செல்லக் குழந்தைகளே
தேனீ மாமா
அன்புக் குழந்தைகளே,
உங்கள் சிறிய அன்பு தான் மனிதத்தை உயிர்ப்பிக்கும், உலகத்தை இணைக்கும், அடிப்படை நம்பிக்கையை வளர்க்கும். உங்கள் அன்பு தான் சாதாரண சக மனிதரையும் இணையத் தூண்டும். உங்கள் அன்புதான் உலக மக்களை ஒன்று சேர்க்கும். புதிய உலக நாகரீகமாய் மாறும் ஸர்வ தேச அன்பு இயக்கமாய் மாறும். அன்பு செலுத்த ஆரம்பிப்போம். ஆதர்ஷ இயக்கத்தை வளர்ப்பதே உங்க அன்புதான், அன்பே மதம், அன்பே இனம் அன்பே மொழி அன்பே இதயம், அன்பே வழி. அத்தனையும் இணைக்கும் அன்புப் பாலம் உங்க அன்புதான் அப்பிடீன்னு நம்ப சீனு தாத்தா சொல்றார்.
இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை, இன்னிக்காவது கொஞ்ஜ நேரம் தூங்கலாமேன்னு பாத்தா உங்க அம்மா உங்களையெல்லாம் எழுப்பி இங்க அனுப்பிட்டாளா? என் மேல கோவமா? என்னையும் எங்க அம்மா எழுப்பிட்டா. இன்னிக்குதான் இவ்ளோ காலங்காத்தாலே நாம சந்திச்சிருக்கோம். ஹும் இப்பொ மணி என்னா? அடேடே, ஏழு மணி ஆயிடிச்சா? இனிய காலை வணக்கம், எல்லாரும் சொல்லுங்கோ பார்ப்போம்.
இங்க இத்தனை குழந்தைகள் இருக்கீங்க, உங்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்லப் போறேன். குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. ஆமா, தினம் நீங்கள்ளாம் காத்தாலை எத்தனை மணிக்கு எழுந்துக்கறீங்க? ஆஹா, அவ்வளோ தாமதமா எழுந்துக்கக் கூடாது, சீக்கிறம் எழுந்துக்கணும். நான் சொல்ற ஒரு காரியத்தைச் செய்யுங்கோ, தானா சீக்கிறம் எழுந்துக்கற வழக்கம் வந்துடும் சரியா?
அடேடே! நாளைக்கு காலங் காத்தாலே எழுந்து இதைப் பாத்துட்டு எப்பிடி இருந்ததுன்னு வந்து சொல்லணும், சரியா? இப்போ நீங்கள்ளாம் போகலாம். ஆனா தினம் இது மாதிரி என்கிட்ட கொஞ்ஜ நேரமாவது பேசிட்டுப் போகணும். நான் உங்களுக்கு தினம் ஒரு விஷயத்தப்பத்தி சொல்லப் போறேன். பாத்து, ஒருத்தர் மேலே ஒருத்தர் இடிச்சுண்டு ஓடக் கூடாது. நிதானமா வரிசையிலே போகணும். அதே மாதிரி இங்க வரும்போதும் நிதானமா வந்து உக்காந்துண்டு நான் சொல்றதை கவனமா கேட்டா உங்களுக்கு எல்லாம் நிறைய இனிப்பு தருவேன், அட! இது என்னது என் மேஜை மேல, தீபாவளி பட்ஷணமா? எனக்கா?
ஆஹா! இது மாதிரி கள்ளங்கபடம் இல்லாம நீங்க குடுக்கற இந்த பட்ஷணத்திலெ, எனக்கு ரொம்ப இனிப்பா இருக்கற விஷயமே நீங்கள்ளாம் என் மேல காட்ற அன்பு, பாசம் அதுதான் உலகத்துலேயே ரொம்ப இனிப்பான உசத்தியான விஷயம்.
நீங்கள்ளாம் எப்பவும் இப்பிடியே இருப்பேளா? எவ்வளவு வயசானாலும் குழந்தை மாதிரியே மனசைத் தெளிவா வெச்சுண்டு, தெய்வம் மாதிரி சிரிச்சுண்டு, கோவமே படாமே, இதமா, இனிமையா, எல்லார் கிட்டயும் பாசமா,பெரியவாகிட்ட பரிவா, பாசமா நடந்துப்பேளா?
ஆஹா! நல்லதை சொன்னா உடனே ஒப்புக்கறேளே, அதுதான் குழந்தை மனசு. குழந்தைகளா, இந்த உடம்புக்கு வயசாகும், ஆனா மனசுக்கு வயசே ஆகக் கூடாது, ஆக விடக்கூடாது. எப்பவும் மனசைக் குழந்தை மாதிரியே வெச்சுண்டோமானா நாமளும் சந்தோஷமா இருக்கலாம், அடுத்தவாளையும் சந்தோஷமா வெச்சுக்கலாம்.
அன்புள்ள தேனீ மாமா
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














