குருவருள் - 5
அசலம்
குருவருளை அறிவது எப்படி?
குருவருள் எமக்கு எப்படியெல்லாம் கிடைத்தது என்று நம் சொந்த அனுபவத்தை இதன்முன் சொன்ன நாலு தொடர்களில் கண்டீர்கள். அதில் குருவருள் தாமாகவே வரும் நம்மை தேடி. ஆனால் அதற்கு நாம் நம்மைத் தகுதியுள்ளவர்களாகச் செய்துகொள்ள வேண்டும் எனப் பார்த்தோம். அது பல வழிகளில் வரலாம். நம் விருப்பத்தை ஒட்டியிருக்கலாம், நம்மை நாடி வரலாம், சீட்டுக் குலுக்கி எடுத்தல் வழி தெரிந்துகொள்ளலாம் அல்லது நமக்கிராத ஒரு ஆற்றலாகக்கூட வரலாம் என்றெல்லாம் பார்த்தோம். இப்பொழுது எமது குருநாதர் புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் மூலம் எப்படி பக்தர்களுக்கு அருள் கிடைத்தது எனப் பார்ப்போம். ஒரு சிலருக்கு மட்டுமில்லாமல் எல்லா பக்தர்களுக்கும் அருள் கிடைத்த ஒரு உண்மையில் நிகழ்ந்த சம்பவம், பல பக்தர்கள் சொல்லிக் கேட்டதை இங்கு தருகிறோம்.ஸ்ரீ பாகவதர் நித்திய கர்மானுஷ்டானத்துடன் தினம் உஞ்சவ்ருத்தி பஜனையுடன் தெருவில் சென்று, கிடைத்த தன்யம், பொருள் இவைகளைக் கொணர்ந்து வருஷா வருஷம் நரஸிம்ஹ ஜெயந்தி உத்ஸவம் கொண்டாடுவது வழக்கம். தினம் உஞ்சவ்ருத்தியில் கிடைக்கும் தான்யத்தை வைத்தே அவர் ஆஹாரம் செய்வார். ஒரு நேரம்தான் உணவும். இப்படிக் கடின வ்ரதமாக இருந்து நரஸிம்ஹ உபாஸகராக விளங்கினார். ஒரு வருடம் அந்த உத்ஸவம் (பதிவாக மே மாதம் உஷ்ணகாலத்தில்தான் நடக்கும்) நடக்கும்போது, புதுக்கோட்டை ஆற்றில் ஜெலம் ஒட்டுக்க வற்றிவிட்டது. உஷ்ணம் தாங்க முடியவில்லை. கிராமத்தில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. செயலாளிகள் வந்து பாகவதரிடம் முறையிட்டார்கள். “குருவே, கிராமம் ஒட்டுக்க எங்கும் ஒரு துளி தண்ணீர் இல்லை, ஆறு வரண்டு கிடக்கிறது. பக்தர்கள் உணவிற்கு என்ன செய்வோம்” என வருந்தினர். கண்மூடிக்கொண்டு பஜனை பாடிக்கொண்டிருந்த அவர் கண் விழித்து, “ஏன் வருந்துகிறீர்கள். இது நரஸிம்ஹன் நடத்தும் உத்ஸவம். அவனுக்குத் தெரியாதா? அவன் பக்த வாத்ஸல்யனாச்சே, அவன் பார்த்துக்கொள்வான், கவலை வேண்டாம்” என்று கூறிக் கண்மூடிப் பாடத்துவங்கினார். அம்ருதவர்ஷிணி ராகத்தில் ஒரு ஸ்லோகம் ஆலாபனை செய்து கீர்த்தனை பாடத் துவங்கினார். ஆனந்தமாக எல்லோரும் தங்களை மறந்து கேட்டிருந்தனர். பாட்டின் முடிவில், எங்கிருந்தோ ஆகாயத்தில் திடீர் என்று இடி, மின்னல் தோன்றிப் பெருத்த மழை பெய்யத் துவங்கியது. பாகவதர் இது தெரியாமல் பாடிக்கொண்டே இருந்தார். கொஞ்ச நேரம் சென்றபின் ஆற்றில் வெள்ளம் கரைதொட்டு ஓடத் துவங்கியது. கிராமத்தில் கணுக்காலுக்கு ஜெலம் பரவி விட்டது. பகதர்கள் ஓடி பாகவதரிடம் அங்கலாய்த்தார்கள்: “பகவானே, மழை பெய்து வெள்ளப் பெருக்கம் வந்துவிட்டது, மழையை நிறுத்தவும்” என. பாகவதர் அதற்கும், “நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். எலலாம் நரஸிமஹனுக்குத் தெரியும். இது அவன் பாடு, கவலை வேண்டாம் அவன் பார்த்துக்கொள்வான்” என்று சொல்லி பஜனையில ஆழ்ந்தார். என்ன ஆஸ்சர்யம்! திடீரென்று மழை நின்றது. வெள்ளம் குறைந்து கிராமம் முன்போல ஆனது.
என்னே, குருவருள்! அவர் பகவானிடம் வைத்துள்ள த்ருட நம்பிக்கையும், அவர் அதீத பக்தியும், கருணா கடாக்ஷமும் எப்படி வெய்யில் காலத்தில் மழையை வரவழைததது! இத்தகய சாதனை எல்லோர்க்கும் வராது. ”நான்”: என்ற அஹந்தை அவரிடம் இல்லை. எல்லாம் பகவத் இச்சை, பகவான் எல்லாம் தெரிந்தவன், எல்லா இடத்திலும் இருப்பவன், கருணாமூர்த்தி என்ற பாவம் அவரிடம் குடிகொண்டிருந்தது. அவர் முகத்தைப் பார்த்தாலே நமக்கு வினயமும், பக்தியும் தானே வரும். அப்படி ஒரு ஆகர்ஷணமான கண்கள். இத்தகைய சாதனை ஞானிகளுக்குத் தான் வரும். ஆனால் அதை அவர்கள் தங்கள் சுயநலத்திற்காக உபயோகிக்க மாட்டார்கள்.
இதிலிருந்து அறிவது, குருவருள் எப்பொழுது வேண்டுமானாலும் யாருக்கும் வரும். ஆனால் அதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக வேண்டும், அதற்கு பகவத் பக்தி, குருவிடம் த்ருட நம்பிக்கை, வினயம், “அஹம்” என்ற பாவமினமை இவை வேண்டும். சிலர்க்கு குருவருள் அவர்கள் தேடிப் போகாமலே தானே அவர்களைத் தேடிவரும். அதற்குச் சமயமும் வர வேண்டும்.
லோகா: சமஸ்தா: ஸுகினோ பவந்து.
அசல பக்தன்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||

















