Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Azhagi.com
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Tamil Softwares


வெளியே

தமிழிலக்கியம்
தமிழிதழ்கள்
தமிழ்மணம்
நிலாச்சாரல்
சுரதா.காம்
தேன்கூடு
தினமலர்
தினகரன்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com




  Website dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine


Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications     CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site     CLICK HERE

Download Azhagi Tamil Software @         Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
menu bar

மழலைகள்










 



அர்ஜுனன் தீர்த்த யாத்திரை

A.K. செல்வதுரை

அர்ச்சுனன் தரிசித்த அற்புதத் திருத்தலங்கள் - அத்தியாயம் 2

Hardwar - image: Wikipedia

அர்ச்சுனன் தனது தீர்த்த யாத்திரையில் இரண்டாவதாக அடைந்த இடம். இங்கு செல்லத் தற்போது குருஷேத்திரத்திலிருந்து அம்பாலா ஜங்ஷன் என்ற இடத்திற்கு ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டும். குருஷேத்திரத்திலிருந்து சுமார் 40 கிலோ மிட்டர் தூரத்தில் ஹிரித்துவார் அடையாலம். டில்லியில் இருந்து பஸ் பிரயாணம் செய்தால் 103 கிலோ மீட்டர் தூரத்தில் உள்லது. இது மிகப்பெரிய நகரம். இது கங்கை சூழ்ந்திருக்கும் அழகுமிக்க நகரமாகும். இயற்கை அழகு கொஞ்சும் சிறப்பு மிக்க நகரமாகும். ரயில்லே ஸ்டேஷனில் இருந்து அரை கீ.மீ. தூரத்தில் மதராஸி தர்மசாலை என்ற இடம் உள்ளது. இது இன்றுவரையிலும் மதராஸ் (சென்னை) காரர்களாலேயே நடத்தப்பாட்டு வருகிறது.

இந்த தர்மசாலை வாசலிலேயே செல்லும் கங்கை நதியின் அழகினை நேரம் போவாதே தெரியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். இந்த நதியில் அர்ச்சுனன் மூழ்கிய போதுதான் பாம்புக் கூட்டங்களால் இழுத்துச் செல்லப்பட்டு உலூபி என்று சொல்லக்கூடிய நாகக் கன்னிகையை மணந்து அரவான் என்று சொல்லக்கூடியப் பிள்ளையைப் பெற்றான்.

Rishikesh - image: Wikipedia

அரித்துவாரில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரிஷிகேஷம். இயற்கைக் காட்சிகள் நிறைந்த அற்புதமான மலைகள் சூழ்ந்த இடமே ரிஷிகேஷமாகும். இந்த நகரம் கங்கைக் கரையின் மேலேயே உள்ளது. நுறைகள் பொங்க கங்கை நதி ஓடுகின்ற அழகு அற்புதமான காட்சியாகும். இங்கு பயணிகள் தங்குவதற்கு வசதியாக 'புஷ்கரபவன்' மற்றும் 'வீரராகவ மந்திர்' என்னும் சத்திரங்கள் உள்ளன். ரிஷிகேசத்தில் தொடங்கும் மலைத் தொடர் இமயமலையில் போய் முடிகிறது. இங்கே மலைமீது லட்சுமணஜீவாலா பார்த்து மகிழத்தக்கது. இது பத்திரிநாத் போகும் வழியில் உள்ளது. இங்கே இருந்து கங்கையைக் கடக்கக் காபாற்றுப் பாலம் உள்ளது. இதன் மீது நடக்கும்போது மிகவும் ஆழ்பகுதியில் கங்கை ஓடுவதைப் பார்க்க மனம் ஆனந்தத்தில் லயிக்கும்.

இருடிகேசத்திலிருந்து அர்ச்சுனன் பத்ரிகாசிரமம் யாத்திரை தொடங்கினான். தற்போது 200 கிலோ மீட்டர் பஸ்ஸில் பிராயணம் செய்ய வேண்டும். வழி நெடுக இமயமலையின் தொடர்ச்சி பார்ப்பதற்குக் கொள்ளை அழகு. பஸ்ஸில் இருபுறமும் மலைகளே சூழ்ந்திருப்பது பிரமிப்பூட்டுகிறது. நிறைய அபாயகரமானதும், குறுகியதுமான வளைவுகள் உள்ளதால் பஸ் ஓட்டுனர்கள் திறமைசாலிகளாகவே இருக்க வேண்டியுள்ளது.

அவர்கள் திறனாகவும் ஜாக்கிரதையாகவும் ஓட்டுவது நமக்கு சிலிர்ப்பூட்டுகிறது. மலைத் தொடரும் கங்கை நதியும் ஒன்றாகக் கூடவே வருவது மிகப் பெரிய அனுபவமாகும்.

Devprayag - image: Wikipedia

வழியில் 50வது மைலில் தேவப் பிரயாகை வருகிறது. இது கண்டமென்னும் கடிநகர் ஒன்று, 108 திவ்யதேசங்களில் ஒன்றாக்க் கருதப்படுகிறது. புருஷோத்தம பெருமாள் ஆலயம் மிகவும் பிரசித்தம். பெரிய கோபுரம், பிரகாரங்கள் சகிதமாக மெய்சிலிர்க்க வைக்கும் ஆலயமாகும். இங்கிருந்து பெரிதும் சிறிதுமாக நிறைய ஊர்கள்.

தேவப்பிரயாகை, நந்தப்பிரயாகை, கர்ணப் பிரயாகை, ருத்ரப்பிரயாகை, அலகந்தா என்று சிறுசிறு நதிகளாக கங்கையில் கலக்கின்றன. வழிநெடுகக் கடைகளும் சத்திரங்களும் உள்ளன.

இங்கு கங்காநதி 2 கீ.மீ. ஆழத்தில் செல்லுகிறது. வழிநெடுக சிறுசிறு மலைகளில் இருந்து கொட்டும் சிறுசிறு அருவிகள் மனதுக்குக் கொள்ளை அழகு. இந்த அருவிகளில் வசதியாக நீராடலாம். ஆனால் கடுமையான குளிரைத் தாங்க வேண்டும். மலைகள்மீது பனிக்காட்டிகள் உறைத்திருக்கும். எங்கும் பனி மூட்டங்கள், பனி மூட்டங்களுக்கு இடையில் மலைத்தொடர்களைப் பார்த்தால் வெள்ளி மலைகள் போல் காட்சியளிக்கும்.

பத்ரிகாஸ்ரமம் செல்லும் யாத்திரையில் அர்ச்சுனன் இந்த திவ்யதேசத்தையும் தரிசிக்கிறான். திருமங்கை ஆழ்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. "பிரதி சென்று அடைநெஞ்சே" என்று தம் மனத்திற்குக் கட்டளையிட்டுக் கொள்கிறார்.

பத்திரிகாசிரமம் செல்லக் கரடு முரடான பாதைகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து செல்ல வேண்டும். இந்த மலைப் பிரதேசத்தில் சுமார் பத்தாயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தபால் பட்டுவாடா குதிரை, மற்றும் கழுதைகள் நுணைகொண்டு தான் நடக்கிறது. பத்ரிகாசிரமம் செல்ல நடக்க முடியாதவர்களுக்கு டண்டி. கண்டி. குதிரை என்ற மூன்று முறைகளில் அழைத்துச் செல்கிறார்கள் பணம் அதிகமாக சிலவாகும். 1. டண்டி (4 பேர் சுமப்பது)
2. கண்டி (ஒருவர் முதுகில் சுமந்து செல்வது)
3. குதிரை (ஒருவர் மட்டும் அமர்ந்து கொள்ளா வேண்டும், உடன் குதிரை ஓட்டுபவனும் அமர்ந்துகொள்வான்)

முற்றமுத்துக் கோல்துணையா முன்னடிநோக்கி வளத்து
இற்றகால்போல் தள்ளி மெள்ள இருத்தங் கிளைணமுள்
பெற்றதாய்போல் வந்த பேய்ச்சி முலையூடு உயிரை
வற்றவாங்கி யுண்டவாயாள் வதரீ வண்ங்குதுமே

இந்த ஸ்தலம் சுமார் 4 சதுர கி.மீ. அகலம் உள்ள பிரதேசமாகும். நான்கு மலைகளால் சூழப்பட்டு தெய்வீகத் தோற்றத்துடன் விளங்குகிறது. இந்த திவ்யமான ஸ்தலத்தைப்பற்றித் திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் முதல் பத்தில் 3, 4 தசகங்களில் 30 பாசுரங்களில் பாடியுள்ளார்.

இயற்கையில் அழகும் கங்கையின் சிறப்புகளையும் பத்ரிநாத சுவாமியின் அற்புத அழகையும் உருகி உணர்ந்து பாடியுள்ளார். "வயதான் காலத்தில் கோலூன்றிக் கொண்டு நடந்து இந்த இடத்திறுகுக் கஷ்டப்பட்டு வர முடியாது. எனவே உடலில் பலம் உள்ளபோதே இந்த அற்புதமான ஸ்தலத்தை வந்து சேவியுங்கள் என்கிறார். ஆலயம் செல்லும் வழி நெடுகிலும் குதித்தோடும் அருவிகள் கொள்ளை அழகு.

அருவி கொட்டும் வேகத்தைப் பயன்படுத்து அங்குள்ள மக்கள் இயந்திங்களில் விசிறி போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அரிசி, கேழ்வரகு முதலிய தானியங்களை மாவாக அரைக்கும் முறை ஆச்சர்யமாக உள்ளது. கோயிலைச் சுற்றி நிறைய சத்திரங்கள் உள்ளன. கடைத்தெருவும் உள்ளது. கோயிலின் கீழ்புறத்தில் கங்கை நதி துள்ளி துள்ளிக்குதித்து ஓடுவது அழகோ அழகு, பத்திரிநாதனை அணைத்தபடி செல்லுவது அற்புதம், ஆனால் கடிமையான குளிர் உள்ளதால் கங்கையில் கையை நனைத்தால் தேள் கொட்டுவது போல் இருக்கும்.

பக்தர்கள் குளிப்பதற்காக பத்ரிநாதனின் திருவடியின் கீழ் அமைக்கப்பட்ட அங்குல பைப்பில் இரவு பகலாக வரும் சுடி நீர் அருவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் சுடிநீர் கொட்டுவதாகச் சொல்கிறார்கள். இதைக் சுடிநீர் கேத்துவாரம் என்றே அழைக்கிறார்கள். ஒரு பக்கம் கடும் குளிருடன் கங்கை நதியும் வேறொரு இடத்தில் சுடிநீர் அருவியும் அளிக்கும் இந்த முகத்துவாரம் ஆச்சரியமான ஒன்றாகும். இயற்கையாக உற்பத்தியாகும் இந்த உஷ்ண நீருக்காக மூன்று தொட்டிகள் கட்டியுருக்கிறார்கள். இதில் மூன்றாவது தொட்டியில் குளித்தால்தான் நமக்கு திட்டமான சுடுநீர் கிடைக்கிறது. சுடும் குளீரில் அல்லல்பட்டு இந்த நீரில் குளிப்பது ஒரு புதுமையான அனுபவமாக உள்ளது. சீக்கிரம் வெளியே வர மனம் வராது.

Badrinath - image: Wikipedia

பத்ரிநாதன் சன்னதி மிகவும் சிறியது. விமானமும் சிறியதாகத்தான் உள்ளது. தற்போது திருப்பணிகள் நடந்து முடிந்து தூய்மையுடன் அழகாக உள்ளது. ஆலயத்தின் அர்ச்சகர்களாக நம்பூதிரிகள் (போத்திகள்) நியமிக்கப்பட்டுள்ளார்கள். அர்ச்சகர்கள் அனைவரும் சட்டைகோட் அணிந்து நெற்றியில் சந்தனத்தால் ஆன கோபி இட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினமும் பத்திரிநாதனுக்குத் திருமஞ்சன வைபவம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. திருமஞ்சனத்தின் போது எம்பெருமானுக்குக் கவசம் இல்லை. அதன் பிறகு கவசம் அணிவிக்கப்படுகிறது. எனவே தினமும் எம்பெருமானைக் கவசமில்லாமலும் கவசத்துடனும் தரிசிக்கலாம்.

இங்கு கடுமையான குளிர் நிலவுவதால் 5 ரூபாய் வாடகைக்குப் போர்வை வாங்கிக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் மூன்று நான்கு போர்வைகள் தேவைப்படும். கடும் குளிர், கடும் பணி, வெள்ளி மலைகள் சூழ்ந்த இந்த ஸ்தலத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கிளியான கண்டோம்
தொண்டீர் எல்லோரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந்துழாயன் மாதவன் பூதங்கள் மண்மேல்.
பண்தான் பாடி நின்றாடிப் பரத்து திரிகின்றனவே.

பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவே இந்த ஆலயத்தில் இலந்தை விருட்சம் உள்ளது. இந்தஸ்தலம் இமயமலை அடிவாரத்தில் இருந்து 23,210 அடி உயரத்தில் உள்ளது. தாயார் சன்னதி அற்புதம், அரவிந்தவல்லித் தாயார். குடிநீர் வராக தீர்த்தத்தில் இருந்து தான் கொண்டு வர வேண்டும்.

பிதுர்களுக்கு நிதி செய்யவர்கள் பிரம்ம கபாலம் என்ற இடத்தில் செய்ய வேண்டும். இந்த பிரம்ம கபாலத்தில் தான் பிண்டம் போட வேண்டும்.

அர்ச்சுனன் பத்ரிநாராயணனையும் அரவிந்த வல்லித் தாயாரையும் வண்ங்கி மறுபடியும் இருடிகேசம் வந்தான் ரிஷிகேசத்திலிருந்து வடமதுரை சென்றான்.

Badrinath temple - image: Wikipedia

தொடரும்...

அத்தியாயம் 1

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required

Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday