தாயென்று கும்பிடடி பாப்பா
- அருள் மணக்கும் அவதாரங்கள்
A.K. செல்வதுரை
தான் பெற்ற வரத்தினால் அண்ட சராசரங்களும் ஆயிரம் கோடி ஜீவராசிகளும் தனது ஆளுகைக்கு வந்துவிட்டதாக இறுமாந்தான். எனவே மும்மூர்த்திகளும் தனக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்று எள்ளி நகைத்தான். தனது தம்பி இரணியாட்சதனைக் கொன்ற அரிநாரயண மூர்த்தி தனக்கு ஒரு துரும்பு என்று அண்ணினான். அவனைப் பழிவாங்கியே தீருவது என்று முடிவு கட்டினான். எனவே, மக்கள், மாபெரும் ஞானியர், ஆன்றோர்கள், சான்றோர்கள், வேதியர்கள், மாதவம் புரியும் முனிவர்கள் ஆகிய அனைவரையும் தங்கள் முன்பாகக் கூடும்படிக் கட்டளையிட்டான். "இனி யாராவது அரி ஓம் நமோ நாராயணா! என்று அழைத்தீர்களேயானால் அவர்களை எரியும் தீயிலிட்டுப் பொசுக்கிவிடுவேன். அண்ட பகிரண்டங்கள் அனைத்திலும் வாழ்பவர்கள் எல்லோருமே இப்போது முதல் இரணியாய நம! என்றே ஓத வேண்டும். இம்மந்திரம் ஓதிய பின்னரே எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும்" என்றான். என்னைத் தவிர இனி வேறே எந்த தெய்வத்தையும் வணங்குதல் கூடாது என்றான். அல்லும் பகலும் அறுபது நாழிகையும் உங்கள் மனத்தில் நானே இருக்க வேண்டும்" என்றான்.
இந்த உத்திரவினால் அண்ட கோளங்கள் யாவும் நடுங்கின. செய்யும் தொழில் செய்பவர்கள், தானம் செய்பவர்கள், தவம் செய்பவர்கள் ஆகிய அனைவருமே, "இரணியாய நம!" என்று கூறியே தொடங்கலாயினர். மும்மூர்த்திகளுக்கும் மேலானவன் இரணியன் ஒருவனே. இரணியனைத் தவிர மேலானவன் எங்குமே இல்லை என்று உறுதி பூண்டனர். அளவில்லாத ஆணவத்திலும் திமிரிலும் இரணியன் ஆண்டு வந்தான்.
இரணியன் தவத்தை மேற்கொள்ளச் சென்றபோது நீலாவதியானவள் கர்ப்ப முற்றிருந்தாள். இரணியன் இல்லாத நேரத்தில் தேவேந்திரன் அவன் குலத்தை அழிக்க எண்ணினான். நீலாவதியின் வயிற்றில் வளரும் கருவானது குழந்தையாக உருவாகிப் பிறந்தால் அது மூவுலகையும் அழிக்கும் வல்லமையுடைய இராட்சதனாக உருவாகும் என பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் வீயாழபகவான் எச்சரிக்கை செய்தார். எனவே இரணியன் தவம் செய்யச் சென்றுள்ள தருணத்தைப் பயன்படுத்தி, அவன் இல்லாத நேரத்தில் நீலாவதியின் கர்ப்பத்தில் உள்ள கருவை அழிக்க எண்ணினான். இரணியன் மனைவி நீலாவதியின் இருப்பிடத்திற்கு தேவகணங்களுடன் வந்து சேர்ந்தான். காவல் இருந்த அரக்கர்களைப் பந்தாடினான். தேவேந்திரன். வஜ்ஜிராயுதத்திற்கு எண்ணற்ற அரக்கர்கள் பலியானர்கள் சிதறியோடினார்கள் நீலாவதியின் இருப்பிடத்திற்குள் பிரவேசித்தான். நீலாவதியின் கரம் பற்றி இழுத்தான். நீலாவதி கதறினாள். அவளை அப்படியே தூக்கி தனது இரதத்தில் போட்டான். வாயு வேகம் மனோவேகத்தில் இரதத்தை செலுத்தி ஓர் பயங்கரமான அடர்ந்த கானகம் அடைந்தான்.
இதற்குள் தேவேந்திரனின் செயல் குறித்து 100க்கும் மேற்பட்ட தேவர்கள் பதறினார்கள். இதனால் என்னென்ன துன்பங்கள் நேருமா என்று அலறினார்கள். செய்வதைறியாது திகைத்தனர். எல்லோரும் நாரதமாகா முனிவரிடமமோடினர். கொடும் ஆபத்தினின்றும் காத்தருளல் வேண்டும் என்று வேண்டினார்கள். நாரதரும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி, தேவேந்திரனைத் தான் போய்த் தடுப்பதாக உறுதியளித்தார். தேவேந்திரன் நீலாவதியைச் சிறைப்பிடித்து வரும் வழியில் போய் அவனை எதிர்கொண்டார்.
நாரதரைத் தேவேந்திரன் மிகவும் கடிந்துகொண்டான். "நாரதரே இவள் வயிற்றில் வளரும் சிசுவானது வெளிப்பட்டால் ஈரேழு பதினான்கு உலகையும் அழிக்கும் வல்லமையுடன் கொடிய அரக்கனாகத் திகமும், எனவே என்னைத் த்டுக்காதீர்கள்" என்றான். நாரதர் தேவேந்தினைப் பார்த்து நகைத்தார். "தேவர்க்கதிபா! இந்த சிசுவானது பிறந்து பெரியவனாக வளர்ந்து உங்களை அழிக்கத் தொடங்கும் வரை இதன் தந்தையாக விளங்கும் இரணியன் சும்மாவா இருப்பான். ஏற்கனவே உங்களோடு மாறாத பகைகொண்ட இரணியன் உன்னுடைய இந்தச் செயல் அவனுக்கு மேலும் சினத்தை மூட்டாதா? அதன் விளைவால் உங்களுக்கு அழிவு நிச்சயம் அல்லவா? எனவே உன்னுடைய இலக்கு இரணியன் தானே தவிர, இவள் வயிற்றில் வளரும் கருவல்ல" என்றார்.
இந்திரன் நாரதரை, நோக்கி, "சுவாமி, தாங்கள் என்னை என்னதான செய்யச் சொல்கிறீர்கள்?" என்றான்.
நாரதர், "தேவேந்திரா, இவளை விட்டுவிடு. இவள் வயிற்றில் வளரும் சிசுவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு தேவேந்திரன் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றான்.
அதற்கு நாரதர், "நான் இவள் வயிற்றில் வள்ர்ந்து வரும் சிசுவிற்கு ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் திருநாமத்தைப் போதிக்கிறேன். இதனால் அக்குழந்தை அல்லும் பகலும் அறுபது நாழிகையும் ஸ்ரீ ஹரிநாராயணனின் நாமத்தையே உச்சரிக்கும். இதனால் வரம் பெற்று வரும் இரணியனுடைய அழிவிற்கு இந்தக் குழந்தையே காரணமாக விளங்கும். எனவே, தேவேந்திரா இவளை விட்டுவிடு" என்றார். அப்படியே தேவேந்திரன் அவளை விட்டுவிட்டு அகன்றான்.
தேவேந்திரனின் கொடுமையினின்றும் விடுபட்ட நீலாவதியானவள் நாரத முனிவனை விழுந்து வணங்கினாள். கண்ணீர் விட்டு அழுதாள். நாரதர் அவளுக்கு ஆறுதல் கூறினார். தேவேந்திரன் அவளை முரட்டுத்தனமாக இழுத்து நீண்ட தூரம் துயரத்தில் அழைத்து வந்ததால் உடல் தளார்ச்சி கொண்டு சோர்வுடன் மயங்கிச் சாய்ந்தாள். இந்தத் தருணத்தை எதிர்பார்த்து இருந்த நாரதர் அவள் மயக்க நிலையில் இருக்கும் போது நாராயணனின் அற்புத நாமத்தின் மகிமையை உபசரித்தார். அவனே அகில புவனத்திற்கும் காரண கர்த்தா என்பதை அந்த குழந்தைக்கு உபதேசித்தார். கருவில் வளரும் சிசு பக்தி சிரத்தையுடன் கவனமாகக் கேட்டுக் கொண்டது.
தான் வந்த வேலை முடிந்தது என்று நாரதரும் நீலாவதியும் நீண்டநாள் கருவினைக் சுமந்து தேவர்கள் எல்லாம் மலர்தூவி ஆசீர்வதிக்கவொரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
ஏற்கனவே இரணியனுக்கும் நீலாவதிக்கும் ஆறு ஆண்பிள்ளைகள் உண்டு.
2..அமலாதான்
3. மஹாலாதன்
4. உபலாதன்
5. கிரதலாதன்
6. பல்லாதன்
7வதாக பிறந்தவன் தான் பிரகலாதன். இரணியன் தவம் முடித்து வரங்கள் பெற்றுத் திரும்பியதும் பிரகலாதர் பிறந்தான்.
பிரகலாதன் என்றால் சிறந்த மகிழ்ச்சியை உடையவன் என்று பொருள்.
ஹ்லாதம் - மகிழ்ச்சி
பிர - சிறாப்பு
பிரகலாதன் அறிஞருக்கு அறிஞனாக விளங்கினான். தூய்மையானவர் யாரையும் விடவும் வேதங்களை விடவும் தூய்மையானவன். இறைவனைப் பற்றி அளாவில்லாத ஞானம் உடையவன். அறத்துக்கு நாதன். தாயின் உயிர்க்கு அன்புடையவன்.
உரிய வயது வந்ததும் பிள்ளையைக் கல்வி பயில சுக்கிராச்சாரியரின் புதல்வர் சண்டாமார்க்கர் என்பவரிடம் ஒப்படைத்தான். கல்விச் சாலையில் பிரகலாதனின் நடவடிக்கைகள் ஒரு வித்தியாசமான உணார்வை உண்டு பண்ணின. எப்போதும் திருமாலின் திருநாமத்தையே உச்சரித்து வந்தான். நாராயணா! நாராயணா! என்று அவன் நா எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும். திருமாலின் புனிதப் பிரசாதமான திருத்துழாயை அவன் இரு செவிகளிலும் வைத்துக் கொள்வான். மாலையாகச் சூடி அணிந்து மகிழ்வான். பக்தி மிகுதியால் பாடி ஆடிவான். உடன் பயின்ற மாணவர்களையும் தன்னைப்போல் பக்தியால் திளைக்கச் செய்வான்.
இவனது செயல்களையெல்லாம் சண்டாமார்க்கர் கண்டார். அவனுடைய ஓதாது உணர்ந்த தெய்வீகத்தன்மையைப் பார்த்து அதிர்ந்தார்.
பிரம்மனால் படைக்கப்பட்ட அண்டம் மட்டும் அல்லாது அனைத்து அண்டங்களிலும் தன் பெயரே நிலைக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்த இரணியனின் புதல்வனா அரிநாமத்தை உச்சரிப்பது? ஐந்து கோடியே எழுபதாயிரம் ஆண்டுகள் ஆயுளையுடைய இரணியனின் மகனா இப்படிப் பிதற்றுவது என்று அதிரிந்து போனார்.
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















