச்சியாய் வைத்திருப்போம்.
அப்பிடித்தான். குழந்தைகளா நீங்கள்ளாம் கற்பூரம் மாதிரி, ஒருவாட்டி சொன்னாலே புறிஞ்ஜுக்கிறீங்க. இப்பிடிதான் இருக்கணும், எனக்கு உங்களையெல்லாம் பாக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
சரி, சந்தோஷமா விடுமுறையை கொண்டாடுங்கோ, ஆனா என் கிட்ட வந்து எப்பிடி சந்தோஷமா கொண்டாடினேள்னு சொல்லணும், சரியா?
இனிய மாலை வணக்கம்
அன்புடன்
தேனீ மாமா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















