பஞ்ச முக ஆஞ்சனேயர்
மழலைகள் குழுவினர்
பஞ்ச முக ஆஞ்சனேயர்
இணையப் பாட்டி:
செகந்தராபாத் ரயில் நிலையத்திற்கு அருகில் ஆஞ்சநேயருக்கு ஒரு கோவில் உள்ளது. இங்கு அவர் பஞ்ச முக ஆஞ்சநேயராகக் காட்சித் தருகிறார். வராகர், கருடர் ஆஞ்சநேயர், நரசிம்ஹர், ஹயக்கிரீவர், என்று ஐந்து முகங்கள், பத்துக் கைகள், அருமையான காட்சி, ஹயக்கிரீவர் அரக்கர்களை அழித்து வேதங்களை அவர்களிடமிருந்து மீட்டுக் கொடுத்தவர். இவர் பகதர்களின் அக்ஞானத்தைப் போக்குகிறார். நரசிம்மர் இரண்யனை அழித்து கோபம் அடங்காமல் ஆனால் பிரஹ்லாதனுக்குக் கருணையாகக் காட்சி கொடுத்த் முகம், பக்தர்களை பிசாசு, பூதப், பிரேதத் தொந்தரவிலிருந்து விடுபட வைக்கும் முகம், கருடன் கொண்ட முகம் விஷப் பாம்பு போன்ற கொடிய விஷ ஜந்துவிடமிருந்து காப்பாற்றுகிறது. வராகருடைய முகம் சுரம், மற்ற ரோகங்களைப் போக்குகிறது. வாராகர் பாதாளம் வரை சென்று பூமியை மீட்டுக் கொடுத்தவர், நடுவில் இருக்கும் ஆஞ்சநேயர் பக்தர்களைக் காத்து எதிரிகளை வென்று கிரஹ தோஷங்களைப் போக்கி அருளுகிறார். இதைப் போல் ஆஞ்சநேயரைப் பற்றிய சுதர்சன சம்ஹிதை என்ற நூலில் பஞ்சமுகி ஹனுமானைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது, கோவில் கர்பக் கிரஹத்தில் இன்னொரு ஆஞ்சநேயர் நிற்கிறார், ஒரு கையில் கதையுடன் வீர ஆஞ்சநேயராக்க் காட்சி தருகிறார். இவைகளெல்லாம் பார்த்தால் மனதிற்கு சாந்தி ஏற்படுகிறது.அன்புடன் விசாலம்
ராகவேந்திர ஸ்வாமிகள்
தாத்தா சீனு:
நான் அந்த யதிராஜரின் பரம பக்தரகளில் ஒருவன். அவர் ஜீவ சமாதி அடைந்த மந்த்ராலயத்திற்கு அருகே ஓடும் கோதாவரி நதிக்கு எதிற்க் கரையில் சற்று தூரத்தில், ஸ்வாமிகள் 12 வருட காலம் தவமிருந்த "பஞ்சமுக ஆஞ்சநேயர் குகை" ஒன்றிருக்கிறது. அந்த குகையினுள் எதிரே சற்று நிமிர்ந்து நோக்கினால் தாந்தோன்றியாக 'பஞ்சமுகியாக" ஸ்ரீ ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள் பூஜை செய்து வந்த சிவலிங்கமும் அங்கு இருக்கிறது.1971-72டில் (சரியாக ஞாபகம் இல்லை) நான், என் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நதியை பரிசலில் தாண்டி, ஒரு மாட்டு வண்டியில் காட்டிற்குள் சென்று அந்தப் புண்யஸ்தலத்திற்குச் சென்றேன். அப்பொழுது என்னையறியாமலேயே பக்திப் பரவசத்தில் மூழ்கினேன். அங்கு சென்று மந்த்ராலயத்திற்குத் திரும்பி வருவாதற்குக் கால தாமதம் ஆகிவிட்டது. மடத்தில் போஜன காலம் முடிந்துவிட்டது. பந்திகள் எல்லாம் முடிந்து "சாப்பிட்ட இலைகளை" யெல்லாம் எடுத்துத் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். "ஸ்வாமிகளுக்காக" ஒரு வேளை விரதம் இருந்தால் நல்லதுதான் என்று நானும் என் சகதர்மினியும் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு பரிசாகர் வேகமாக எங்களிடம் வந்து, கன்னடத்தில் "தாங்கள் பெங்களூரிலிருந்து வந்தவர்களா?" என வினவினார். நான் ஆமாம் என்று சொன்னவுடன், " வாருங்கள், வாருங்கள், சீக்கிரமாக. உங்களுக்காகத்தான் கார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூப்பிட்டழைத்துக் கொண்டு போய் இலைகள் விரித்து சாப்பிட வைத்தார்.
நான் ஆச்சரியத்துடன் "யார் எங்களைப் பற்றிச் சொன்னார்கள்" என்று கேட்டதற்கு, "விவரமெல்லாம் எனக்குத் தெறியாது. மடத்துப் பெரியவர் ஒருவர் சொன்னார், பங்களூரிலிருந்து ஒரு குடும்பம் வரும். அவர்கள் வருவதற்கு நேரமாலும் ஆகலாம். எதற்கும் சாப்பாடு தயாராய் வைத்திருங்கள் என்று" என்றார் அவர். இது "மந்திரமா மாயமா" அல்லது என்னவென்று இதைப் படிப்பவர்கள் அவரவர் மனதிற்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி வைத்துக் கொள்ளட்டும். நடந்தது என்னவோ முற்றிலும் உண்மை ("உண்மையின் அருமை"யை சிறு வயதிலிருந்தே எப்படிப் போற்றி வளர்த்து வருகிறேன் என்று உங்களில் சிலருக்குத் தெறிந்திருக்குமென நினைக்கிறேன். நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
. கடவுள் எனக்கருளிய நான்கு குருக்களில் ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகள் முதல்வர். தினமும் படுக்கையிலிருந்து எழும்பொழுதும், குளித்த பிறகும், இரவில் படுக்கப்போகும் முன்பும், அதைத் தவிர மனக் கஷ்டம் நேரும் சமயங்களிலும் (தற்பொழுது என்னருமை விஷுவிற்காக) சொல்லும் பிரார்த்தனையின் ஒரு பகுதி கீழ்கண்டவாறு:
1. ஓம் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்த்ராய சத்ய தர்ம வ்ரதாய ச
பஜதாம் கற்பகவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ
2. ஓம் சாயிநாதாய ஸ்ரீ சாயீஸ்வராய ஷீரடிநாதாய ஸ்ரீ குருநாதாய நமஹ
3. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்க்ராசர்ய ஸ்ரீ சந்த்ரசேகர ஸ்வாமினம் நமஹ
4. ஓம் ஸ்ரீ சத்ய சாயீஸ்வராய நமஹ
என்னருமை விஷுவிற்காக நான் வேண்டிக்கொள்ளும் பஞ்ச முக ஆஞ்சநேயரைப் பற்றி திருமதி விசாலம் அவர்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்குச் சட்டென்று தோன்றியதை எழுதலானேன்.
.
இது பொதுவாக பதிலொன்றும் எதிர்பாராமல் எழுதியது. ஸ்ரீசூர்ணத்தைப் பற்றி விவரம் தெறிந்து கொள்ளும் ஆவலில் பல நாட்களுக்கு முன்பு ஒரு மடல் விடுத்திருந்தேன், பதில் இன்றுவரை கிடைக்கவில்லை. எனினும் அந்த ஸ்தலத்திற்குப் போகும் வாய்ப்பு எனக்கு இப்பொழுது இல்லை. அப்படி வாய்ப்பு நேரும் பொழுது இங்கிருப்பவர்களைக் கேட்டுத் தெறிந்துகொள்வேன்.
ஸ்ரீனிவாசன்
விக்கிபீடியாவிலிருந்து:
பஞ்சமுக ஆஞ்சனேயர் ஸ்ரீ ராகவேந்திரரின் பிரதானமான இஷ்ட தெய்வம். அவர் பஞ்சமுக ஆஞ்சனேயரை வழிபட்ட இடம் தற்போது "பஞ்சமுகி" என்று வழங்கப்படுகிறது. இங்கே அவருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் ஒரு கோவில் உள்ளது. 40 அடி உயரமுள்ள பச்சை நிறப் பளிங்குக் கல்லினாலான ஆஞ்சனேயர் திருவள்ளூரில் அமைக்கப்பட்டுள்ளார்.பஞ்சமுக ஆஞ்சனேயரின் ஐந்து முகங்களுள்
ஹனுமான் கிழக்கு நோக்கி இருக்கிறார், இவர் மனத் தெளிவைத் தருகிறார்.
நரசிம்மர் தெற்கு நோக்கியிருக்கிறார், இவர் வெற்றியையும் அஞ்சாமையையும் தருகிறார்.
மேற்குப் பார்த்த கருடன் தீய சக்திகளையும் விஷங்களையும் நீக்கி அருள்கிறார்.
வடக்கு நோக்கிய வராஹர் வளமையையும் செல்வத்தையும் நல்குகிறார்.
வானத்தை நோக்கியுள்ள ஹயக்ரீவர் அறிவையும் நல்ல குழந்தைகளையும் அளிக்கிறார். இவர் வழக்கமாக ஹனுமானின் முகத்தின் மேற்புறம் சரிவான நிலையில் காட்டப்படுகிறார்.
ஆகிரா
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












