ஒருமைப்பாடு
முத்து. இராமமூர்த்தி
ஒருமைப்பாடு என்பது விரிந்து உயர்ந்த உள்ளத்தில் விளைகின்ற ஓர் ஒப்பற்ற உணர்வாகும். விரிவடையாத சுருங்கிய உள்ளத்தில் ஒருமைப்பாட்டு உணர்வு விளைவது என்பது கல்லில் பயிர் விளைவது போலாகும்.
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்நம்
என்று 'உயர்வு அவரவர் உள்ளத்தைப் பெறுத்தது' என்பான் வள்ளுவன். உள்ளம் பரந்திருந்தால் உயர்வு தானே உள்ளத்தை வந்தடையும், பரந்து விரியாத உள்ளத்தில் தியாகம், தொண்டு போன்ற பண்புகள் காணப் பெறா. தன்னலம், குறுகிய நோக்கம் போன்ற தன்மைகள் சுருங்கிய உள்ளத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து ஆட்சி செய்யும். எனவே எல்லை குறைந்த இதயத்தில், பேதம் பார்த்தல், பிரிவினை கோரல் போன்ற சீழ்மைத் தன்மைகள் அதிகமாக இருக்கும் ஆதலால் அவர்களின் விருப்பங்களும் செயல்களும் பெரும்பாலும் பிரிவினைகளுக்காகவும், வேறுபாடு மற்றும் பேதங்களை விரிவாக்குவதற்காகவுமே இருக்கும். ஆனால் விரிந்து பரந்து வளர்ந்த நெஞ்சத்திலே பிரிவினை உணர்வும், பேதம் பாராட்டலும் நிச்சயம் தோன்றா.
கம்பனின் காவியத்திலே ஒரு காட்சி - வாலி மேல் இராமன் அம்பு எய்கிறான். 'மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை' - அம்பிலே தெரியக் கண்ட வாலி, "ஒரு பகையும் இல்லாத என் மீது அம்பினை எய்தலாலே சூரியனின் மரபு அறம் துறந்தது" என்று நகைத்து,
"வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்து வள்ளல்
என்று பலவாறு இகழ்கிறான். ஆனால், 'தருமம் இன்னது என எண்ணிய பார்க்காமல் செயல் செய்த்தால் பெருமை நீங்கினாய்! என்ற விரிவினை இராமனின் மறுமொழியினைக் கேட்ட வாலியின் உள்ளம் உயர்கிறது. உயர்ந்து விரிந்த உள்ளத்தில் தான் செய்த தவறு புரிகிறது. புரிந்தபின்
தாய் எனநின்ற எம்பால்
ஆன வாலி உலகியல் பார்வையினின்று உயர்ந்து சென்று தருமநெறி கண்டு தத்துவ நோக்கிலே வளர்ந்து சென்றால் உள்ள தனது தெரியும்; உண்மை புரியும், அந்த உயர்ந்த நிலையிலே வேற்றுமை காணும் வேதனை நிலை இல்லை. இங்ஙனம் சிறந்து நிற்கும் சிந்தை இதந்தரு மனையின் நீங்கி தொழுநிட மறக்காத பக்குவம் கற்றுத்தரும்.
ஆகாய விமானம் தரையிலே நிற்கும் போது அதில் அமர்ந்திருப்போருக்குத் தரையில் உள்ள சிறுசிறு பொருள் கூட உரிய அளவில் தென்படுகிறது. ஆனால், அதே விமானம் மேலே உயர்ந்து பறக்கும் போது பெரிய பொருள்களும் உருவத்தில் சிறிதாகப் போய் விடுகின்றன. பிரிந்து கிடக்கும் சிற்றாறுகள் ஒன்றாக நமது பார்வைக்குக் காட்சியளிக்கின்றன. நாட்டில் பிரிவினைக் கோடுகள் எல்லாம் அழிந்து விடுகின்றன. நாம் மேலே உயர்ந்து செல்லச் செல்ல, கீழே உள்ள சிறுமைகள், பிரிவினைகள், பேதங்கள் மறைந்து விடுகின்றன. ஆம்! நாம் உள்ளத்தால் உயர உயர வேற்றுமைகள் மறைகின்றன. ஒருமைப்பாடு நிறைகிறது.
'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்'
என்பது தமிழ் மறையின் கட்டனை. ஒவ்வொரு குடிமகனும் எண்ணுவதெல்லாம் உயர்வானதாக இருந்தால் உண்மையில் உலகில் எங்கும் கொலை இல்லை; போராட்டம் இல்லை; பிரிவினை இல்லை; போர் இல்லை; அந்த ஒருமைப்பாட்டு நிலை உள்ளத்தில் வாய்க்கப் பெற்றால் சாதிகளோ, சமயங்களோ, இனங்களோ, பணமோ, தொழில்களோ, கொள்ளை வழிகளோ, காட்டு எல்லைகளோ நம்மைப் பிரித்தல் இயலாது.
(மூலம்: சிந்தனை ஒன்றுடையாள்)
உள்ளத் தனையது உயர்வு".
தூயவன் மைந்தனே! நீ பரதன்முன் தோன்றினாயே!
ஆவியை, ஜனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்நின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும்"
தலை என உணர லாமே
தீயன் பொறுத்தி என்றான்
சிறியன் சிந்தியா தான்




Your Feedback








