Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
செல்லக் குழந்தைகளா
தேனீ மாமா





வாங்கோ வாங்கோ குழந்தைகளா,

உக்காருங்கோ, இனிய மாலை வணக்கம்.

இன்னிக்கு நான் ஒரு கச்சேரிக்கு போகணும்னு இருந்தேன், கச்சேரின்னா இசைக்கச்சேரி, இநத மாசம் டிசம்பர் மாசம், இசைவிழா நடக்கறது, அப்புறம் நீங்கள்ளாம் இங்க வந்து காத்திண்டு இருப்பேளே, அதுனாலெ இசைவிழாக்குப் போகாமெ இங்க வந்துட்டேன், உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லப் போறேன். நாம நன்னா படிக்கணும், ஆனா படிப்பு மட்டும் போறாது. காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுன்னு பாரதியார் பாடி இருக்கரோல்லீயோ? பாட்டும் கத்துக்கணும்.

உங்க எல்லாருக்குமே குரல் ரொம்ப இனிமையா இருக்கு. இசைன்னு சொன்னவுடனே எனக்கு மூணு பேர் ஞாபகத்துக்கு வரா, அந்த மூணு பேரும் இசையை வளக்கறதுக்கு ஆரம்ப கர்த்தா, அவா யாருன்னு தெரியுமா? முத்துஸ்வாமி தீட்சிதர், தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்யாமா ஸாஸ்திரிகள், இவா மாதிரி இன்னும் பல மஹான்கள் இசைய வளக்கறதுக்கு ரொம்பப் பாடு பட்டு இருக்கா. இசை தெரிஞ்ஜாதான் பாட்டு பாட முடியும்.

இசைன்னா என்னா தெரியுமா? ஸ்வரம், லயம், ராகம், தாளம் எல்லாம் சேர்ந்த்ததுதான். இசைன்னா ராகம் தெரிஞ்சுக்கணும், தாளம் தெரிஞ்சுக்கணும், ஸ்வரத்தோட பாடணும், தாளம் தப்பாம பாடணும். இதெல்லாம் முறையா சொல்லிக் குடுக்க ஆசிரியர்கள் இருக்கா, அவா கிட்டப் போய் குருவே எனக்கும் இசைய சொல்லிக் குடுங்கோ அப்பிடீன்னு கேட்டு பய பக்தியோட இசையக் கத்துண்டா நீங்களும் நன்னா பாடலாம், இசை அப்பிடீனாலே வாய்பாட்டு மட்டும் இல்லே, இசைய நாம முறையா கத்துண்டா, நிறைய இசைக்கருவிகள் எல்லாம் இருக்கு.

குழலூதும் கண்ணன் அவர் புல்லாங்குழல் ஊதி இந்த புவனத்தையே மயக்கினார், சரஸ்வதி கைல என்ன இருக்கு? வீணை. ஸரஸ்வதி படிப்புக்கும் இசைக்கும் தெய்வம். தும்புரு நாரதர் அப்பிடீன்னு சொல்லுவா. நாரதர் கைல எப்பவும் தும்புருன்னு ஒரு வாத்யம் வெச்சுண்டு நாராயண நாமம் பாடிண்டே எல்லா லோகத்துக்கும் போய்ட்டு வருவார். நந்தி தேவர் மிருதங்கம் வாசிப்பார், சிவன் நாட்டியம் ஆடுவார்.

அதுனாலே இசைன்னாலே வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள் நாட்டியம், நாடகம், எல்லாமே ஞாபகத்துக்கு வர்ரது. அதுனாலே படிப்புக்குன்னு ஒரு நேரம், பாட்டுக்குன்னு ஒரு நேரம், இப்பிடீ நாம கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு, வினாயகர் புராணம், சக்தி புராணம், ஹாபாரதம், சிவபுராணம், ராமாயணம், கந்தசஷ்டி கவசம், இதுலெ எல்லாம் நிறைய ஸ்லோகம் இருக்கு,அதெல்லாம் கத்துக்கலாம்.

ஹா சொல்ல மறந்துட்டேனே.. ஹரிப்ரசாத்னு எனக்கு ஒரு பேரன் இருக்கான். அவன் பாட்டு கத்துக்கறான். அவனும் என்னை நீங்கள்ளாம் கூப்படறா மாதிரி என்கிட்ட வந்து தேனீ மாமா... தேனீமாமா நான் நன்னாப் பாடுவேன்னு சொன்னான். குழந்தைகள் பாடறேன்னு சொன்னா அதைவிட இனிமையானது என்ன இருக்கு? நானும் அவனைப் பாடச் சொன்னேன், அவனும் ரொம்ப நன்னா பாடினான். அவனைப் பாடச் சொல்லி அதை நான் ஒலிக் கோப்பா மாத்தி இருக்கேன் அதை நாமெல்லாரும் போட்டுக் கேக்கலாமா ....?

பாட்டு: கேளுங்கள்

அன்புடன்

தமிழ்த்தேனீ

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button