தாயென்று கும்பிடடி பாப்பா
- செல்லக் குழந்தைகளே
தேனீ மாமா
நம்மோட நாட்டின் பெயர் இந்தியா, பரத கண்டம்னு சொல்லுவா. நம்ப நாட்டோட முதல் ப்ரதான மந்திரி திரு ஜவஹர்லால் நேரு அவர்கள். அவர் பிறந்த தினம் அதாவது நவம்பர் 14, அந்த நாளைத்தான் குழந்தைகள் தினம்னு நாம கொண்டாடறோம். அவர் 1963ம் ஆண்டு இறந்து போனார், அதுக்கப்பறம்தான், நவம்பர் 14ஐ நாம எல்லாரும் குழந்தைகள் தினமா கொண்டாடிண்டு இருக்கோம்.
திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல ரொம்பப் ப்ரியமா இருந்தார், அவர் தன்னோட கோட்லெ எப்பவுமே ஒரு ரோஜாவை குத்திண்டு இருப்பார். அந்த ரோஜாவைக் குத்திக்கற வழக்கம் அவருக்கு எப்பிடி வந்துது தெரியுமா? ஒரு விழாவிலே ஒரு குழந்தை அவரோட கோட்லெ ரோஜாவைக் குத்தி விட்டுது, அவருக்கு அது ரொம்ப்பப் பிடிச்சுப் போச்சு. அவர் குழந்தைகளையும், ரோஜாவையும் ஒரே மாதிரி நேசிக்க ஆரம்பிச்சார். அவரைப் பத்தி வர எல்லா நிகழ்ச்சியிலேயும் அவரோட குழந்தைகள்தான், ப்ரதானமா இருப்பா.
அதுனாலே எல்லாரும் அவரை சாச்சா நேரு, நேரு மாமானு கூப்புடுவா. உங்களுக்கு ஒரு தேனீ மாமா மாதிரி எல்லாக் குழந்தைகளுக்கும் அவர்தான் நேரு மாமா. ஜவஹர்லால் பால பவனுக்குக்கூட அதுக்கப்புறம் குழந்தைகள் நாட்டு இல்லம்னு பேர் வைச்சா, அதுக்கப்புறம் எல்லா பள்ளிக் கூடத்திலேயும் குழந்தைகள் தினம் கொண்டாடறோம். சீருடை சரியா போட்டுண்டு, ரோஜாவைக் குத்திண்டு எல்லாக் குழந்தைகளுக்கும் இனிப்பெல்லாம் குடுத்து குழந்தைகள் தினத்தை கொண்டாடறோம், அதாவது நவம்பர் 14ம் தேதி. கோலப் போட்டி, மாறுவேடப் போட்டி மாதிரி பல போட்டிகள் குழந்தகளுக்கு வெச்சு அவாளுக்கு பரிசெல்லாம் குடுக்கற வழக்கம் ஆரம்பிச்சுது.
ஆமா, நீங்கள்ளாம் என்ன வேஷம் போடறதுன்னு யோசிச்சு வெச்சுருக்கேளா, எல்லாத்துலேயும் கலந்துக்கணும், ஆனா ஒண்ணு போட்டின்னு வந்துட்டாவே யாராவது மூணு பேர்தான் ஜெயிக்க முடியும். அதுனாலே மத்தவாள்ளம் கவலைப் படக் கூடாது. எல்லாரும் கலந்துண்டதனாலதானே மூணு பேர் ஜெயிக்க முடிஞ்ஜுது.
வாழ்க்கையிலே வெற்றி தோல்வி எல்லாம் ஸகஜம்னு எடுத்துண்டு போகணும். அடுத்த வாட்டி நாமெ ஜெயிக்கறதுக்கு வேண்டிய அத்தனை முயற்சியும் செய்யணும் தோல்வியைப்ம் பாத்து துவண்டு போகக் கூடாது. எல்லாத்தையும் அனுபவமா எடுத்துண்டு சந்தோஷமா வாழக் கத்துக்கணும். அதுக்குதான் குழந்தைகள் தினத்துலே எல்லா விதமான விளையாட்டுப் போட்டியெல்லாம் வைக்கிறா, புறியறதா?
தோல்விதான் வெற்றியோட முதல் படிக்கட்டு. இப்போ எல்லாரும் நேரு மாமாக்கு வந்தனம் சொல்லுங்கோ, நன்றி சொல்றது ரொம்ப நல்ல பழக்கம் புறியறதா?
நானு நேரு மாமாவைப் பத்தியும் குழந்தைகள் தினம் பத்தியும் சொல்லும்போது நம்ம நாட்டுக்குப் பேரு பரதகண்டம்னு சொன்னேன் இல்லியா, ஆமா, நம்ம நாட்டுக்கு பரத கண்டம்னு எப்பிடிப் பேரு வந்துதுன்னு யாரும் கேக்கவே இல்லையே, எப்பவுமே பள்ளிக் கூடத்திலெ உங்க டீச்சர் பாடம் நடத்தும்போது கவனிச்சுக் கேக்கணும். அது மாதிரி கவனிச்சுக் கேக்கும் போது சந்தேகம் வரும். அப்பிடி சந்தேகம் வரும்போது அதை கவனமா குறிச்சு வெச்சுண்டு அந்த வகுப்பு முடிஞ்ஜவுடனே டீச்சர்கிட்ட போய் சந்தேகத்தைக் கேக்கணும். அப்பவே கேட்டா பாடம் நடத்தறது தடைப்படுமொல்லியோ? அதுனாலெதான் சொன்னேன், இப்போ சொல்லட்டுமா நம்ம நாட்டுக்கு என் பரத கண்டம்னு பேர் வந்துதுன்னு.
ஆமா உங்களுக்கெல்லாம் தெரியுமா ராமாயணம்? ராமரைப் பத்தியும், மஹாபாரதம் கிருஷ்ணரைப் பத்தியும் நாமெல்லாரும் தெரிஞ்ஜுக்கறதுக்காக பெரியவா எழுதி வெச்சுருக்கா. ராமாயணம், வால்மீகின்னு ஒரு முனிவ்ர், கம்பர் துளசீதாசர், ராஜாஜீ, இப்பிடீ பல பெரியவாள்ளாம் எழுதி வெச்சுட்டுப் போயிருக்கா. அது ஒரு பெரிய கதை, அதுலே இருக்கற நிறையக் கதைகளை நான் ஒவ்வொண்ணா சொல்றேன்.
அந்த ராமாயணத்திலே இருக்கு நம்ம நாட்டுக்கு பாரத நாடுன்னு எப்டி பேரு வந்துதுன்னு அதை நாளைக்கு தெரிஞ்ஜுக்கலாமா?
இப்ப மணி ஆறு ஆகப் போறது நீங்கள்ளாம் வீட்டுக்குப் போய், கை கால சுத்தமா அலம்பிண்டு, பகவானோட சன்னதிலே நின்னுண்டு மனப்பூர்வமா ப்ரார்த்தனை பன்ணிட்டு, பள்ளிக் கூடத்திலெ குடுத்த வீட்டுப் பாடத்தையெல்லாம் முடிச்சுட்டு, அப்புறமா கொஞ்ஜம் ஓய்வு எடுங்கோ. அதுக்கு முன்னாடி அப்பா அம்மாக்கு ஏதானும் உதவி செய்யணுமான்னு ஒரு வார்த்தை கேளுங்கோ, அதுதான் அப்பா அம்மாக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். பெத்தவாளோட சந்தோஷம் தான் நமக்கெல்லாம் ஆசீர்வாதம், அவா ஆஸீர்வாதம் கடைச்சாதான் நாம் நன்னா இருக்க முடியும்.
ஜாக்ரதையா போய்ட்டு நாளைக்கு வாங்கோ. எல்லாரும் சொல்லுங்கோ, "தேனீ மாமாக்கு இனிய மாலை வணக்கம்" ஆஹா! மொத்த தேனியும் ஒண்ணா சேர்ந்து ரீங்கரம் செய்யறா மாதிரி சந்தோஷமா இருக்கு.
சரி எல்லாரும் போய்ட்டு நாளைக்கு வாங்கோ.
இனிய மாலை வணக்கம்.
தேனீ மாமா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















