குருவருள் - 3
அசலம்
குரு அருள் சோதனை
குரு அருளின் மஹத்துவத்தைப் பற்றி எமது ஸ்வானுபவத்தை இதற்கு முன் இரண்டு இலக்கங்களில் சொன்னோம். அதைப் புரிந்துகொள்வது எங்ஙனம் அல்லது ஒரு காரியம் செய்யுமுன் குரு அருள் (குருகிருபை) உள்ளதா எனத் தெரிந்துகொள்வது எப்படி எனப் பார்ப்போம். ஒரு காரியத்தில் ஈடுபடுமுன் தெய்வ பலமும் குரு அருளும் அவசியம். ஆனால் அவை நமக்கு அந்தக் காரியத்தில் உள்ளனவா என அறிவது எப்படி? இதற்கு ஒரு வழி ஜ்யோதிடம் மூலம் ப்ரஸ்னம் வைத்துப் பார்க்கலாம், அல்லது பகவத் சன்னிதியில் பூ கட்டி வெள்ளைப் பூ கிடைக்கிறதா எனப் பார்க்கலாம். கல்யாணம் பண்ணுவதற்கு முன் ஜாதகம் இல்லாதவர்கள் இதைச் செய்வது உண்டு. வெள்ளைப் பூவும் சிவப்புப் பூவும் ஒவ்வொரு காகிதத்தில் தனித்தனியே கட்டி, பகவத் ஸன்னிதானத்தில் வைத்து, பூஜை செய்து, குருக்களைக்கொண்டோ ஒரு சிறு குழந்தையைக் கொண்டொ ஒரு பொட்டணத்தை எடுக்கச் சொல்லி, வெள்ளைப் பூ வந்தால் பகவத் சம்மதம், சிவப்புப் பூ வந்தால் இல்லை எனப் பொருள் கொண்டு செய்வது வழக்கம். ஆனால் நாம் மனதில் நினைத்த காரியத்திற்கு குருவின் அருள் உள்ளனவா என தெரிந்துகொள்ள நாம் கைய்யாண்ட வழி தனி.ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகளின் கருத்துப்படி எமது கைய்யொப்பில் முன்பு நாம் P.K.V. CHALAM எனப் போடடுவந்ததை மாற்றி P.K.V. ACHALAM எனப் போடச் சொன்னார். எம்மை சாது ஓமிடம் போக மௌனமாக வழிவகுத்த ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகளின் சம்மதம் இதற்கு உண்டா எனச் சோதித்துப் பார்க்க நினைத்தோம். அப்பொழுது பம்பாயில் ஸ்ரீ ஹரிதாஸ் ஸ்வாமிகள் முகாமிட்டு சொற்பொழிவு ந்டத்திவந்தார். அன்று கடைசி நாள். சொற்பொழிவின் கடைசி நாளில் பக்தர்கள் காணிக்கைகளைத் திரட்ட ஒரு புது வழியைல் கையாண்டனர். ரூபாய் நோட்டில் தங்கள் பெயரை எழுதி அதைச் சீடர்கள் கொண்டுவரும் தட்டில் சமர்ப்பிக்கச் சொன்னார். அதிலிருந்து எடுக்கும் ஒரு சீட்டிற்குடையவர்க்கு அங்கிருந்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாகக் காட்சி தந்த ஸ்ரீ ஞானானந்தர் உருவப்படம் தரப்படும் எனக் கூறினர்.
அத்தருணம் எமக்கு ஓர் விசித்திரமான எண்ணம் தோன்றியது. ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள் சொன்ன பேர் மாற்றத்திற்கு இத்தருணம் குரு அருள் உள்ளதா எனச் சொதிக்க நாம் ஒரு ரூபாய் நோட்டில் எமது பெயரை “P.K.V. ACHALM” எனப் போட்டு அதைத் தட்டில் சமர்ப்பித்தோம். நூற்றுக்கணக்கில் குழுமியிருந்த அன்பர்கள் அத்தட்டுகளில் தங்கள் காணிக்கையை செலுத்தினார்கள். அதை ஒரு பெரிய கோணிப் பையில் இட்டு குருஜியிடம் தந்தார்கள். அதை அவர் நன்றாகக் குலுக்கி ஒரு சிறுவனைக்கொண்டு ஒரு நோட்டை எடுக்கச் சொன்னர்ர். அந்த நோட்டில் உள்ள பெயரை அவர் வாசிக்க சிரமப்பட்டு ஒரு வழியாக P.K.V. ACHALAM” என்று முடிப்பதற்குள் நாம் மேடையில் சென்றோம். அவர் எம்மைப் பார்த்து “அடே நீயா? நீ எப்பொழுது பெயரை மாற்றிக்கொண்டாய்” என வினவினார்.
அவருக்கும் எமக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததால் அவர் எம்மை எளிதில் கண்டுகொண்டார். “எமது இந்தப் புதிய பெயருக்கு குரு அருள் உள்ளனவா எனப் பார்க்கவே இப்படி அந்த ரூபாய் நோட்டில் எமது புதுப் பெயரைக் குறித்து குருதக்ஷிணையாகத் தந்தோம்” எனக் கூறினோம். அவரும் அதை சபையோருக்குச் சொல்லி குரு அருள் உண்டு என்பது சத்தியம், இதிலிருந்து தெரிகிறது என்று கூறினார். நாமும் அந்தப் பெரிய தக்ஷிணாமுர்த்தி ஸ்வரூபமாக விளங்கிய ஸ்ரீ ஞானானதர் படத்தைப் பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
பாருங்கள் குருவின் அருள் எப்படித் தெரிகிறது என்று. வீட்டிற்குப் போய் அந்தப் படத்தை உடனே இரவோடிரவாக எமது பூஜா அறையில் ஒரு சுவரில் ஆணி அறைந்து மாட்டினோம். அதைப் பார்த்த எமது தாயார், “எண்டா குழந்தாய் எப்படிக் கச்சிதமாக இந்தப் படத்தை தெற்கு திசை நோக்கி மாட்டினாய்? எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? தக்ஷிணா மூர்த்தி ஸ்வரூபம் தெற்கு நோக்கித்தான் இருக்க வேண்டும், எப்படி இதைப் புரிந்து கொண்டாய்” என வியந்தார். படத்தை மாட்டும்பொழுது எமக்கு இந்த விழயம் ஞாபகத்திற்கு வரவில்லை. நாம் ஏதோ சந்தோஷ நிலையில் விறுவிறுப்பாக வந்த உடன் சுவரில் காலியாக இருந்த இடத்தில் மாட்டினோமே தவிர இப்படி நினைத்துச் செய்யவில்லை.
என்னே குருவின் கருணை! குருவின் அருளைச் சோதனை மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
அசலம்!
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














