குருவருள் - 6
குரு அசலம்
கொஞ்ச நேரத்திற்குப்பிறகு அவர் வேகமாக நடக்கத் துவங்கினார். இப்படி அந்த அக்ரஹாரத்தில் உஞ்சவ்ருத்தி பஜனையை முடித்துக்கொண்டு, ஒரு பக்தனிடம் இப்படிச் சொன்னார்: “ஒரு வீட்டு வாசலில் கொஞ்ச நேரம் நின்றிருந்தோமே அங்கு போகலாம் வா”. பக்தர்கள் அவர் பின்னால் போக, அவர் சரியாக அந்த வீட்டு வாசலில் வந்தார். உள்ளே போகலாமா என்று கேட்கச் சொன்னார். வீட்டுடமஸ்தன் : “என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நீங்கள் எங்கள் மனைக்கு வர நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும், வாருங்கள்”. உள்ளே சென்றதும், பாகவதர் நேராக வீட்டுடமஸ்தருடைய மனைவி படுத்திருக்கும் கட்டிலருகில் வந்தமர்ந்து, அவர்களை குசலம் விசாரித்தார். அந்த அம்மாள் கண்கலங்கி இப்படி சொன்னார்: “மஹானுபாவர் நீங்கள் இத்துணை சிரமப்பட்டு இந்த பாபியை பார்க்க வந்தீர்களே. நான் செய்த கர்மவினை என்னை சோதிக்கிறது. எப்பொழுது விடிவுகாலம் வருமோ, எல்லோருக்கும் பாரமாக ஏன் நான் உயிர் வாழணும்? பகவான் என்னைத் தன்னுடன் அழைத்துக்கொள்ளக் கூடாதா? தாங்கள் அருள் புரியுங்கள்”.
அந்த அம்மாளுக்கு பார்ச வாயு கண்டு உடல் அனங்காமல் படுத்திருந்தார்கள். என்ன மருத்துவ சிகிச்சையும் பலன் தராததால், நாளை மறுதினம் அவர்கட்கு அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவர் நாள் குறித்துவிட்டார். அவர்களும் வேறு வழியில்லாமல் அதற்கு ஆயத்தமானார்கள். இதுதான் அவர்கள் கதை. பாகவதர் தன் கைவசம் வைத்திருந்த விபூதிப் பையைத் திறந்து கைகளில் விபூதியை எடுத்து, தன் நேற்றிப்பொறியில் வைத்து, கொஞ்ச நேரம் ஜெபித்து பிறகு அதை ஜெபத்துடனேயே அந்த அம்மாளின் நெற்றியில் பதித்து அவர்கள் கால் கை முழுவதும் புரட்டி இங்கனம் உரை செய்தார், “நாளை ந்ரஸிம்ஹ ஜெயந்தி உத்ஸவம் புதுக்கோட்டையில் நடக்கிறது. நீங்கள் வந்து அதில் கலந்து கொள்கிறீர்கள்.” இதைக்கேட்ட அந்த அம்மாள், “ஸ்வாமி, எனக்கு நாளை மறுநாள் அறுவை சிகிச்சை பண்ண ஏற்பாடாகியிருக்கிறது. என்னால் ஒரு அணுகூட நகர முடியவில்லை என்பதைப் பார்க்கவில்லயா? நான் எப்படி அங்கு வர முடியும்?” என்றார். இதை கேட்ட பாகவதர், “ந்ரசிமஹனுடைய உத்தரவை நாம் சொன்னோம். எல்லாம் அவனுக்குத் தெரியும். அவன் நினைத்தால ஆகாதது என்று ஒன்று உண்டா? எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான். கவலை வேண்டாம். அவன்பால் நமபிக்கை வைத்து அவனிடம் பாரத்தைத் தந்துவிடுங்கள். அவன் உங்களை அங்கு வரவழைப்பான்.” என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.
அவர் போனபின் அக்குடும்பத்தார்கள், “என்ன இவர் இப்படிச் சொல்லிவிட்டார்?. இவள் நிலை இப்படி இருக்கும்போது எப்படி அங்கு போக முடியும்? அதுவும் நாளை மறுநாள் அறுவை சிகிச்சை உள்ளதால் அது சாத்தியமல்லவே” என அங்கலாய்த்தனர். யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் அன்று முழுதும் அந்த அம்மாள் இதைப்பற்றியே சிந்தித்து “பகவத் க்ருபை இருந்தால் சொன்னதுபோல் நடக்கும் என்ற நமபிக்கையுடனும், ந்ரஸிம்ஹனை தியானித்துக்கோண்டும் ஒருவரிடமும் பேசாது கண்மூடிக் கிடந்தார்கள். அடுத்த நாள் அதிகாலை எல்லோரும் துயில்கொள்ளும் சமயம், அந்த அம்மாள் படுக்கையிருந்து எழுதிருந்து ஒவ்வொருவரையும் எழுப்பி, தன் காலைக்கடன்களைத் தானே செய்து, ஸ்னானம் செய்து, நெற்றியில் குங்குமம் விபூதிகளைத் தரித்து, கணவனிடம் சொன்னார்: “வாங்கோ புதுக்கோட்டை கிராமத்தில் நடைபெறும் ந்ரஸிம்ஹ ஜெயந்திக்கு போவோம்”. இதைக் கேட்ட கணவர் கண்களில் நீர் மல்க அவளைப் பார்த்து, “இதென்ன அதிசயம். மூன்று மாதங்களாகக் கிடந்த இடத்தில் ஒரங்குலம் போலும் நகராத நீயா இப்படி ஸ்வயம் கார்யங்களைச் செய்துகோண்டு புதுக்கோட்டை செல்ல ஆயத்தமாகிவிட்டாய்? பகவான் கண்திறந்து விட்டார் போலும்” என்றார். அதற்கு அந்த அம்மாள் “பகவான் ஸத்குரு உருவில் (கோபாலக்ருஷ்ண பாகவத்ர்) வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பகவான் க்ருபை ஸத்குருவின ஆதரவில் தான் நிகழும். அதை நிரூபித்துவிட்டார் என் குருநாதர் ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவத ஸ்வாமி” என்றார்கள்.
அந்த அம்மாள் கால்நடையாகவேதான் வருவேன் என்று சொல்ல, எல்லோரும் பின் வந்தார்கள். புதுக்கோட்டையில் உத்ஸவத்தில் பக்தர்கள் திரண்டிருந்தார்கள். இவர்கள் வாசலில் வரவும், ஸ்ரீ பாகவதர் ஓடி வாசலில் வந்து அவர்களை வரவேற்று “என்னா, என ந்ரஸிமஹனுடைய உத்தரவை ஏற்று வந்துவிட்டீர்களே! அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டால் அவன் பார்த்துக்கொள்வான். இது புரிந்ததோ? வாருங்கள் அவனை சேவிப்போம் என அழைத்துச் சென்று மேடையில் அந்த அம்மாளை உட்காரவைத்து இந்தச் சம்பவத்தைப் பறறி பக்தர்களுக்கும் எடுத்துரைத்தார். எதற்காக? பக்தர்கட்கு பகவான் பெயரில் நமபிக்கை ஊட்டுவதற்காக. அல்லாமல் தன் பெருமையைப் பறைசாற்ற அல்ல. அன்று முதல் அந்த அம்மாளும் அவர் குடும்பத்தினரும் ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதரின் பின்காவிகளானார்கள். இது நடந்த சம்பவம், பல பக்தர்கள் பார்த்துச் சொன்ன அனுபவம்.
என்னே குருவருள்! எங்கிருந்து, எப்படி, யாருக்குக் கிடைக்கும் எனத் தெரியாது. குருவருள் நம்மை தேடி வரும் என்று சொன்னோம். இந்த சம்பவம் அதை வலியுறுத்துகிறது. நமது கர்ம வினை நாம் அனுபவித்தே தீரும். ஆனாலும் பகவானிடம் பக்தியும், குருவினிடம் நம்பிக்கையும் இருந்தால் தக்க சமயம் அந்த வினை நீங்கி சுகம் பெறலாம் எனக் கண்கூடாகக் கண்டுகொண்டோம். குருவே நமக்கு தெய்வ வழிபாட்டிற்கு வழிகாட்டி. அவர் காட்டிய வழியில் சென்றால் ஒருபோதும் அவர் கருணை நம்மைக் கைவிடாது. தக்க சமயத்தில் வந்து நம்மை ஆட்கொண்டு நம்மை அந்த வினையிலிருந்து விடுபடச் செய்து, சுக வாழ்வும் தரும் என்பதில் ஒட்டும் அய்யமில்லை.
லோகா: சமஸ்தா: ஸுகினோ பவந்து.
உங்கள் அசலம
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














