தாயென்று கும்பிடடி பாப்பா
- அறூபத்து மூவர் - 5
பிள்ளையார் பாட்டி
அருந்தொண்டாற்றிய நாயன்மார்கள்
பிரசாதங்கள் மறைகின்றன, ஆனால் யாரையுமே காணோமே எனத் திகைத்த நம்பியின் தந்தையும், ஆசிரியரும், இது என்ன மாயமோ என் அஞ்சினார்கள். ஆனால் நம்பியோ, இறைவன் திருவருளால் தன் இளங்குரலில் அமுதமானதொரு கீதத்தைப் பாட ஆரம்பித்தார். என்ன, என்ன, என்ன??? ஆச்சரியமாய் இருந்தது தந்தைக்கும், ஆசிரியருக்கும். இத்தகையதொரு பாடலை நாம் யாரும் கற்பிக்கவே இல்லையே என யோசித்தனர். நம்பியோ மேன்மேலும் அமுதினும் இனிய கீதங்களைப் பாட ஆரம்பித்தார். நம்பி சொல்கின்றார் தந்தையிடமும், ஆசிரியரிடமும் விநாயகர் அருளாலேயே தமக்கு இத்தகைய பாக்களால் பாமாலை அணிவிக்க வந்ததாய். தந்தையும் மனம் மகிழ்ந்தார். அவ்வாறே ஆசிரியரும், தெய்வத் திருமகனைப் பெற்றீர்கள் என நம்பியின் தந்தையை வாழ்த்தினார். நம்பியின் தொண்டும் தொடர்ந்தது.
அப்போது சோழநாட்டை ஆண்டு வந்த அரசன் ஆன ராஜ ராஜ சோழம் நம்பியின் புகழைக் கேட்டு அதிசயித்தான். தானும் அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் கொண்டான். அத்தோடு அல்லாமல், அம்மன்னனுக்கு சைவ சமயக் குரவர்களால் பல பாடல்கள் ஈசன் மேல் பாடப்பட்டிருந்ததும், அந்தப் பாடல்களில் மிகச் சிலவே பாடப்பட்டு வந்தது எனவும், மற்றவை பற்றிய கவலையும் உள்ளத்தே நெடுநாளாக இருந்து வந்தது. அந்தப் பாடல்கள் போனவிதம் என்ன? அவைகளை எப்படிக் கண்டறிவது என்றும் எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான். அப்போது தான், இறைவனின் திருவருளைப் பெற்ற நம்பியின் ஆற்றல் பற்றிய செய்தியும் அவனுக்குக் கிட்டியது. இவர் மூலம் தான் தன் கவலை தீரவேண்டும் என எண்ணி, பல விதமான மரியாதைகளுடனேயே இறைவனுக்கு வேண்டிய நிவேதனப் பொருட்களுடனும் நம்பியை நாடி வந்தான்.
தன் முன்னிலையில் விநாயகருக்கு வழிபாடு நடத்தி அவர் ஏற்றுக் கொள்வதைத் தான் நேரில் பார்க்கவிரும்பியதாய்த் தெரிவிக்க, நம்பியும் இசைந்து, விநாயகருக்குச் சிறப்பாக வழிபாடு நடத்தி மன்னனின் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, விநாயகரும் அவ்வாறே அருளினார். மன்னனுக்கோ மன மகிழ்ச்சி. உடனேயே திருமுறைகள் பற்றிய தகவலை நம்பியிடம் சொல்லி அவை இருக்குமிடம் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் வேண்ட, நம்பியும் விநாயகரிடம் பிரார்த்தனை செய்தார். விநாயகரின் அருளால் நம்பிக்கு அவை தில்லை அம்பலவாணன் கோயிலில் (தற்சமயம் சிதம்பரம் என அழைக்கப் படுகின்றது) தேவார மூவரும் கை ஒப்பம் வைத்து ஒரு தனி அறையில் வைக்கப் பட்டுள்ளது எனக் கண்டறிந்தார். அதை மன்னனிடம் சொல்ல, மன்னனும் உடனேயே தில்லைக்குச் செல்லவேண்டி ஆயத்தம் ஆனான். நம்பிகளையும் உடன் அழைத்தான்.
தில்லைக்குச் சென்றனர். ஆடலரசனின் திவ்ய தரிசனமும் கிடைத்தது. தில்லை வாழ் அந்தணர்கள் சிறப்பாக வழிபாடுகள் செய்து கொடுத்து மன்னனிடம் வந்த காரணம் கேட்க, மன்னனும் சொல்கின்றான். "சோழ அரசர்கள் அனைவருக்கும் பட்டம் சூட்டும் பொறுப்பு வாய்ந்த நீங்கள், இங்கே ஒரு அறையில், தேவார மூவரால் பாடப் பட்ட திருமுறைகள் இருப்பதை அறிவீர்களா?" என்று கேட்கின்றான். தில்லை வாழ் அந்தணரில் மூத்த அந்தணர் ஒருவர், "அறிவோம் ஐயா, இதோ இந்த அறையில் தான் வைக்கப் பட்டுள்ளது. ஆனால் எம் முன்னோர்களுக்கு, மூவர் சொன்ன செய்தி என்ன தெரியுமா? தேவார மூவர் ஆன அப்பரும், சுந்தரரும், ஞானசம்மந்தரும், நேரில் வந்தால் தவிர, இவற்றைத் தர வேண்டாம் என்று சொல்லி இருப்பதாய்ச் சொல்லி இருக்கின்றனர். வழி வழியாய் அவ்வாறே நாங்கள் கேள்விப் படுகின்றோம். இப்போது அவர்களில் யாருமே இல்லையே ஐயா? அவர்களை எவ்வாறு கொண்டு வருவது? அவர்கள் சம்மதம் இல்லாமல் அறை திறக்கப் படக் கூடாது என்பது கட்டளை!" என்று சற்றே பயத்துடன் கூறுகின்றார் தில்லை வாழ் அந்தணர்.
மன்னன் யோசித்தான். முகத்தில் ஒளி பிறந்தது.
கீதா சாம்பசிவம்
தொடரும்...
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||
















