பொங்கல் நினைவுகள்
தமிழ்த் தேனீ
பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம்
தினம் தினம் புதுப்பிக்கும் நம் உடலும்
சோர்வகற்றி வளம் சேர்க்கும் நம் மனமும்
புத்தம் புதுமலராய் நித்தம் நித்தம்
மலர்ந்தே வரும் ஆதவனின் வருகை
மாதவனின் தோற்றம் போலும்
வைய்யமெல்லாம் ஒளிகூட்டும்
தைமாதமதில் தைத்திருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே,நல் வேளையது தனிலே
முத்தான அரிசியுடன் இனிப்பான வெல்லமதை
அளவோடு நாம் சேர்த்து, காமதேனுவென்னும்
பசுவின் பால் சேர்த்து, பொங்கி வரும் வேளையிலே
இறைவன் நாமமது நாம் சொல்லி
நல்லறமும் தருமங்களும், பொங்கலோ பொங்கலென்று
மனமார்ந்து உரத்துச் சொல்லி, வைய்யகத்து மாந்தரெல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே, பொய்யகற்றி மெய்யுணர்ந்து
தாள் பணிவோம் ப்ரபஞ்ஜத்தை தினம் உழுது
ஞான ஒளி பரப்பும் ஆதவனை
பொங்கல் திருநாள்
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய் நன்றி கொன்ற மகற்கு“
உலகில் எத்துணையோ விக்ஞானக் கருவிகள் கண்டு பிடித்து விட்டோம். விஞ்ஜானம் அதி விரைவாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
1. உடல் உறுப்புக்களைக் கூடத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம், ஆனால் இன்னும் நம்மால் உயிரை தக்கவைத்துக் கொள்ளவோ, உயிரின் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளவோ, முடியவில்லை.
2. ஒவ்வொரு மனிதனின் மூளைக்குள்ளும் இருக்கும் மாலிக்யூல்களில் சேகரிக்கப் பட்ட அபூர்வமான சிந்தனைகளை, கண்டு பிடிப்புகளை இன்னொரு மூளைக்குள் இடம் மாற்றும் கருவியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அது மட்டும் கண்டு பிடிக்கப்பட்டால் பற்பல அறிஞர்களின் மூளைத் தொகுப்புக்களை வெகு எளிதாக இன்னொரு மூளைக்குள் ஏற்றிவிடலாம்.
இவை எல்லாம் இருக்கட்டும்; இத்துணைக் காலமாய் நமக்குப் பல விஞான முன்னேற்றங்களைத் தங்கள் வாழ்வின் சுவையான பகுதிகளை ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று கழித்துவிட்டு, தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த எத்துணையோ விஞ்ஞானிகளுக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதை விட முக்கியமாக நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள் உழவர்கள், விவசாயிகள்.
போகித் திருநாள்: நம் வீட்டில் சேரும் குப்பை, அழுக்குகள், இவைகளைக் களைந்து நெருப்பிலிட்டுப் பொசுக்கி, சுற்றுப் புறச் சூழலைச் சுத்தமாக்கும் திருநாளே போகி. அன்று எரியும் நெருப்பில் நம்முடைய மன அழுக்குகளையும் சேர்த்து எரித்து, நம்மையும் தூய்மைப் படுத்திக் கொண்டு, மீண்டும் புது வழ்வு துவங்கி மகிழ்ந்து நம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் நாளே போகி என்னும் திருநாள்.
இன்னும் முக்கியமாக அன்றாடம் உணவில்லையெனில் உயிர்வாழ முடியாத அத்துணை ஜீவராசிகளின் ஆதார சக்தியான உணவைத் தயாரிக்க, விளைவிக்கத் தங்களுடைய பொன்னான நேரங்களை உழைப்பை, வியர்வையை நமக்காகச் செலவழித்துவிட்டு, தங்களுக்கென்று ஒன்றும் சேர்த்து வைக்காத விவசாயிகள். இவர்கள் அத்துணை பேரையும் காட்டிலும் உயர்ந்தவர்கள், உத்தமர்கள், நம் உயிரைக் காப்பாற்றும் சக்திகள், உழவர்கள் ஜாதி, மதம், நாடு, என்னும் எந்த பேதமும் இல்லாத உலகக் காப்பாளர்கள், அமுத சுரபிகள் விவசாயிகளே.
அவர்களுக்கு அனைத்துலக மக்களும் நன்றி சொல்லும் விதமாகவும், அவர்கள் தானியங்கள் விளைவிக்க உதவிய அத்துணை சாதனங்களுக்கும் நன்றி சொல்லும் திருநாளே, ஏர், கலப்பை, இயற்கை, மாடுகள், எறும்பு, பறவைகள், மண்புழுக்கள், போன்ற பலருக்கும் நன்றி சொல்லும் விதமாக ஏற்பட்ட திருநாளே பொங்கல் திரு நாள்.
ஆகவே நன்றி சொல்வோம். அத்துணை நண்பர்களும் சர்க்கரைபொங்கல், வெல்லப் பொங்கல், வாழைப்பழம், கரும்பு இவைகளை உண்ண ஆரம்ப்பிக்கும் போது அந்த உழவர்களை மனதில் நினைத்து அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, முடிந்தால் அன்று ஒரு நாளாவது அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்துவிட்டு உண்போமானால் அதுதான் நாம் செலுத்தும் நன்றி. அனைத்துத் தமிழ் நண்பர்களுக்கும், உழவர்களுக்கும், விவசாயிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
தமிழ்த்தேனீ
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||


















