சாதனைப் பெண்மணி
தமிழ்த் தேனீ

திருப்பதி மலைவாசா

சாதனைப் பெண்மணி

பெற்றோர்

எழுத்தாளர் பாலகுமாரனுடன்
மகிழும் நினைவுகள்:
1. எழுத்தாளர் பாலகுமாரனின் ரசிகையாக ஏறக்குறைய அவருடைய படைப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அவருடன் அடிக்கடி அளவளாவுவது.
2. பம்பாய் சகோதரிகள் எங்களுடைய அன்னை ஆர் கமலம்மாளின் தெய்வீகப் பாமாலை பாடியதற்காக அவர்களைப் பாராட்டிய தருணங்கள்.
3. டாக்டர் H.V. ஹண்டேவை அறிந்த நாள் முதல் இன்று வரை அவருடன் அன்புடன் மரியாதையாகப் பழகுதல்.
மலரும் நினைவுகள்:
1. காங்கிரஸ் மஹா நாடு சென்னை ஆவடியில் நடந்த போது சத்தியமூர்த்தி, ஜவஹர்லால் நேரு முன்னிலையில் நடனமாடியது.

3. 1985 டீ.டீ.டீ. தேவஸ்தான அலுவலகத்தில் (மல்லேச்வரம் ரோட்) வெங்கடேச சுப்ர பாதம் இரண்டாவது பரிசு அடைந்தது.
4. 64 வயதில் 2002ம் ஆண்டு ஓவியத்தின் மேல் ஆசை கொண்டு கரநாடகத்தில் ப்ரபலமான ப்ரபா மல்லேஷ் என்பவரிடம் பெயின்டிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இன்று வரை பலவிதமான ஓவியங்கள் தீட்டியது.
5. அதற்குப் பிறகு தஞ்ஜாவூர் பெயின்டிங் கற்றுக் கொள்ள ஆரம்பித்து கர்நாடகாவில் மிகப் ப்ரபலமான சித்ரகலா பரிஷத் என்னும் ஓவியக் கண்காட்சியில் மூன்று முறை நிறைய ஓவியப் படைப்புக்களை வைத்தது அவை அனைத்தும் அனைவராலும் பாராட்டப் பட்டு மகிழ்ந்தது.

கண்ணாடிப் பாவை
6. காயத்ரி க்ரியேஷன்ஸ் சகோதரி என்னும் அமைப்பில் நடந்த கண்காட்சியில் தன்னுடைய கலைப் படைப்புக்களை பார்வைக்கு வைத்து பாராட்டு பெற்றது.
7. இந்த 70 வயதில் இருதய திறப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மூன்று மாதங்களுக்குள் தனியாக கிளம்பி சென்னை வந்து என்னையும் அழைத்துக் கொண்டு அவர்கள் பிறந்த வீடு, வாழ்ந்த இடங்கள், பழகிய நண்பர்கள் தனக்கு காலத்தே உதவிய அத்துணை நல்லோர்களுக்கும் விலாசம் தேடிப்போய் நன்றி சொல்லிவிட்டு அனைவரையும் தன்னுடைய 70வது பிறந்த நாளுக்கு வரச்சொல்லி அழைப்பு கொடுத்தது.
பெற்று வளர்த்து, அன்பு பாசம், பொறுமை, திடசித்தம், தீர்க்கமாக முடிவெடுக்கும் திறமை, அத்துணை செல்வங்களையும் அளித்த அன்னை ஆர் கமலம்மாள் அவர்களுக்கும் தைரியம், விவேகம், போன்ற நற்பண்புகளை ஊட்டி வளர்த்த தந்தை ஆர் ரங்கஸ்வாமி அய்யங்கார் அவர்களுக்கும் ந்ன்றி சொல்லும் வாய்ப்பாக 70 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாட அருள் செய்த இறைவனுக்கு நன்றி சொல்லல்.
அவர்களுடைய 70வது வயது நிறைவு விழாவை மிக்க மகிழ்ச்சியுடன் அவருடைய குழந்தைகள் அனைவரும் தங்களுடைய தாயாரின் மகத்தான சேவையைக் கொண்டாடி தங்களின் தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக ,அவர்களுடைய 70வது வயது நிறைவு விழாவை மிக்க மகிழ்ச்சியுடன் அவருடைய குழந்தைகள் அனைவரும் 10ம் தேதி பிப்ரவரி மாதம் 2008 அன்று கொண்டாடப் போகிறார்கள்.
அன்புத் தம்பி
ஆர் .கிருஷ்ணமாச்சாரி என்கிற
தமிழ்த்தேனீ

எழுத்தாளர் பாலகுமாரன் மற்றும் சகோதரர் தமிழ்த் தேனீயுடன்

டாக்டர் H.V. ஹண்டே மற்றும் சகோதரர் தமிழ்த் தேனீயுடன்
பாம்பே சகோதரிகளுடன்
சுற்றம் சூழ மகிழ்ந்திருந்து...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













