Guru Achalam
   படைப்புகள்




Favorites

Picture Puzzles

Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
Astrotimers.com
EducationalService.net
tamilliterature.net

kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com
Mgl Authors



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

Grandpa Cheenu
தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock

For the people

Kiran Bedi
Anna Hazare
I Paid a Bribe
Citizen Journalist
Fight Corruption
Vote for India
CAG of India
India Vision
Public Cause
India Corruption



  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 



குருவருள் - 4

அசலம்



Blessing - artgallery-lavele.com

குருவருளை அறிவது எப்படி?

குருவருள் பல தரத்தில் நிகழலாம். சில கண்கூடாகக் காணலாம். சில மறைமுகமாகத் தெரிந்துகொள்ளலாம். சில சோதனை செய்து தெரிந்து கொள்ளலாம். இன்னும் சில அதிசயமான ஆற்றல்களாகத் திகழலாம். இப்படிப் பலவாறாக நிகழும். குருவருள் கிடைப்பது அரிது. அதற்கு நாம் அருஹதை உள்ளவர்களாக ஆக வேண்டும். எமது ஸ்வானுபவத்திலிருந்து முதல் மூன்று அனுபவங்களைத் தந்துள்ளோம். இப்பொழுது தருவது ஆற்றலாக வந்துள்ளது.

நாம் தக்ஷிண பஜன சம்பிரதாயத்தில் பஜனை செய்து வந்துள்ளோம். அதில் எமது பஜனைக்கு குருவாக புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலகிருஷ்ன பாகவதர் எமக்கு ஸுத்திரோபதேசம் செய்தார் எனத் தந்துள்ளோம். அது வரை பஜனைக்ளில் ஈடுபாடு உண்டானாலும், அதைப் பூரணமாகத் தெரிந்து செய்யவில்லை. அவர் உபதேசத்திற்குப் பிறகு, பஜனை சம்பிரதாயம் எமக்குத் தாமே தெரியத் துவங்கியது. பல பாகவதர்கள் குழாமில் கலந்து பஜனை செய்ததில் குழப்பம் ஏற்ப்பட்டது. பல சம்பிரதாயங்கள் நிலவி உள்ளன. எது சரி எனத் தெரியாமலிருந்தது. எமது குருவின் உபதேசத்திற்குப் பிறகு அவர் சம்பிர்தாயத்தை ஆராய்ச்சி செய்து பல பத்ததிகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டு நாமாகவே ராதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், ஸீதா கல்யாணம் போன்ற கல்யாண் உத்ஸவங்கள் முறைகளைத் தெரிந்து கொண்டு அதன்படி செயல் பட்டு வந்தோம். இந்தக் கல்யாணங்கள் தெலுங்க சம்பிரதாயத்தை ஒட்டியிருந்தன. பாட்டுக்களும் தெலுங்கிலேயே உள்ளன. இதற்கு அர்த்தம் சொல்ல யாராலும் முடியவில்லை. எமக்குப் பாட்டுக்கு ஆள் தேவைப் பட்டது.

எமது தமையனார் குழுவில் நாம் கல்யாண பத்ததிகளைச் சேர்த்துச் செய்ய முன்வந்தோம். அப்பொழுது எமது தமையனார் புத்திரன் மிக அழகாகப் பாடுவார். அவரை வைத்து இந்தக் கல்யாணப் பாட்டுக்கள் பாட வைத்தொம். அவர் இது தெலுங்க பாஷயில் உள்ளதால் அர்த்தம் புரியாமல் பாடினால் தெலுங்கர்கள் கேட்டுத் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அனர்த்தமாகும். ஆகையால் இந்தப் பாட்டுக்களைத் தமிழில் தந்தால் பாடலாம் என்றார். பல தெலுங்கு நபர்களைக் கேட்டுப் பார்த்ததில் அவர்கள், “இது தெலுங்கானாலும் Gramatical முறையில் பகர்த்துத் தர முடியாது. மேல் நோட்டமாய் அர்த்தம் தரலாம், அவ்வளவுதான் என்றார்கள். ஆனாலும் ஒவ்வொரு பதத்திற்கும் அர்த்தம் தெரியவில்லயேல் அந்தப் பதப்ரயோகம் சரியாகாது. ஆகையால் தமிழில் இயற்றினால் பாடுவோம் என்றார்கள் படகர்கள். என்ன பண்ணலாம். குருவை நினைந்து உருகி மனதில் அழுதுகொண்டிருந்த பொழுது திடீர் என்று ஒரு மின்னல் தோற்றம். ஏன் நமக்குத் தெரிந்த சம்பிரதாயத்தை நாமே தமிழ்ப் பாட்டில் வடிக்கக் கூடாது என்ற தோற்றம் எமக்கு ஒரு உந்துகோலாக அமைந்தது.

தெய்வம் வரம் தந்தாலும் பூசாரி வரம் தரவில்லயே, என்ன செய்வது என்று மனதில் குருவை நினைந்துக் கதறினோம். முதலில் மாலை மாற்றுதலுக்கு உகந்த பாட்டு உதயமாயிற்று. பிறகு ஊஞ்சல் பாட்டு, ஓடப்பட்டு, பிறகு முத்துக்குத்தலுக்குப் பாட்டு, பிறகு கல்யாண அழைப்புக்கு, கல்யாண விவரண்ப்பாட்டு, ஆனந்தக்களீப்புக்குப் பாட்டு, கோணங்கிப் பாட்டு, கல்யாண சாப்பாட்டிற்குப் பாட்டு என்று வரிசையாக உதயமாயிற்று. உடனே அவைகளைப் பகர்த்தி அதற்கு மட்டும் தாளமும் போட்டு என் தமையனாரிடமும் அவர் பிள்ளையிடமும் தந்தோம். அவர்கள் சங்கீதம் சரிவரக் கற்றவர்கள். அதைப் பார்த்து ஆனந்தப்பட்டு இனி அவைகளைப் பாடுவோம் எனச் சொன்னார்க்ள்.

நாம் இப்பொழுது இருக்கும் குழுவிலும் பிரதான பாடகரும் சாஸ்திரீய சங்கீதம் முறையே கற்றவருமான ஸ்ரீ ஆனந்த் அவர்கள் அதைப் பார்த்து ஆனந்தப்பட்டு, இப்பொழுதும் எங்கள் குழுவின் கல்யாணப் பத்ததிகளில் இந்தத் தமிழ்ப் பாட்டுக்களைக் கையாளுகிறார். இன்று திகழ்ந்துவரும் வெளியூர் பாகவதக் குழுவினில் ஒரு முக்கியமான பாகவதர் எமது ராதா கல்யாண் புத்தகத்தை இந்தத் தமிழ்ப் பாட்டுக்களுடன் கையாளுகிறார் என்றால் அது பெருமைப்பட வேண்டியதே. இப்படி சங்கீதம் முறயே கற்றறியாத நாம் இயற்றிய பாட்டுக்களுக்கு சங்கீதஸ்தர்கள் ஒப்புதல் கிடைத்த்து என்றால் அது குருவின் அருளல்லாமல் வேரென்ன!

அதுபோல் எமது ஆத்மீகக் கட்டுரைகளுக்குத் தூண்டுகோலாக விளங்கும் எமது ஆத்மீக குரு ஸ்ரீ ரமண பகவான் அருளினால்தான் நாம் இப்பொழுது கீதாஸாரம், பஜகோவிந்தம் போன்ற நூல்களைத் தந்துவருகிறோம். எமக்குத் தமிழ் கற்றரிவு இல்லை. ஆனாலும். இப்படித் தெளிவாகத் தமிழில் ஆன்மீகக் கட்டுரைகள் படைக்க குருவருள் இல்லயேல் முடியுமா? குருவருள் எந்த நேரத்திலும் எந்த உருவிலும் வரும். அதற்கு நம்மை அருஹதை உள்ளவர்களாக நாம் தேற வேண்டும். குருவருள் இல்ல்யேல் திருவருள் இல்லை. இது எமது வாழ்வில் கண்கூடாக அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்ட உண்மை.

எமது சொந்தத் தமிழ்ப் படைப்பில் உருவான எமது குரு பேரில் நாம் இயற்றிய குரு கீர்த்தனை என்ற பாட்டை இத்துடன் தந்துள்ளேன். கவிஞர்களும் ஸ்ங்கீதஸ்தர்களும் இதைப் படித்து கருத்தை, அவர்கள் விமரிசனத்தைத் தருமாறு கோருகிறொம்.

பர்ஸத் பர்ஸத் ஸத்குரு க்ருபா
பியோ பியோ ப்யாரே மன நிசி தினி ஸார


ஸ்ரீ கோபாலக்ரிஷ்ண பாகவதர்

ஸ்லோகம்

நித்ய கர்மானுஷ்டான நிரதனாய் நிர்மலஞான ஸ்வரூபனாய்
நரசிம்மோபாஸன விருதனாய் நானிலமீதில் நடமாடும் தெய்வமாய்
கலியினில் கர்மனிரதனாய் காக்ஷ¢¢யில் பரமாச்சார்யனாய்
கருணையில் காமதேனுவாய் திகழ்ந்த காருண்ய மூர்த்தே
ஸ்ரீ கோபாலக்ருஷ்ண ஸத்குரோ!

குரு கீர்த்தனை

ராகம்: பைரவி தாளம்: ஆதி

பல்லவி:

என் குருநாதா வருவாய் வருவாய்
என் மனசஞ்சலம் களைவாய் களைவாய்       (என்)

அனுபல்லவி:

எனக்கு உன் அருளைத் தருவாய் தருவாய்
எனது உயிராக திகழ்வாய் திகழ்வாய்       (என்)

சரணம்:

நின் திருவடியைச் சரணம் அடைந்தேன்
நினதருள் பெறவே உன்னிடம் வந்தேன்
நின் புகழ் பாட அருள் நாடியே நின்றேன்
நின்னுடன் ஒன்றாய்ச் சேர ஆவல்கோண்டேன்       (என்)

நாம பஜனையில் முழுகி முழுகி
நாதோபாஸனையில் கரைந்து கரைந்து
நானில மீதினில் நலமுடன் வாழ்ந்து (ஓம்கார)
நாத த்வனியுடன் ஒன்றாய்க் கலந்த       (என்)

அனுதினமுன்னை நினைந்திடவே - உன்
அருள் அமுதத்தை நான் பருகிடவே - பரம
ஆனந்தக் களிப்பினில் மிதந்திடவே - இந்த
அசல பக்தனுக்கு நீ அருள் புரிவாயே       (என்)

நாமாவளி:

ஸத்குருநாதா கோபாலக்ருஷ்ணா சரணம் சரணம் குருநாதா
சஞ்சலம் தீர்ப்பாய் தஞ்சமளிப்பாய் ஸாதுஸம்ரக்ஷக குருநாதா

oooooOOoooooo

அசல பக்தன்



             

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button