தமிழ்ப் புத்தாண்டு
சீனு தாத்தா
கடந்த டிசம்பரில் தனது எழுபத்து எட்டாவது வயதைத் தாண்டி எழுபத்து ஒன்பாவது வயதில் விடிகாலையில் விழித்தெழும் ஒவ்வொரு நாளையும் ஒரு புத்தாண்டாகக் கருதி வாழ்ந்து வரும் முதியவனாயினாயிருப்பினும் பல்லாயிர வருடங்களுக்கு முன்பே வானூலிலும் (வான்கோளங்களின் ஆய்வியல்), கணிநூலிலும் (சோதிடம்) மிக உன்னதநிலையில் முன்னேறியிருந்த நம் முன்னோர்களால் துவக்கப்பட்ட முறையைத் தவறாது, நாளை பிறக்கவிருக்கும் சர்வதாரி வருடத்தை (ஸ்ரீ ராமன் அவதரித்த அதே புண்ணிய நாளும் கூட) பேராவலுடனும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டே, என் பேரன்பைக் கவர்ந்த அனைத்து உருப்பினருடன் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் இந்த மடலைச் சமர்ப்பிக்கிறேன்.
தமிழ் புதுவருடத்திய பஞ்சாங்கத்தை வாங்க முடியாத எனது உடல்நிலை காரணத்தால், சேலத்தில் இருக்கும் எனது மூத்த மாப்பிள்ளை நாளை பங்களூர் வரும்பொழுது மறக்காமல் நாங்கள வழக்கமாகப் பயன்படுத்தும் 'வாசன்' சுத்தத் திருகணித்ப் பஞ்சாங்கத்தைத் தன்னுடன் எடுத்து வருவதற்கு வாக்களித்திருக்கிறார். இரண்டு நாட்களாக பங்களூரில் BSNL BROADBAND ஏதோ கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை. இன்றுடன் முடியவிருக்கும் சர்வஜித் வருடத்தைப் பற்றி அதன் பஞ்சாங்கம் கையிலிருந்தபடியால், இவ்வருடத்தைப் பற்றி என்னால் முடிந்த அளவு ஒரு கட்டுரையைத் தயாரித்து ஆகிரா அவர்களுக்கு அனுப்பினேன். மிகப் பெரிய மனதுடன் அதை 'மழலைகள்.காம்' இதழில் பரிசுரித்தார்.
தற்போதுள்ள இந்த சங்கடமான நிலையில், செய்வதறியாமல் இருந்தவன், எப்படியாவது ஒரு மடலைக் குழுவினற்காவது அனுப்பியாக வேண்டும் எனும் ஒரு வீம்புப் பிடியில், கடவுளை வேண்டிக்கொண்டு, இதை எழுதி முடித்து 'BSNL DIAL-UP'ல் எவ்வளவு நேரமானாலும் அனுப்பிவிடுவதென்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். என்னிடமிருக்கும் இவ்வருடத்திய (சர்வஜித்) பஞ்சாக்கத்தின் ஆதாரப்படியே பிறக்கவிருக்கும் சர்வதாரி வருடத்திற்குச் சரியான பிற வருடங்கள் பின்வருமாறு:
கலியுகாதி 5110 திருவள்ளுவர் 2039 ஆங்கிலம் 2008 பசலி 1417 ஹிஜ்ரி 1429
தமிழ் கல்வெட்டுகளில்/ஓலைச்சுவடிகளில் சொல்லப்பட்ட யுகங்களின் வருஷங்கள்
கிருதாயுகம் - 17,28,000 திரேதாயுகம் - 12,96,000 துவாபரயுகம் - 8,64,000 கலியுகம் - 4,32,000
என்னுடைய கம்ப்யூடரில் பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த தகவல்களைப் பொருக்கி எடுத்து என்னால் முடிந்த வரை திருத்தங்கள் செய்து, எல்லாரையும் குழப்பாமல் இருக்குமாறும் முயன்று கீழ்க்கண்ட விவரங்களை கொடுக்க விழைகிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு 'அன்பன்' என்றொருவர் ஏதோ ஒரு இடத்தில் கீழ்க்கண்டபடி எழுதியிருந்தார்.
"சும்மா ஒரு பேச்சிற்கு கிருதாயுக ஆரம்பத்தில் தமிழ் பிறந்ததாக வைத்துக் கொண்டாலும் தமிழ் முப்பத்தியெட்டு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரத்து நூற்றி ஏழு ஆண்டு முடிந்து முப்பத்தியெட்டு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரத்து நூற்றி எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஒரு சிலர் தமிழராயிருந்தும் தமிழ் பேச மறுப்பினும், ஒரு சில தமிழ் சந்ததிகள் தமிழை ஒதுக்கினும் தமிழ் வாழும், லட்சோப லட்ச வருடங்களுக்கும், அதற்கு மேலும். தமிழின் வயதைப் பார்க்கும் போது 'வாழ்க தமிழ்' என்று வாழ்த்தும் வயது எனக்கிருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறதெனக்கு. வணங்குறேன் தமிழே தமிழரை விட்டு நீங்காதே நீ என்று.
அன்பன்"
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறக்கம் செய்து வைத்திருந்த கீழ்க்கண்ட தகவல்களைப் படிக்கும் எனக்கே மிக ஆச்சிரியமாயிற்று, எப்படி அதை மற்றவர்களுக்கும் பரப்ப மறந்து விட்டேனென்று:
'மழலைகள்' உருப்பினர்கள் முன்பே இம்மாதிரி விவரங்களைப் படித்திருப்பாரென்று தோன்றினாலும் சட்டென ஏற்பட்ட ஆவல் மிகுதியினால் எழுதலாகுகிறேன. 'போர்' அடிக்கறாரே என்று தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம்.
இடைக்காட்டுச் சித்தர்
பதினென் சித்த்ர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் சங்கப்புலவரான இடைக்காடரினும் வேறானவர். இவரது காலம் கி.பி. 15ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. இவர் கொங்கணச் சித்தரின் சீடராவார். இவர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடா அல்லது தொண்டை மண்டலத்தில் உள்ள இடையன்மேடா என்பது ஆய்விற்குரியது. ஒரு சமயம் இவர் பொதிய மலைச்சாரலில் வழக்கம் போல் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது நவசித்தரில் ஒருவர் வந்து இவரிடம் பால் கேட்க, அவருக்குப் பால் முதலியன கொடுத்து உபசரிக்கவே அவரும் இவரது அன்பைக் கண்டு மகிழ்ந்து இவருக்கு ஞானத்தை உபதேசித்து விட்டுச் சென்றாராம்.இடைக்காட்டுச் சித்தர் 'ஆஸ்தான சித்தி' எனச் சொல்லப்படும் 8 மஹா சித்திகளில் தேர்ச்சியடைந்தவரானது மட்டுமல்லாமல் ஜோதிட சாத்திரத்தில் யாவரும் அதிசியிக்கும்படி மிகப் பெரிய வல்லுவராக விளங்கினாராம். ஒரு சமயம் அவருக்கும் அவரது நாட்டிற்கும் வருவதாக இருந்த துர்கதியை, தனது சித்தியின் சக்தியினால் தடுத்துக் காப்பாற்றினாராம்.
அறுபது தமிழ் வருடங்களுக்கும் (இவ்வருடத் தொடக்கத்திலேயே எழுதியுள்ளேன், சூரியனைச் சுற்றி, குரு கிரகம் 5 முறையும் சனி கிரகம் 2 முறையும் சுற்றி சூரியனுக்கு எதிராக ஒரே கோட்டில் வந்தடைவதற்கு 60 வருடங்களாகின்றனவென்றும் அவ்வறுபது வருடங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிப்பெயருள்ளது என்றும் எழுதியுள்ளேன். இடைக்காட்டுச் சித்தர் ஒவ்வொரு வருடத்தின் மேலும் அந்த வருடத்திற்குத் தக்க வென்பாவைப் பாடியுள்ளாராம். அம்மகான் பாடியதாகக் கூறப்படும் பாடல்களில் சிலவற்றைக் கீழேக்கொடுக்கின்றேன்:
ஆதி பிலவதில் அம்புவியில் மானிடர்க்கு
சோதனையாய் சாவு துன்பம் தோணுமே - நீதி
தரு பசுக்கள் மேய தலைமழையுண்டாம்
பருத்தியுப்பு ஆமணக்கு பாழ்.
வெகுதானிய (அறுவதில் 12வது வருடம்)
வெகுதானிய வருட மெய்தனியில் வெல்லம்
தருமாரி பெறியும்தான் முன் - முகில் சோர்ந்து
கொஞ்ச மழை பெய்யும் குலவு தழை தழைக்கும்
பஞ்சும் பருத்தி உப்பு பாழ்.
பிரமாதி: (அறுவதில் 13வது வருடம்)
வெய்ய பிரமாதியில் வேந்தர் கொடுமையிலும்
ஐயக்கேல் பஞ்சமடுக்குமே - செய்ய
பசுக்கள் மெலியும் பாரீர் குடிகள்
சிசுக்களுடன் அலைவர் தேர்.
விக்ரம (அறுவதில் 14வ்து வருடம்)
விக்ரம ஆண்டதனில் மேவிய நான்மாரி கொஞ்சம்
அக்கனுயர் காலழியுமே - தொக்க
பயிர்தீதாம் நோயும் பழியுமாம் பின்பு
செயிர்தீர்ந்த மழையாம் செப்பு.
விஷு (அறுவதில் 15வ்து வருடம்)
பானி விஷு வருடம் பாலகருக்கு பீடையுண்டாம்
கார்பொழிவதில்லை முற்காலத்தில் - ஏரி
பெருகாது பிற்காலம் பெய்யுமே மாரி
இறுகாலமும் சமனென்றிரு.
சித்திரபானு (அறுவதில் 16வது வருடம்)
சித்திரபானில் சிரக்க மழை மிகுந்து
வித்துள்ள வெல்லாம் விளையுமே - எத்திசையும்
பார்ப்பருக்கு ஆகாது பார்வேந்தர்க்கோலமாம்
தீர்ப்பாக பூமி பயம் செப்பு.
சுபானு : (அறுவதில் 17வது வருடம்)
சொன்னேன் சுபானுதனில் தொடரும் மழைக்கொஞ்சமாம்
பின்னே விளைவு பெருகாது மண்ணே மண்
மதிம கொளுந்தாம் மடியும் நாற்கால்ஜீவன்
சற்றும் சுகமில்லை தான்
தாரண: (அறுவதில் 18வது வருடம்)
தாரணத்தில் மாரி ஆறும் தரணியில் கேடும் உண்டாம்
ஓராய் சீவங்களுக்கு உய்யாது - பார்ப்பிணியால்
ஐயமடியுமே யாக்கும் குறைவாமே
வெய்யர் பயமே மிகும்
பார்த்திப: (அறுவதில் 19வது வருடம்)
தேசமிசை பார்த்திப வருடம் சிங்களத்தார்
தேசத்தார் நேசம் கெடும் அனந்த தேசத்து - ராஜர்
அநியாயம் செய்வர் ரதம் ஏரும் மாரி
இனிதாம் விளைவும் உளவாம்
அட்சய (அறுவதில் கிடைசி வருடம்)
அட்சயத்தில் பானி விளைவு அற்பமாமென சொன்னாலும்
நற்செயல்கள் மேவும் நலமுண்டாம் - இப்புவியில்
மாரியுண்டு வேளாண்மை வாவருவாய் தான்விளையும்
சீரனங்க ஓரும் தீரும்
(தேவையென்று தெரிய வந்தால் மற்றொரு முறை பாடல்கள் ஒவ்வொன்றின் பொருளையும், சித்தர் வாக்கு எப்படிப் பலித்ததும் என்றும் எழுதக் காத்திருக்கிறேன். மேலும் சில் உச்சரிப்புக்களையும் சரி செய்யவேண்டி வருமென நினைக்கிறேன்)
அவ்வறுபது வருடங்களின் பெயர்களை மீண்டும் கீழே கொடுக்கின்றேன்.
2 விபவ Vibhava 1988--1989
3 சுக்ல Sukla 1989--1990
4 பிர்மோதூத Pramodhudha 1990--1991
5 ப்ர்சோற்பத்தி Prajorpati 1991--1992
6 ஆங்கீரச Angirasa 1992--1993
7 ஸ்ரீமுக Srimukha 1993--1994
8 பவ Bhava 1994--1995
9 யுவ Yuva 1995--1996
10 தாது Dhatu 1996--1997
11 ஈஸ்வர Isvara 1997--1998
12 வெகுதானிய Vehudhanya 1998--1999
13 பிரமாதி Pramathi 1999--2000
14 விக்கிரம Vikrama 2000--2001
15 விஷு Vishu 2001--2002
16 சித்திரபானு Chitrabanu 2002--2003
17 சுபானு Subanu 2003--2004
18 தாரண Tarana 2004--2005
19 பார்த்திப Parthiba 2005--2006
20 விய Viya 2006--2007
21 சர்வசித்து Sarvajit 2007--2008
22 சர்வதாரி Sarvadhari 2008--2009
23 விரோதி Virodhi 2009--2010
24 விக்ருதி Viruti 2010--2011
25 கர Kara 2011--2012
26 ந்ந்தன Nandana 2012--2013
27 விஜய Vijaya 2013--2014
28 ஜய Jaya 2014--2015
29 மன்மத Manmatha 2015--2016
30 துன்முகி Dhunmuki 2016--2017
32 விளம்பி Vilambi 2018--2019
33 விகாரி Vikari 2019--2020
34 சார்வரி Sarvari 2020--2021
35 பிலவ Plava 2021--2022
36 சுபகிருது Subakrit 2022--2023
37 சோபகிருது Sobakrit 2023--2024
38 குரோதி Krodhi 2024--2025
39 விசுவாசுவ Visuvasuva 2025--2026
40 பராபவ Parabhava 2026--2027
41 பிலவங்க Plavanga 2027--2028
42 கீலக Kilaka 2028--2029
43 சௌமிய Saumya 2029--2030
44 சாதாரணா Sadharana 2030--2031
45 விரொதிகிருது Virodhikritu 2031--2032
46 ப்ரீதாபி Paridhabi 2032--2033
47 பிரமதீச Pramadhisa 2033--2034
48 ஆனந்த Ananda 2034--2035
49 ராட்சச Rakshasa 2035--2036
50 நள Nala 2036--2037
51 பிங்கள Pingala 2037--2038
52 காளயுக்தி Kalayukti 2038--2039
53 சித்தார்த்தி Siddharthi 2039--2040
54 ரௌத்திரி Raudri 2040--2041
55 துன்மதி Dunmati 2041--2042
56 துந்துபி Dundubhi 2042--2043
57 ருத்ரோக்காரி Rudhrodhgari 2043--2044
58 ரக்தாட்சி Raktakshi 2044--2045
59 குரோதன Krodhana 2045--2046
60 அட்சய Akshaya 2046--2047
ஸ்ரீனிவாசன் (சீனு தாத்தா)
சீனு தாத்தாவின் இணையதளம்:




Your Feedback








