Guru Achalam
   படைப்புகள்




Favorites

Picture Puzzles

Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 



குருவருள்

குரு அசலம்




குருவருளைக் காண முடியாது. ஆனால் அனுபவத்தில் புரிந்து கொள்ளலாம். அதற்கும் நமக்கு நேரம் வர வேண்டும். நாம் நினைத்தவரிடமிருந்து அருள் வர வேணும் என்றில்லை. ந்மது மன நிலைக்குத் தகுந்தபடி அருள் புரியும் ஒரு சிறந்த ஞானியிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும். அவரிடமிருந்து நமக்கு அருள் கிடைக்கும். எப்படி?

1967-68ல் நாம் விரக்தியுடன் ஒரு வேலைக்கும் போகாமல் தினமும் முழு சமயமும் தியானம், பூஜை முதலியவையில் ஈடுபாட்டிருந்த சமயம். வேதாந்த விஷயமாக ஸ்ரீ சின்மயானந்தா, பூர்ணானந்தா, சிவானந்தா, இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகளின் நூல்களைப் படிப்பது, ஸ்வாமி சின்மயானந்தாவுடன் கடிதம் மூலம் சர்ச்சை சைய்வதுமாக இருந்த சமயம். அதிகம் யாரிடமும் பேசாமலிந்த சமயம். மௌனமாகக் காலம் கட்த்திவந்தோம். என் குடும்பத்தார், முக்கியமாக எமது அன்னை மிகவும் வருத்தமடைந்தார்.

ஒரு சமயம் அவர் என் சகோதரியுடன் ஸ்ரீ ஞானானந்தர் ஆசிரமத்திற்கு (திருக்கோயிலூர்) போய் சில தினம் அங்கு தங்கி அவர் அருள் பெறக் காத்திருந்தார்கள். அவரிடம் எம்மைப்பற்றியும் எமது தற்போதைய நிலையைப்பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார்கள். எமக்கு வேதாந்த விஷயத்தில் பல சங்கைகள் உள்ளதாகவும் எப்பொழுதும் அதைப் பற்றியே நினைத்திருப்பதாகவும், மௌட்யமாகக் காணப்படுவதாகவும் சொல்லி எமக்கு அருள் புரிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவரும் எம்மை அங்கு அழைத்துவரக் கட்டளையிட்டார். எமது தாயார் எம்மை அங்கு வந்து அவரை தரிசனம் செய்யக் கூப்பிட்டார்கள். மனதில்லா மனத்துடன் நாம் அங்குபோய் அவரை தரிசனம் சைய்தோம்.

எமக்கிருந்த வேதாந்த சந்தேகங்களை நிவர்த்திக்குமாறு எமது தாயார் அவரிடம் கோரினார்கள். ஒவ்வொரு தடவையும் அவர், ‘செய்வோம், சாயம்வேளை பூஜை ஆனபிறகு பார்ப்போம், காலை இறைவணக்கும் முடிந்து பேசுவோம், இவர்கள் பஜனை முடிந்த பிறகு அமருவோம், மதிய உணவுக்குப் பிறகு பார்ப்போம்” எனத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார். இரவு உணவுக்குப் பிறகு அவர் சயனத்திற்குப் போகும்போது, பக்தர்கள் அவர் சயன அறையில் போய் அவருக்கு சுஷ்ரூஷை செய்வார்கள். அதற்குக் கூட எங்களை அனுமதிக்க மாட்டார்கள். இப்படி மூன்று நாட்கள் முடிந்தன. இப்பொழுது பேசுவார் என்று கருதி அதி காலை முதல் இரவு வரை எல்லா வழிபாட்டிலும் கலந்துகொண்டு மனம் தளர்ந்து போய் விட்டோம். கடைசியில் ஊர் திரும்பத் தீருமானித்து அவரிடம் விடைச்பெற சென்று, “நாங்கள் ஊர் செல்லவிருக்கிறோம். தங்கள் அருள் வேண்டும்” எனக் கோரினார்கள் எமது தாயார். அவரும் “போய் வருவோம்” என உத்தரவு தந்தார். அப்பொழுதும் எமது தாயார், ”இவனுக்கு வேதாந்தத்தில் உள்ள சந்தேகங்கள் அகல அருள் தரவில்லையே என வருந்தினார்”. “பேசுவோம், போய்வருவோம்” என்று அவர் கூறினார். அப்பொழுதிருந்த மன நிலையில் நாம் அவரைப் பற்றித் தாயிடம் சொன்னது, “இவர் என்ன சாமியார், பார்ப்போம், போய் வருவோம், பேசுவோம் என்று தட்டிக்கழிக்கிறார். அவரிடம் பேசிப் பிரயோசனமில்லை. சில பேர்களுக்கும் உதவுகிறார், எல்லோருக்கும் சமமாக அருள் புரியவில்லை, நாம் போவோம்” என்று கூறி அங்கிருந்து ஒரு மாட்டு வண்டியை அமர்த்திப் புறப்பட்டோம். அப்பொழுது திடீரென்று எமது தாயார், ”குழந்தாய், இங்கிருந்து வேகு அருகில் திருவண்ணாமலையயில் ஸ்ரீ ரமணாசிரமம் இருக்கிறது. அங்கு ஸ்ரீ ரமணரின் சீடர் சாது ஓம் என்ற ஞானி இருக்கிறார். அவர் பம்பாய்க்கு வந்து சொற்ப்பொழிவாற்றியதைக் கேட்டிருக்கிறேன். நன்றாக உனது சந்தேகங்களைத் தீர்த்து வைக்க அவரால் முடியும். நீயும் ரமணர் வழியில் சிந்தனை செய்வதால் அவர் கருத்துக்களும் ரமணர் வழியில்தான் இருக்கும், போவோமா என்று வினவ, நாமும் வெகு சந்தோஷமாகச் சம்மதித்தோம். வண்டி திருவண்ணாமலை நோக்கிச் சென்றது.

ஸ்ரீ ரமணாசிரமத்திற்குப் பக்கத்தில் ஒரு சிறு குடிசையில் தனியே இருந்தார் ஸ்ரீ சாது ஓம் என்ற ஸ்ரீ ரமணர் சீடர். நாங்கள் போனபொழுது அவர் மற்றவர்களுடன் பஜனையில் அமர்ந்திருந்தார். எங்களை வரவேற்று அமரும்படி சொன்னார். எமது தாயார் அவரிடமும் எம்மைப்பற்றிக் கூறி, எமது சந்தேக நிவர்த்திக்கு வழிவகுக்குமாறு கேட்டுக்கொண்டார். மாட்டுவண்டி எந்களைத் திரும்ப ரயில் நிலயத்திர்க்கு அழைத்துப்போக வாசலில் நிற்கிறது, ஆதலால் அதிக நேரம் தாமதிக்க இயலாது எனச் சொன்னோம். அவர் சிரித்துக்கோண்டே இவ்வண்ணம் உரை செய்தார், “வேதாந்தம் என்பது கடைச் சரக்கா? வேண்டிய பொழுது உடனே கிடைப்பதற்கு? வாசலில் மாட்டு வண்டியை நிறுத்திக் கடையில் வாங்குவது போல வேதாந்த விஷயம் கிடைக்குமா? ஒன்று, வண்டியை விட்டு இங்கு இன்று இரவு தங்குங்கள், அல்லது வந்த வஷி வண்டியைக் கட்டுங்கள்”. இதைக் கேட்டதும் எமக்கு சரிதான் எனப் பட்டது. வண்டியில் நாமும் எமது தமக்கையும் திருவன்னாமலைக் கோயில் தர்சனம் செய்து மார்க்கெட்டில் போய் உணவுண்டு தாயாருக்கும் எடுத்துக்கொண்டு, திரும்ப வந்து வண்டியைப் போக சொல்லி, அவரிடம் வந்து சேர்ந்தோம்.

Ramana maharishi - image courtesy: achalasiddha.com

அன்று பஜனைக்குப் பிறகு அவர் தங்கியிருந்த் ஒரு ரூமை ஸ்த்ரீகளுக்கு சயனிக்கத் தந்து அவரும் நாமும் திண்ணயில் பாய் விரித்து அதில் அமர்ந்து பேசலானோம். இரவு 11 மணி முதல் அடுத்த நாள் காலை 4 மணி வரை சர்ச்சையில் ஈடுபட்டோம். எமது சிறுபிள்ளைத்தனமான வினாக்களுக்கு வெகு சாந்தமாகவும், விரிவாகமும் பதில் தந்து எமது சந்தேகங்களைப் போக்கினார். ஸ்ரீ ரமணரின் “நான் யார்” என்ற நூலைத் திரும்பத் திரும்பப் படித்து, அதில் சந்தேஹங்கள் இருந்தால் தமக்குக் கடிதம் வரைந்து அனுப்பினால் தாம் அதற்கு விடை அனுப்புவதாக வாக்களித்தார். எமது சந்தேகங்கள் ஒரு விதம் தீர்ந்தது. ஆனாலும் முழுதும் விளங்கவில்லை. அதிகாலை மாட்டு வண்டியில் ரெயில் நிலயத்திர்க்கு வந்து மதராஸ் வந்து சேர்ந்தோம். பிறகு பம்பாய் வந்து “நான் யார்” நூலைப் படித்து சந்தேகங்களைக் கடிதம் மூலம் ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகளுக்கு அனுப்பி, அவர் அதற்குத் தகுந்த பதில்களைத் தந்துகொண்டிருந்தார். அப்படி, நாளடைவில் எமக்கு வேதானத ஞானம் வந்து சங்கைகள் நிவர்த்தியாகின.

இப்பொழுது எமக்கு விளங்கியது, “ஸ்ரீ ஞானானந்தர் அவர்கள் அவர் உச்ச நிலையிலிருந்து கொண்டு கீழ் நிலைக்கு வந்து எமது சந்தேக நிவர்த்தி வருத்த மாட்டார், ஏன்? அவர் பரம ஞானி. ஆனாலும் எமக்கு நிராசை வராமல் எமது தாயாரை ஒரு கருவாக வைத்து அவர் வாய் வழி ஸ்ரீ சாது ஓம் என்ற ஸ்ரீ ரமணருடைய சீடரிடம் போக வழி வகுத்தார். அதனால் தான் எமக்கு ஸ்ரீ சாது ஓம் வழி சந்தேக நிவர்த்தி வந்தது. அதிலும் எமக்கு ஸ்ரீ ரமணர் நூல்களில்தான் சந்தேகங்கள் இருந்தன. அதைத் தீர்க்க ஸ்ரீ ரமணரின் சீடரைத் தேர்ந்தெடுத்தார். ஆதலால் ஸ்ரீ ஞானானந்தர் பெரிய மஹான், ஞானி. அவர் அருள் எமக்கு நேரடியாகக் கிடைக்காவிட்டாலும், எமக்குத் தகுந்த ஒரு மஹானைப் பார்க்க வழிவகுத்து, எமது ஞானம் வர அருள் செய்தார். இதுதான் குரு ஆருள் என்பது. நாம் ரமண வழியைப் பின்பற்றுவதால் மௌன்மாக அதற்குகந்தவரைச் சுட்டிக்காட்டி எமக்கு அருள் புரிந்தார். அதைப் புரிந்து கொள்ள நமக்குத் தகுதி வேண்டும்.

இப்படி ஸ்ரீ சாது ஒம் கடிதம் வழி தரும் விளக்கங்களூள் ஒரு நாள் இவ்வண்ணம் வரைந்திருந்தார், “பி.கெ. நீங்கள் வெங்கடாசலம் என்று பெயர் கொண்டாலும், கடிதங்களில் கை ஒபபமிடும்பொழுது “PKVCHALAM” என்று காணப்படுகிறது. சலம் என்றால் சலிப்பது, அதாவது சஞ்சல புத்தியுடையது. அதை மாற்றி “PKV ACHALAM” என்று கை ஒப்பமிடடால் “Pure Kaivalya Achalam” அதாவது சுத்தமான விகல்பமிலலாத அசலம் என்ற கருத்து அமையும். என்று எழுதியிருந்தார். அதை குரு அருளாகக் கொண்டு அன்று முதல் நமது பெயரைச் சுருக்கி அசலம் என்று மாற்றிக்கொன்டோம். கை ஒப்பமிடும்பொழுது “PKVachalam” என்று மாற்றிக்கொண்டோம். என்னே குருவின் அருள்.

அசலம்



             

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday