தாயென்று கும்பிடடி பாப்பா
- குழந்தைகள் தினம்
கீதா சாம்பசிவம்
உலகநாடுகள் அனைத்திலும் "குழந்தைகள் தினம்" கொண்டாடப் படுகிறது. அது ஒவ்வொரு வருஷமும், வழக்கமாய் ஜூன் 1-ம் தேதி கொண்டாடப் படும். சரியான காரணம் தெரியாவிட்டாலும், உலகின் பல நாடுகள், முக்கியமாய் கம்யூனிச நாடுகள் ஜூன் ஒன்றாம் தேதியையே "குழந்தைகள் தினமாய்"க் கொண்டாடுகின்றனர். 1954-ம் வருடத்தில் இருந்து ஐநாவும், அதைச் சார்ந்த யுனெஸ்கோவும் 20 நவம்பரை உலகக் குழந்தைகள் தினமாய் அறிவித்தது.
ஆனாலும் எல்லா நாடுகளும் அவரவருக்கு எனத் தனியாகவே குழந்தைகள் தினம் அறிவித்துள்ளன. நம் இந்தியாவில் நவம்பர் 14-ம் தேதியைக் குழந்தைகள் தினமாய் அறிவித்துள்ளார்கள். இது நம்முடைய சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான திரு ஜவாஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் ஆகும். அவருக்குக் குழந்தைகளிடம் தனி அபிமானம் உண்டு என்பதால் அவருடைய பிறந்த நாளையே குழந்தைகள் தினமாய் இந்தியாவில் அறிவிக்கப் பட்டுக் கொண்டாடப் படுகிறது.
குழந்தைகள் அவரை "சாச்சா நேரு" என அழைத்து வந்தார்கள். "சித்தப்பா நேரு" என அழைக்கும் அளவுக்குக் குழந்தைகளிடம் நெருக்கமாய் இருந்து வந்தார் நேரு அவர்கள். அவர் பிரதம மந்திரியாக இருந்த சமயம் ஒரு முறை நடந்த ஒரு நிகழ்ச்சி இது:
ஒரு முறை தன் அலுவலாக நேரு எங்கேயோ வெளியே செல்லும் வேளையில் ஒரு சிறுவன் பலூன்களை விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் அலுவலுக்கு அவசரமாய்ச் சென்றதால் அதைப் பார்த்துக் கொண்டே போய் விட்டார். பின்னர் திரும்பி வரும் வேளையிலும் அதே சிறுவன் அங்கேயே உட்கார்ந்து விற்காத பலூன்களைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனேயே தன்னுடைய வண்டியை நிறுத்தி அந்தச் சிறுவனை அழைத்து விசாரித்தார். சிறுவன் தந்தை இல்லாதவன் என்பதும், இந்த பலூன் விற்றே தன் தாய், தம்பிகளைக் காப்பாற்றி வந்தான் எனவும் தெரிந்து கொண்டு, அவனிடம் இருந்த மொத்த பலூன்களையும் அவரே பெற்றுக் கொண்டு, அந்தச் சிறுவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வேண்டிய உதவிகளைச் செய்தார் என்று சொல்லுவார்கள்.
இவ்விதம் தனக்குத் தெரிந்த வரையிலும் தன்னால் முடிந்த வரையிலும் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார் நேரு அவர்கள். ஆகவே அவரின் பிறந்த நாள் "குழந்தைகள் தினமா"ய்க் கொண்டாடப் படுவது சிறப்பே அல்லவா?
அன்புடன்
கீதா சாம்பசிவம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||



















