குருவருள்
தமிழ்த்தேனீ
அன்புள்ள நண்பர்களே,
நாம் வாழும் வாழ்க்கையில் குருவருளும் திருவருளும் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமான காரியம். பகவான் எப்போதுமே தன்னை இகழந்தவர்களைக் கூட மன்னித்துவிடுவானாம், ஆனால் தன்னுடைய அடியார்களை இகழ்பவரை மன்னிக்கவே மாட்டான் என்று என் தாயார் அடிக்கடி கூறுவார்கள்.
நாம் குருவாக ஏற்றுக் கொள்ளும் அனைவருமே குருஸ்தானத்தை அடைய எவ்வளவு ஆசார, நியமநிஷ்டைகளை, அனுஷ்டானங்களை பக்தி ஸ்ரத்தையோடு, கடைப் பிடித்திருப்பர் என்று எண்ணும் போது, குருஸ்தானத்தின் பெருமை விளங்குகிறது, இறைவனை அடைய குரு மூலமாக முயற்ச்சி செய்ய வேண்டும் என்பர். அப்படிப்பட்ட குருவின் அருளில்லாமல் திருவருள் கிடைக்காது, உதாரணமாக ஒரு கதை உண்டு.
ஒரு பாமரன் தன்னுடைய கர்பிணி மனைவியை ஆற்றின் அக்கரையில் விட்டுவிட்டு இக்கரையில், ஏதோ வேலை நிமித்தமாகச் சென்றவன், அவன் மனைவிக்குப் ப்ரசவ வலி கண்டிருக்கிறதென்று அக்கரையிலிருந்து வந்த ஒருவரின் மூலமாகக் கேள்விப்பட்டு அக்கரைக்கு உடனே செல்ல வேண்டும் என்று ஆற்றங்கரைக்கு வருகிறான். ஆற்றில் கரை காண முடியாத வெள்ளம். அக்கரைக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அவன் அங்கிருந்த பெரியவரிடம் தன் நிலையைச் சொல்லி உதவி கேட்கிறான், அதற்கு அந்தப் பெரியவர் உதவுவதாக வாக்களித்து அவனைத் தன் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "பழனி", "பழனி" என்று கூறிக் கொண்டே வரச் சொன்னார். பாமரனும் அவ்வாறே, "பழனி", "பழனி" என்று சொல்லிக் கொண்டே அவரின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருக்கிறான், பெரியவர் ஆற்றின் மேல், மூழ்காமல் நடக்கத் துவங்கினார், பாமரனும் அவருடனே ஆற்றின் பாதி தூரத்தை ஆற்றின் மீது மூழ்காமல் கடந்த நிலையில் பெரியவரைக் கவனிக்கிறான், அவரோ நாராயண நாராயண என்று சொல்லிக் கொண்டே நடக்கிறார்.
ஓ ஆற்றின் மீது நடப்பதற்க்கு நாராயண என்று சொல்லிக் கொண்டே நடக்க வேண்டுமா? அப்படியானால் தானும் நாராயண என்றே சொல்லலாமே என்று அவனும் நாராயண என்றான். உடனே ஆற்றில் மூழ்கினான்.
உடனே அந்தப் பெரியவர் அவனைக் கைப்பிடித்துத் தூக்கி விட்டுவிட்டு, ஆமாம் எனக்கு நாராயணனைத் தெரியும், அதனால் நான் அவன் பெயரைச் சொல்லுகிறேன், உனக்கு என்னைத்தானே தெரியும் அதனால்தான் என் பெயரைச் சொல்லச் சொன்னேன் என்றார், பாமரனுக்குப் புறிந்தது குருவருள்.
ஆகவே என்னுடைய வழ்வில் எனக்கு ஏற்பட்ட குருவருளைப் பற்றியும் திருவருளைப் பற்றியும் எழுதுகிறேன்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















