Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
செல்லக் குழந்தைகளே
தேனீ மாமா





அன்புக் குழந்தைகளே,

அடேடே! வாங்க வாங்க,

எல்லாரும் சௌக்கியமா? இனிய மாலை வணக்கம் சொல்லுங்க.

ஹூம், இன்னிக்கு புதுசா ஒரு விஷயம் சொல்லப் போறேன். நேத்திக்கு நானும் என் மனைவியும் தமிழ்நாடு கோஆப்டெக்ஸ், அதாவது கைத்தறிக் கழகம் நடத்தறா கண்காட்சிக்குப் போயிருந்தோம். அங்க உள்ள நுழைஞ்ஜவுடனே ரெண்டு பெரிய யந்திரம் வைச்சுருந்தா. அது என்னான்னு பாக்கலாம்னு கிட்டக்கப் போய்ப் பார்த்தேன். அதுக்குப் பேரு தான் தறி அப்பிடீன்னு சொன்னா. நாம போட்டுக்கறமே வித விதமா ஆடைகள், அதெல்லாம் அதுலதான் நெய்யறாளாம்.

அதாவது முதல்ல பருத்திச் செடின்னு ஒரு செடி இருக்கு. அந்தச் செடிலேருந்து பஞ்ஜு எடுப்பாளாம். அந்த பஞ்ஜுக்குப் பேரு பருத்திப் பஞ்ஜுன்னு சொல்றா. அந்தப் பருத்திப் பஞ்ஜை வெச்சுண்டு நூல் நூப்பாளாம். அந்த நூலை எடுத்துண்டு வந்து, அதுக்கு வேணும்கிற சாயம் ஏத்தி, அதை இந்தத் தரியிலெ கட்டி, ஒவ்வொரு இழையா அதுலெ கட்டி அதுக்கப்புறம் அதை ஆடையா எப்பிடி மாத்தறான்னு செஞ்ஜு காமிச்சா. ரொம்ப ஜோரா இருந்துது பாக்கறதுக்கு.

பாக்கறதுக்கு ஜோரா இருக்கு, ஆனா அதை நெய்யற அவாளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நமக்குத் தெரியுமா? அதைப் பாத்தவொடனே எனக்கு முக்கியமா நம்ம நாட்டு தேசக் கொடிலே இருக்குமே அந்த ராட்டை ஞாபகம் வந்துது. ராட்டை ஞாபகம் வந்தவுடனே, மஹாத்மா காந்தி ஞாபகம் வந்தது. நம்ம நாட்டுக்கே சுதந்திரம் வாங்கிக் குடுக்க அந்த ராட்டையைத்தானே ஒரு ஆயுதமா பயன் படுத்தினார் மஹாத்மா காந்தி. அவரே உக்காந்து ராட்டையிலெ நூல் நூப்பார், அந்த போட்டொ நீங்கள்ளாம் பாத்திருப்பேளே?

அதுதான் கதர் புரட்சி, நாம பட்டுச்சொக்காய், பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை எல்லாம் உடுத்திக்கிறோமே, அந்தப் பட்டு எப்பிடி உற்பத்தி பண்றா தெரியுமா? பட்டுப் புழுக் கூட்டை வென்னீர்லெ வேகவெச்சுப் பட்டு எடுப்பாளாம். அது மாதிரி வென்னிர்லெ வேக வைக்கும் போது, அந்தப் பட்டுப் பூச்சிக் கூட்டுலெ இருக்குற அத்தனை புழுக்களும் செத்துப் போயிடும் இல்லையா? அதுக்கப்புறமாதான் பட்டு உற்பத்தி செய்யறா. அதனாலதான் மஹாத்மா காந்தி எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது அப்பிடீனு சொல்லி, நம்ம நாட்டுலெ பட்டுத்துணியெல்லாம் உடுத்த மாட்டோம்னு சத்யாக்ரகம் பண்ணார்.

மஹாத்மா காந்திதான் பட்டு உடுத்துவதை நிறுத்தி, கதர் அணிவோம், அந்தக் கதரை நாமே தாயாரிப்போம்னு ராட்டையிலெ நூல் நூற்க ஆரம்பிச்சார். ஆனா இப்போ விஞ்ஞானம் வளந்திடுத்து இல்லையா? அதுக்கேத்தா மாதிரி இப்பொ கதரை அரசாங்கமே பெரிய பெரிய இயந்திரம் வெச்சுண்டு தயாரிக்கிறது. நம்ம நாட்டுக் கதர்த் துணியெல்லாம் வெளிநாட்டுலெ எல்லாரும் ஆசையா வாங்கிண்டு போய்ப் போட்டுக்கறா, அதுனாலெ நம்ம நாட்டுக்கு நிறைய வருமானம் வர்ரது.

அது மட்டுமில்லை, நம்ம நாட்டுலெ வெய்யில் அதிகம், அதுக்கு கதர்த்துணிதான் ரொம்ப நல்லதுன்னு மஹாத்மா காந்தி மாதிரி பல பெரியவா சொல்லி இருக்கா. நாமளும் இனிமே பட்டுத்துணியெல்லாம் போட்டுக்க மாட்டொம், கதர்த்துணிதான் போட்டுக்குவோம்னு ஒரு சபதம் எடுத்துக்கலாமா?

எல்லாரும் சொல்லுங்கோ, "இனிமே பட்டுத் துணி போட்டுக்க மாட்டொம். கதர்த்துணிதான் (பருத்தி ஆடைதான்) போட்டுக்குவோம்."

அப்பிடிதான் ஒரே குரல்ல சொல்லணும்.

சரி இன்னிக்கு ஒரு விஷயம் தெரிஞ்ஜுண்டோம். இனிமே நாளைக்கு வேற ஒரு நல்ல விஷயம் தெரிஞ்ஜுக்குவோம்.

சரி எல்லாரும் போய்ட்டு நாளைக்கு வாங்கோ.

இனிய மாலை வணக்கம்.

தேனீ மாமா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button