Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
செல்லக் குழந்தைகளே
தேனீ மாமா





அன்புக் குழந்தைகளே,

இனிய மாலை ஆசீர்வாதம்.

ஹூம், எல்லாருக்கும் இனிய மாலை வணக்கம், சொல்லுங்கோ பாப்போம், ஹும், அப்பிடித்தான்.

இன்னிக்கு திங்கட்கிழமை, நீங்கள்ளாம் பள்ளிக்கூடம் போய்ட்டு வீட்டுக்கு வந்து அம்மா சொன்னாளேன்னுட்டு உடனே இங்க வந்துட்டேளே. சந்தோஷமா இருக்கு. இந்தத் தேனீ மாமா பேர்லெ எவ்வளவு பாசம் வெச்சுருக்கேள்னு புறியறது. ஆமாம், பள்ளிக்கூடத்திலே கடைசீ வகுப்பு மைதானத்துலே விளையாடறதுதானே? அங்க விளையாடிட்டு, கை கால் அலம்பாமே முகத்தைக் கூட தொடைச்சுக்காமே வேர்த்து விறுவிறுத்து வந்திருக்கேளே. எல்லாரும் அதோ அந்தக் குழாயிலெ போய் நன்னா கை, கால், முகம் எல்லாம் அலம்பிண்டு இதோ, இங்க துணி இருக்கு நன்னா துடைச்சுண்டு வந்து உக்காருங்கோ, இல்லேன்னா ஜலதோஷம் பிடிக்கும். ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். ஆரோக்கியமா இருந்தாதான் தெம்பா இருக்கலாம். விளையாட்டுலே இருந்து படிப்பு வறைக்கும் எல்லாத்துலேயும் ஜெயிக்கலாம்.

ஓடி விளையாடு பாப்பாங்கற பாரதியார் பாட்டுக்கு என்னா அர்த்தம்னு சொல்லணும்னு பாக்கறேன் அதுக்குள்ள வேற ஏதோ பேசறோம்.

சுப்ரமணிய பாரதியார்ன்னு ஒரு கவிஞர் இருந்தாரு, அவருக்குச் சின்னக் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும், எனக்கும்தான். குழந்தைகளாகிய உங்களுக்குன்னு அவர் நிறையப் பாட்டுகள் எழுதி இருக்காரு.

ஓடி விளையாடு பாப்பான்னு ஒரு பாட்டு இருக்கு, அதை இப்போ நாம பாடிப் பாக்கலாமா? எங்கே நான் பாடறேன் என் கூடவே பாடுங்கோ.

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா

எவ்ளோ அழகா எழுதி இருக்காரு பாத்தீங்களா! தினமும் நாம எப்படி இருக்கணும்னு அழகாச் சொல்லி இருக்காரு பாரதியார். ஆமா, இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா? அதை முதல்லெ தெரிஞ்ஜுக்கணும்.

"ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒய்ந்திருக்கலாகாது பாப்பா"

அப்பிடீன்னா

நன்னா ஓடி விளையாடணும் அப்போதான் நம்ப உடம்பு நல்லா வளரும், நம்ம உடம்பிலேருந்து வெளியில வருதே வியர்வை. அப்பிடி வியர்வை வெளில வரா மாதிரி ஓடி விளையாடணும், அப்போதான் நம்ம உடம்பிலேருந்து வேர்வை வெளில வரும். இந்த வேர்வை அப்பிடீங்கறது நம்ம உடம்புலெ சேர்ந்திருக்கிற துர் நீர், அதாவது கெட்ட கழிவுகளை நம்ம உடம்பிலேருந்து வெளியேத்த நம்ம உடம்புல வேர்வை சுரப்பின்னு நிறைய இருக்கு. அதுதான் வேர்வையை வெளியேத்தி நம்மள ஆரோக்கியமா வைக்கிறது.

அது மட்டுமில்லை, குளிர் காலத்துலே நம்மை உடம்பை ரொம்பக் குளிராம வெய்யில் காலத்திலெ நம்ம உடம்பு சூடாகாம இருக்கறதுக்கு இந்த வியர்வை சுரப்பிகள் நிறைய வேலை செய்யறது.

ஓடி விளையாடுன்னு பாரதியார் சொன்னதுக்கு அதுதான் அர்த்தம். ஒரே இடத்துல உக்காந்துண்டே இருந்தா என்ன ஆகும்? உடம்புல கொழுப்பு சேரும், உடம்பு தடியாயிடும், அப்புறம் நம்மால ஓட முடியாது, நடக்க முடியாது, எல்லாம் கஷ்டமாயிடும். அதுக்குத்தான் நம்மை ஓடி விளையாடுன்னு சொல்றார் பாரதியார்.

பாரதியார் பாட்டுலே, "நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பான்னு" சொல்லி இருக்காரே, அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? டேய் கிருஷ்ணா! உரக்கச் சொல்லு, என் காதுலெ விழலியே, ஹாங், அதுதான். கிருஷ்ணன் சொல்றான் பாருங்கோ சோம்பேரியா இருக்கக் கூடாது அப்பிடீன்னு. கிருஷ்ணா, சபாஷ்! நீ நன்னாதான் சொன்னே, ஆனா நாம என்ன சொல்லணும்னு நினைக்கிறமோ, அதை தைரியமா, தெளிவா உரக்கச் சொல்லணும் அதே நேரத்துலெ தப்பான வார்த்தையோ, அடுத்தவா புண்படறா மாதிரியோ சொல்லக் கூடாது.

ஓய்ந்திருக்கலாகாது அப்பிடீன்னு பாரதியார் எவ்ளோ அழகான வார்த்தையைச் சொல்லி இருக்கார், அது மாதிரி சொல்லக் கத்துக்கணும். ஓய்ந்திருக்கலாகாதுன்னா சுறுசுறுப்பா இருக்கணும், கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு. நேரத்தை வீணாக்கப் படாதுன்னு அர்த்தம் நாமளும் ஏதாவது கத்துக்கலாமா, தெரிஞ்ஜுக்கலாமா?

சரி, இன்னிக்கு இது போறும். நீங்க எல்லாம் அதோ, அந்த மைதானத்துலெ போய் நன்னா ஓடி விளையாடுங்கோ, அப்புறமா என்ன பண்ணனும்? வேர்வை வரும், அதை அப்பிடியே விடக் கூடாது, நன்னா குளிர்ச்சியான தண்ணீர்லெ உடம்பு, முகம், கழுத்து, கை, கால் எல்லாத்தையும் அலம்பிண்டு உடனே துடைச்சுக்கணும், அப்போதான் ஜலதோஷம் பிடிக்காம இருக்கும். புறியறதா? ஒடுங்கோ ஒடுங்கோ!

விளையாடிட்டு சமத்தா வீட்டுக்குப் போய் நான் சொன்னா மாதிரி துடைச்சுண்டு, நெத்திலே குங்குமம் அல்லது கொஞ்ஜம் விபூதி வெச்சுண்டு (வெறும் நெத்தியோட இருக்கப்படாது) அது ஏன்னு ஒரு நாள் சொல்றேன். அப்புறமா ஸ்வாமி கிட்ட போய் நின்னுண்டு, "பகவானே எங்களுக்கு நல்ல ஞானமும் ஆரோக்கியமும் கல்வியும், எல்லாம் குடு"ன்னு வேண்டிண்டு படிக்க ஆரம்பிக்கணும், சரியா?

இனிய மாலை வணக்கம்.

தேனீ மாமா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button