தாயென்று கும்பிடடி பாப்பா
- சேவைக்கோர் ஆலயம்
வெங்கடரமணி
சென்னைக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் திருநின்றவூர் அருகில் கசுவா கிராமத்தில் கடந்த 19 ஆண்டுகளாகச் செயல் பட்டு வருகிறது சேவாலயா அறக்கட்டளையின் சேவை மையம். மகாத்மா காந்திஜி, மகாகவி பாரதியார், சுவமி விவேகானந்தர் ஆகியோரது வாழ்வும் வாக்கும் தந்த உந்துதலைத் தனது செயல்பாடுகளின் அடிப்படையாகக் கொண்டுள்ளது சேவாலயா.
சேவாலயாவில், ஆதரவற்ற, தாய் தந்தையற்ற ஏழைக் குழந்தைகளுக்கான சுவாமி விவேகானந்தர் சிறுவர் இல்லம், மற்றும் அன்னை தெரசா சிறுமியர் இல்லம் (தற்சமயம் 160 குழந்தைகளை ஆதரித்து வருகிறது), இல்லக் குழந்தைகளுடன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள 1000 ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை இலவசமாக அளிக்கும் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி (அரசு அங்கீகாரம் பெற்ற, மானியம் பெறாத தமிழ்வழிக் கல்வி அளிக்கும் பள்ளி), கிராம ஏழை மகளிருக்கு இலவசத் தையற்பயிற்சி அளித்துவரும் கஸ்தூரிபா கைத்தொழில் மையம், மகாத்மா காந்திஜி மருத்துவ மையம், 15000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் இலவச நூலகம், மற்றும் படிப்பகம், கறவைப் பசுக்களுடன் வற்றிப்போன பசுக்களையும் பராமரிக்கும் வினோபாஜி கோசலா, ஆதரவற்ற ஏழை முதியவர்களுக்கான ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் முதியோர் இல்லம் (தற்போது 60 முதியோர்கள் இல்லத்தின் பராமரிப்பில் உள்ளனர்) ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அனைத்து சேவைகளும், சாதி, மத, இன, நிற, மொழி வேறுபாடின்றி, வறுமையில் வாடும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி கடந்த 4 ஆண்டுகளாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு (2005-2006) பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்விலும் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. ஏழ்மைச் சூழ்நிலையிலுள்ள குடும்பங்கள், சிதைந்த குடும்பங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் மாணவர்கள், மற்றூம் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என்ற பின்புலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சேவாலயாவின் சாதனை குறிப்பிடத்தக்கது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்திலேயே இத்தகைய சாதனை படைத்த ஒரே பள்ளி என்ற பெருமையும் சேவாலயாவைச் சாரும்.
TCS EDUCATION WORLD AWARDS COMMITTEE 2006 அகில இந்திய அளவில் போட்டியிட்ட 15000 பள்ளிகளில், சேவாலயா பள்ளியை, கற்பிக்கும் முறையில் புதுமைகளைச் செய்தமைக்காகவும், சிறந்த முறையில் மதிப்பீட்டுக் கல்வி அளித்தமைக்காகவும் விருது அளித்து கௌரவித்துள்ளது.
சேவாலயாவைப் பற்றிய மேல் விவரங்களுக்கு
www.sevalaya.org
என்ற வலைத் தளத்தைப் பார்வையிட வேண்டுகிறோம்.
என் கடன் பணி செய்து கிடப்பதே
அன்புடன்
டி.எஸ். வெங்கடரமணி
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














