தாயென்று கும்பிடடி பாப்பா
- புகழ்மிக்க புலவர்கள்
கீதா சாம்பசிவம்
இவங்களுக்கு உரிய வயசு வந்ததும் அப்பாவும், அம்மாவும் இவங்களுக்குக் கல்யாணம் பண்ண நினைச்சாங்க. ஆனால் இவங்களுக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை.
அதனாலே இவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? உடனே விநாயகரைப் போய்த் துதிச்சாங்க. விநாயகரைப் பார்த்து, "அப்பனே, விநாயகா, எனக்குக் கல்யாணமே வேண்டாம், இவங்க என்னைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லி வற்புறுத்தறாங்களே! நீ என்னை இதில் இருந்து காப்பாற்ற மாட்டியா?" அப்படீன்னு கேட்டு
"பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா"
என்று பாடவே, உடனே பிள்ளையாரும் உதவிக்கு வந்தார். இந்த மாதிரித் தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஊர் ஊராகத் தமிழைப் பரப்பிக் கொண்டும் போவதுன்னா, அதுக்கு இவங்க இந்த மாதிரிச் சின்னப் பொண்ணா இருந்தா ரொம்பக் கஷ்டம்னு விநாயகர் யோசிச்சு அவங்களை ஒரு வயசான பாட்டியா மாத்திட்டார். ஒளவையும் ரொம்பவே சந்தோஷப்பட்டு உடனேயே, மேலே சொன்ன பாட்டை முதலில் வைத்து "விநாயகர் அகவல்" பாடினார் என்று சொல்லுவாங்க.
விநாயகரின் உருவமே "ஓம்" என்று சொல்லப் படும் ஓங்கார சொரூபம். பிரணவ சொரூபம்னும் சொல்லுவாங்க. பிரணவ மந்திரமே "ஓம்" தானே! அதனால் இந்த மாதிரி. சொல்லறாங்க. நம்ம எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்ச கடவுள் யாருன்னா எல்லாருமே அநேகமாய்ப் பிள்ளையாரைத் தான் சொல்லுவோம். இப்படி இருந்தாலும் ஒருத்தருக்குப் பிடிச்ச சாமி இன்னொருத்தருக்குப் பிடிக்காது. இருந்தாலும் நம்ம சாமிங்க எல்லாம் கோபிக்காது. நீங்க எந்த சாமியைக் கும்பிட்டாலும் அவங்க வந்து உங்களுக்கு நல்லது செஞ்சு கொடுப்பாங்க. அதுக்கு மனசில் நல்ல நம்பிக்கை வேணும். முதலில் ஏன் இத்தனை சாமின்னு கேட்கிறவங்களுக்குப் பதில்...... அடுத்த இதழில், வரட்டுமா? அப்புறம் பார்க்கலாம்.
"ஸ்ரீராம்ஜி கி ஜெய்" சொல்லுங்க எல்லாரும்.
தொடரும்....
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















